ஜோதிட ரகசியங்கள் பகுதி -3

ஜோதிட ரகசியங்கள்

அமைச்சராகும் யோகம்
 பத்தாம் இடத்து அதிபதி ஆட்சி, உச்சமாகி கேந்திர கோணங்களில் லக்னாதிபதியுடன் சேர்ந்து குரு, சுக்கிரன், புதன் ஆகியோரின் சுபபார்வை பெற்ற ஜாதகர் மந்திரி (பதவி) என்னும் அமைச்சராவார்.
அரசபோக வாழ்வு
குரு பகவான் 2-ம் இடத்தில் அதிபதியோடு சேர்ந்து பலப்பட்டு ஆட்சி (அல்லது) உச்சம் பெற்று ,சுப கிரக பார்வை பெற, ஜாதகர் நல்ல மனைவியுடன் சுகபோக சந்தோஷமாக அரசரைப் போல் வாழ்வார்.
 மனைவியால் நன்மை உண்டாகும் யோகம்
லாபாதிபதி 2ல் இருந்தாலும், (அல்லது) ஏழாம் இடத்திற்கு இரண்டாம் அதிபதியின் சம்பந்தம் ஏற்பட்டாலும், மனைவியால் செல்வத்தை பெற்று நன்மை அடைவார்.
 மனைவி உத்தியோகம் பெரும் அமைப்பு
ஒருவரின் ஜாதகத்தில் 8ம் இடத்து அதிபதியும் (அல்லது) 8ம் இடமும் ஆட்சி உச்சம் பெருமானால், அவர் மனைவியின் உதவியாள் வசதி வாய்ப்பாக வாழ்வார்.
ஜோதிட ரகசியங்கள்
 ஆண் குழந்தை பாக்கியம் பெரும் அமைப்பு
துலாம் என்னும் ஆண் ராசியில், அதுவே லக்னமாகவும் இருந்து, லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி பெற்றக் கிரகங்கள் இருந்தால், அந்த ஜாதகருக்கு ஆண் குழந்தைகளே பிறக்கும்.
 பெண் குழந்தை பாக்கியம் பெரும் அமைப்பு
பெண் ராசியான ரிஷபம் லக்னமாகி ஐந்தாம் இடத்து அதிபதி பெண் ராசிகளான கடகம், கன்னி, விருச்சகம், மகரம், மீனம் போன்ற இடங்களில் ராசியில் இருந்தாலும் (அல்லது) நவாம்சத்தில் இருந்தாலும் அந்த ஜாதகருக்கு பெண் குழந்தை பாக்கியமே கிடைக்கும்.
அன்புடைய மக்கள் செல்வம் பெரும் அமைப்பு
9,11-ம் அதிபதிகள் ராகுவுடன் சேர்ந்து ஐந்தாம் இடத்தில் இருந்தாலும், 4,5-ம் அதிபதிகள், கூடி கடகத்தில் இருந்தாலும், சந்திரன், சூரியன் கூடி லக்னத்தில் இருந்து, அதில் ஒரு கிரகம் ஆட்சி ,உச்சம் பெறுவதும் 2,7ம் அதிபதிகள் சேர்ந்து 4-ல் இருப்பதும், 7-ம் இடத்தில் லக்னாதிபதி இருப்பதும்.
சொந்த வீடு இல்லாத நிலை
 மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியவற்றில் ஒன்று 4-ம் இடமாக அமைந்து, அதில் பாவ கிரகங்கள் இருந்து 8க்கு உடையவன் 5ம் இடத்திலோ (அல்லது) பார்த்தாலோ அந்த ஜாதகருக்கு சொந்த வீடு அமையும் யோகம் இருக்காது.
தொட்டதெல்லாம் தோல்வியாகும் அமைப்பு
11ம் அதிபதி 6, 8, 12 இல் இருந்தாலும், 1,8ம் அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றாலும், 2ம் அதிபதி சந்திரனுக்கு 6ல் இருந்தாலும், 3, 11ம் அதிபதிகள் 12ல் இருந்தாலும், அதை சனி பார்த்தாலும் அனைத்திலும் ஜாதகர் தோல்வியே அடைவார்.
ஜோதிட ரகசியங்கள்
 அரசியல் தலைவராகும் அமைப்பு
 சூரியனுடன் ஆட்சி, உச்சம் பெற்ற கிரகங்கள் இருப்பதும், 1,4,5ம் அதிபதிகள் பலம் பெற்று 9-ல் இருப்பதும், சந்திரன் உச்சம் (அல்லது) வர்கோத்தமம் பெற்று 4 கிரகங்களால் பார்க்கப்படுவதும், சூரியனுடன் புதன், சுக்கிரன் யாராவது ஒருவர் சம்பந்தம் பெறுவதும், ராகுவிற்கு 12 சந்திரன் இருப்பதும், சந்திரனை குரு பார்ப்பது ஆகிய அமைப்புகள் ஒரு ஜாதகத்தில் காணப்பட்டால், அவர் நிச்சயம் மிகச்சிறந்த அரசியல் தலைவராக இருப்பார்.
 நேர்மையாளர்
2,7க்கு உடையவர்கள் 4ல் இருந்தாலும், 4ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்று சுபர் பார்வை இருந்தால், அந்த ஜாதகர் நேர்மை தவறாத நீதிமானாக இருப்பார்.
மளிகை கடை நடத்தும் அமைப்பு
 7ம் அதிபதி செவ்வாயாக அமைந்து, 4லிருந்து அவரை 11, 12-ம் அதிபதிகள் பார்ப்பதாலும், 4+8 அதிபதிகள் கூடி 8ல் இருந்தாலும், 4+7 அதிபதிகள் கூடி 12ல் இருந்தாலும், 12-ம் அதிபதி 2-ல் இருந்தாலும் இந்த அமைப்பில் இருக்கும் ஜாதகர் நவதானிய பொருட்களை விற்பனை செய்யும் அமைப்பை பெறுவார்.
இளமையிலேயே துன்பம் ஏற்படும் அமைப்பு
2,9ம் அதிபதிகள் கேந்திரம் பெற்று லக்னாதிபதியால் பார்க்கப்பட்டால், சுமார் 23 வயது வரை கஷ்டங்களை அனுபவித்து பின் சுகம் அடைவார்.
தாமதத்தால் புகழ் பெறும் அமைப்பு
2-ம் அதிபதி சந்திரனுக்கு 12ல் , 7-ம் அதிபதி ,9-ம் அதிபதியும் குருவும் திரிகோணம் பெற்றாலும், குரு 11-ல் இருக்கவும் 11 ஆம் அதிபதி ராகு உடன் சேர்ந்து 4ல் இருந்தாலும் அந்த ஜாதகர் தர்மம் செய்தே புகழ் பெறுவார்.
 கடன் பட்டு கலங்கும் அமைப்பு
 5-ம் அதிபதி லக்னத்தில் இருந்தாலும், நான்காம் இடத்தில் இருந்தாலும் தன் குடும்பத்திற்காகவே கடன் பெறுவார். 12-ம் அதிபதி 2 லிருந்தும் 2ம் அதிபதி 6லிருந்தும், 9-ம் அதிபதி பலமற்று இருந்தாலும்,6-ம் அதிபதி உச்சம் பெற, 9-ம் அதிபதி பனிரெண்டில் இருந்தாலும், குருவிற்கு 6ம் அதிபதியின் பார்வைபட்டால் அந்த ஜாதகர் கடன் தொல்லையால் என்றுமே சிரமப்படுவார்.
 பதவி யோகம்- அரசு பதவி பெறும் அமைப்பு
சனியும் செவ்வாயும் சேர்ந்து தீய கிரகங்களின் சம்மந்தத்துடன் துலாத்தில் இருந்தால், அந்த ஜாதகர் புகழ்பெற்ற உயர் அரசு அதிகாரியாக இருப்பார். செவ்வாய் மிதுனத்தில் இருந்து, குரு ஆட்சி பெற்று பார்வை பெற்றால் ஜாதகருக்கு அரசு அதிகாரியாகும் யோகம் வரும்.
தரித்திர யோகம்
தரித்திர யோகம் சந்திரனுக்கு 8ல் பாவிகள் நிற்பதும், சந்திரனுக்கு 3, 12ல் பாவிகள் நிற்பதும் தரித்திர யோகம் ஆகும்.
 இருதார யோகம்
ஏழாம் இடத்து அதிபதியுடன் அசுப கிரகங்கள் சேர்ந்திருந்தாலும் அந்த ஜாதகருக்கு இளையதார யோகம் உண்டாகும்.
 வாத்திய கலைஞராகும் அமைப்பு
11-ம் இடத்து அதிபதி குருவோடு சேர்ந்து இருந்தும், சுக்கிரன் 12ஆம் இடத்தில் இருந்த ஜாதகர் சங்கீத இசைக் கருவிகளை இயக்குவதில் வல்லவராய் திகழ்வார்.
கவிஞர் ஆகும் அமைப்பு
11-ம் இடத்தில் புதன் இருந்தாலும், பதினோராம் இடத்தை புதன் ஆட்சி உச்சம் பெற்று பார்த்தாலும் அந்த ஜாதகர் கவிஞராய் நல்ல எழுத்தாற்றல் மிக்கவராய் திகழ்வார்.
 சொத்தை அரசுக்கு பறிகொடுக்கும் அமைப்பு
 செவ்வாயும் சனியும் சேர்ந்து லக்னத்தில் இருந்து, ஆறாம் அதிபதி இரண்டிலிருந்தும், சந்திரனும், குருவும் சேர்ந்த மகரத்தில் இருக்கும் ஜாதகரின் சொத்துக்கள் அனைத்தும் கடனுக்காகவே அரசின் பறிமுதல் மூலம் போய்விடும்
 தெய்வ அருள் பெற்ற செல்வந்தர்
 சூரியனும், சுக்கிரனும் சேர்ந்து 2ம் இடத்தில் இருக்கும் அமைப்புடைய ஜாதகருக்கு தெய்வ அருளால் பெரும் செல்வங்கள் கிடைக்க பெற்று சிறப்பு பெறுவார். 

இன்றைய ராசி பலன் -08.02.2023

இன்றைய ராசி பலன் – 8.2.2024

மேஷம்
பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் இருக்கும். உறவினர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் லாபம் பெருகும்.
ரிஷபம்
எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். புதிய முயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படக்கூடும். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். உங்கள் ராசிக்கு பகல் 10.40 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. மதியத்திற்கு பின் மனகுழப்பம் குறையும்.
மிதுனம்
பகல் 10.40 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். பிறரை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது உத்தமம். வெளி இடங்களில் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இன்றைய ராசி கட்டம்

இன்றைய பஞ்சாங்கம்
கடகம்
குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். விரும்பிய பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும்.
சிம்மம்
குடும்பத்தில் உறவினர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறைந்து சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வேலையில் உடன் இருப்பவர்களால் அனுகூலம் கிட்டும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் ஏற்படும். வருமானம் சிறப்பாக இருக்கும்.
கன்னி
நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதற்கு தடங்கல்கள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற மனஸ்தாபம் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கொடுத்த கடன் வசூலாகும்.
துலாம்
திடீர் தனவரவுகள் உண்டாகும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சிலருக்கு பிள்ளைகள் வழியில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபார ரீதியான பயணங்களால் லாபகரமான பலன்கள் கிடைக்கும்.
விருச்சிகம்
வியத்தகு செய்திகள் வந்து சேரும். திருமண பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் அதிக லாபங்கள் கிடைக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். பயணங்களில் புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். வருமானம் பெருகும். பொன் பொருள் சேரும்.
தனுசு
எதிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நிலவும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.
மகரம்
பொருளாதார நிலை சற்று சுமாராக இருக்கும். பிள்ளைகள் வகையில் சுபசெலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் சற்று கவனம் தேவை. குடும்பத்தில் பெண்கள் வகையில் அனுகூலங்கள் உண்டாகும்.
கும்பம்
பொருளாதார நிலை சுமாராக இருக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் செலவுகளும் அதிகரிக்கும். எடுத்த காரியம் நிறைவேற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் ஆதரவு கிட்டும். கடன் பிரச்சினைகள் ஓரளவு தீரும்.
மீனம்
உறவினர்களால் அனுகூலம் கிட்டும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் ஏற்படும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கடன்கள் குறையும். வருமானம் அதிகரிக்கும்.

இன்றைய பஞ்சாங்கம்-8.2.2024

தமிழ் தேதி தை -25,வியாழன்
ஆங்கில தேதி பிப்ரவரி -08
திதி திரயோதசி பகல் 11.17 மணி வரை
யோகம் சித்தி
கரணம் வணிசை
நட்சத்திரம் உத்திராடம் இரவு 2.14 மணி வரை
வார சூலை தெற்கு
சந்திராஷ்டம ராசி ரிஷபம்
ராகு காலம் 2.00PM -3.28 PM
எமகண்டம் 6.39AM -8.07AM
நல்ல நேரம் -காலை 9.00AM -10..00AM
நல்ல நேரம் -பிற்பகல் 1.41PM -2.00PM ,5.11PM -7.11PM
நல்ல நேரம் -இரவு 8.41PM -9.41PM
இன்றைய சிறப்புகள் மாத சிவராத்திரி ,முகூர்த்த நாள்

திவ்ய தேசம் 50:திரு நிலாத்திங்கள் துண்டாம் (காஞ்சி)

திரு நிலாத்திங்கள் துண்டாம்

விஷ்ணுவுக்கும் சிவபெருமானுக்கும் வேறுபாடு எதுவுமில்லை. நாம் தான் வித்தியாசமாக பார்க்கிறோம் என்பதை திருமாலே மெய்ப்பித்து காட்டிய சம்பவங்கள் எத்தனையோ உண்டு. சிவபெருமானுடைய மனைவி பார்வதி தேவியை தனது தங்கையாக ஏற்றுக் கொண்ட திருமால் என்ன என்ன வகையில் உதவி செய்திருக்கிறார் என்பது ஒரு பெரிய வரலாறு.

அதன் ஒரே சம்பவத்தை மாத்திரம் இந்த காஞ்சிபுரம் மண்ணில் மிகவும் அற்புதமாக ‘திரு நிலாத்திங்கள் துண்டாம்’ கோயிலில் காணலாம். இந்த கோயில் காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலின் உட்பிரகாரத்தில் இருப்பதுதான் மிகப்பெரிய சிறப்பு.

திரு நிலாத்திங்கள் துண்டாம்
மூலவர்நிலா திங்கள் துண்டத்தான்,நின்ற திருக்கோலம்
விமானம்புருஷ சூத்கம்
தாயார்வல்லித் தாயார்
தீர்த்தம் சந்திர புஷ்கரணி

சிவபெருமானுக்குரியப் பெருமையை பறைசாற்றும் விதத்தில் திருமாலே இந்த திருத்தலத்திற்கு வந்ததாக ஒரு தலபுராணம் உண்டு.

இன்னொரு தலபுராணம் இது, திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்தெடுக்கும் பொழுது தனக்கு ஏற்பட்ட வெப்பத்தை நீக்குவதற்காக பிரம்மனை நோக்கி திருமால் பிரார்த்தனை செய்தார். அமிர்த கடல் வெப்பம் நீங்க வேண்டுமானால் காஞ்சியில் உள்ள சிவபெருமான் குடி கொண்டிருக்கும் ஏகாம்பரநாதன் திருக்கோயிலுக்கு சென்று சிவபெருமானை வணங்கினால் போதும் என்று பிரம்மன் வழிகாட்ட திருமால் இந்த கோயிலில் வந்து தவம் செய்தார்.

சிவபெருமான் தலையில் இருக்கும் சந்திர ஒளி திருமால் மீது பட்டதும் திருமாலுக்கு வெப்பம் நீங்கியது. இதனால் பெருமாளுக்கு ‘நிலாத்திங்கள் துண்ட பெருமாள்‘ என்ற பெயர் வழங்கலாயிற்று.

சிவபெருமானின் சடையில் அணிந்துள்ள பிறை துண்டத்தின் குளிர்ந்த ஒளி திருமாலின் மீது பட்டதால் திருமாலின் நோய் தீர்ந்தது, அதனால் தான் நிலாத்திங்கள் துண்ட பெருமாள் என்ற பெயர் ஏற்பட்டதாக இன்னொரு செய்தி. ஒரு மாமரத்தின் கீழே பார்வதி தவம் செய்யும் பொழுது இந்த தவத்தை சோதிக்க சிவன் அந்த மாமரத்தை எரித்ததாகவும், அப்பொழுது பெருமாள் தனது அமிர்த கிரகணங்களைக் கொண்டு எரிந்து போன மாமரத்தை தழைக்கச் செய்து குளிர்ச்சியை உண்டு பண்ணியதாகவும் மற்றொரு வரலாறு.

இந்தக் கோயிலில் பார்வதியின் அருகே வாமனர் இருக்கிறார். அந்த வாமனர் தான் மாமரத்தை தழைக்க வைத்த பெருமாள் என்று புராணச் செய்தி கூறுகிறது.

பரிகாரம்

கோபத்தால் செய்த பஞ்ச மகா பாவங்கள் எதுவாக இருந்தாலும், அத்தகைய பாவங்களைப் போக்க இந்த திருத்தலத்திற்கு வந்து பெருமாளை சேவித்தால் போதும். அத்தகைய பாவங்கள் விலகிவிடும். அது மட்டுமல்ல நெருப்பினால் எந்த வகையான ஆபத்து ஏற்படாமல் இருக்கவும், பொருள் நஷ்டம், வியாபார நஷ்டம் ஏற்படாமல் தடுக்கவும், பெரியவர்கள், பெரும் பதவியில் இருப்பவர்களின் கோபத்திற்கு ஆளாகி பாதிக்கப்பட்டிருந்தால் அந்த பாதிப்பு நீங்கவும், ‘கெமிக்கல்’ விஷம் சம்பந்தமான நோயினால் திண்டாடிக் கொண்டிருப்பவர்கள் அதிலிருந்து விலகவும் இங்குள்ள பெருமாளை வேண்டி பிரார்த்தனை செய்தாலே போதும் புண்ணியவானாக மாறிவிடலாம்.

கோவில் இருப்பிடம்  

இன்றைய ராசி பலன் -07.02.2023

இன்றைய ராசி பலன் – 7.2.2024

மேஷம்
குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் வழியாக நல்லது நடக்கும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் வெளிவட்டார நட்பு கிடைக்கும். உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில் எதிரிகளின் தொல்லைகள் குறையும். பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும்.
ரிஷபம்
சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் தடை தாமதங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது உத்தமம். சுப காரிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.
மிதுனம்
குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும். புத்திர வழியில் நல்ல செய்தி கிடைக்கும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். சுபகாரியங்கள் கைகூடும். சிலருக்கு தொழில் ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும்.

இன்றைய ராசி கட்டம்

இன்றைய பஞ்சாங்கம்
கடகம்
உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்துடன் செயல்படுவார்கள். பிள்ளைகள் பெற்றோரின் நன்மதிப்பை பெறுவார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் கடன் பிரச்சினை தீரும். சொத்து சம்பந்தபட்ட வழக்குகளில் வெற்றி வாய்ப்புகள் கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.
சிம்மம்
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். நண்பர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் மன நிம்மதியை தரும்.
கன்னி
தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சலும் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். முன்கோபத்தால் வேலையில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். விட்டு கொடுத்து செல்வது நல்லது. நண்பர்களால் ஆதாயம் கிட்டும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
துலாம்
உடல்நிலை மிக சிறப்பாக அமையும். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். புதிய நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகத்தில் சிலருக்கு மேலதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.
விருச்சிகம்
சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும்.
தனுசு
வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.
மகரம்
குடும்பத்தில் ஒற்றுமை குறையும். பொருளாதார நெருக்கடிகளால் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். வீண் செலவுகளை குறைப்பது நல்லது. புதிய கூட்டாளி சேர்க்கையால் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும்.
கும்பம்
குடும்பத்தில் பிரச்சினைகள் குறைந்து நிம்மதி ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க கூடும். உடன்பிறந்தவர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். தொழில் ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கடன்கள் ஓரளவு குறையும்.
மீனம்
காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். உங்கள் பிரச்சினைகள் தீர உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.

இன்றைய பஞ்சாங்கம்-7.2.2024

தமிழ் தேதி தை -24,புதன்
ஆங்கில தேதி பிப்ரவரி -07
திதி துவாதசி பகல் 2.2 மணி வரை
யோகம் வஜ்ரம்
கரணம் தைதுளை
நட்சத்திரம் பூரம் காலை 4.37 மணி வரை பின் உத்திரம்
வார சூலை வடக்கு
சந்திராஷ்டம ராசி ரிஷபம்
ராகு காலம் 12.31PM -2.01PM
எமகண்டம் 8.07AM -9.35AM
நல்ல நேரம் -காலை 9.42AM -10.042AM
நல்ல நேரம் -பிற்பகல் 2.12PM -3.42PM ,4.42PM -5.42PM
நல்ல நேரம் -இரவு 7.42PM -8.42PM
இன்றைய சிறப்புகள் பிரதோஷம்

ஜோதிடம் : சூரியன் ,சந்திரன் ,புதன் ஆகிய கிரகங்கள் சேர்ந்து எந்த பாவத்தில் இருந்தால் என்ன நடக்கும் ?

சூரியன், சந்திரன், புதன் லக்னத்தில் இருந்தால், ஜாதகருக்கு நல்ல பேச்சாற்றல் இருக்கும். நன்கு படித்தவராக இருப்பார். பெயர், புகழ் இருக்கும். விவாதம் புரிவதில் வல்லவராக இருப்பார். பல கலைகள் அறிந்தவராக இருப்பார். வாழ்க்கையின் பிற்பகுதி சந்தோசமாக இருக்கும்.

சூரியன், சந்திரன், புதன் இரண்டாம் பாவத்தில் இருந்தால். ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். சிலர் மருத்துவராக இருப்பார்கள். கண்ணில் நோய் இருக்கும். நல்ல பண வசதி இருக்கும். ஜாதகர் சூழலுக்கு ஏற்றபடி பேசுபவராக இருப்பார். தைரியசாலியாக இருப்பார். 

சூரியன், சந்திரன், புதன் மூன்றாம் பாவத்தில் இருந்தால் ஜாதகருக்கு துணிச்சல் குணம் இருக்கும். கடுமையாக உழைத்து பணத்தை சம்பாதிப்பார். சுய முயற்சியால் முன்னுக்கு வருவார். பகைவர்கள் அதிகமாக இருப்பார்கள். பெயர், புகழ் இருக்கும். ஜாதகர் பல கலைகளை கற்றவராக இருப்பார்.

சூரியன், சந்திரன் புதன் நான்காம் பாவத்தில் இருந்தால் ஜாதகர் தைரியமானவராக இருப்பார். பெற்றோரால் சந்தோஷம் இருக்கும்.சிலருக்கு குடும்பத்தில் இருப்பவர்களே துரோகம் செய்வார்கள்.சொத்தை அபகரிக்க முயற்சிப்பார்கள். சிலர் கலைத்துறையில் வித்தகர்களாக இருப்பார்கள். சிலர் கைத்தொழிலில் திறமை வாய்ந்தவர்களாக இருப்பார்கள். சிலர் நன்கு படித்தவர்களாக இருப்பார்கள். வாரிசுகளால் சந்தோஷமிருக்கும். கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும்.

 சூரியன், சந்திரன், புதன் ஐந்தாம் பாவத்தில் இருந்தால் ஜாதகர் நல்ல அரசாங்க அதிகாரியாக இருப்பார். நிறைய படித்தவராக இருப்பார். ஒரு வாரிசு இருக்கும். பெண்ணுக்கு உஷ்ணம் இருக்கும். சிலருக்கு வயிற்றில் புண் இருக்கும். ஜாதகருக்கு குடும்பத்தில் மரியாதை இருக்கும். அவர் கடுமையான உழைப்பாளியாக இருப்பார்.

சூரியன்

சூரியன், சந்திரன், புதன் ஆறாம் பாவத்தில் இருந்தால் ஜாதகர் சூழலுக்கு ஏற்றபடி செயல்படுவார். மற்றவர்களிடம் எப்படி பழக வேண்டும் என்பதை தெரிந்தவராக இருப்பார். பல வியாபாரங்களில் ஈடுபடுவார். ஒரே தொழிலில் நிரந்தரமாக இருக்க மாட்டார். பகைவர்களை வெல்வார். அன்னைக்கு உடல் நல பாதிப்பு இருக்கும். சிலருக்கு சிறுநீரக பாதிப்பு இருக்கும்.

சூரியன், சந்திரன், புதன் ஏழாம் பாவத்தில் இருந்தால் ஜாதகரின் மனைவி அழகாக இருப்பாள். சிலருக்கு திருமண தடை இருக்கும். ஜாதகர் கடுமையான உழைப்பாளியாக இருப்பார். சிலருக்கு கோப குணம் இருக்கும். சிலருக்கு ரத்த அழுத்தம் இருக்கும்.

சூரியன், சந்திரன், புதன் எட்டாம் பாவத்தில் இருந்தால் வாழ்க்கையின் முன் பகுதியில் பிரச்சனை இருக்கும். நோய்களின் பாதிப்பு இருக்கும். எட்டு வயது வரை அடிக்கடி மருத்துவரை பார்க்க வேண்டியதாக இருக்கும். சிலருக்கு முன்கூட்டியே சில விஷயங்களை தெரிந்து கொள்ளும் ஆற்றல் இருக்கும். சிலருக்கு அதிகமான கனவுகள் வரும். சிலருக்கு நீரால் விபத்து இருக்கும்.

சூரியன், சந்திரன், புதன் ஒன்பதாம் பாவத்தில் இருந்தால் பெயர், புகழ் இருக்கும். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். ஜாதகர் சுய முயற்சியால் குடும்பத்தை காப்பாற்றுவார். சிலர் தேவையற்றதை பேசுவார்கள். அதன் காரணமாக எதிரிகள் உண்டாவார்கள்.

சூரியன், சந்திரன், புதன் பத்தாம் பாவத்தில் இருந்தால் ஜாதகர் புகழ்பெற்ற மருத்துவராகவோ, விஞ்ஞானியாகவோ, நல்ல அரசாங்க அதிகாரியாகவோ இருப்பார். நிறைய பணத்தை சம்பாதிப்பார். திறமைசாலியாக இருப்பார். 36 வயதுக்கு பிறகு வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

சூரியன், சந்திரன், புதன் பதினோராம் பாவத்திலிருந்தால் ஜாதகர் நன்கு சம்பாதிப்பார். தைரிய குணம் இருக்கும். சூழலை பார்த்து பேசுவார். பயணம் செய்து நிறைய மனிதர்களை சந்திப்பார். அவர்களிடம் தன் திறமையை வெளிப்படுத்துவார். அதன் மூலம் பணத்தை சம்பாதிப்பார். நிறைய படித்தவராக இருப்பார். வயிற்றில் பிரச்சனை இருக்கும்.

சூரியன், சந்திரன் புதன் 12ஆம் பாவத்தில் இருந்தால், திருமண தடை இருக்கும். பெயர், புகழ் இருக்கும். தூக்கம் சரியாக வராது. வயிற்றில் பிரச்சனை இருக்கும். சிலரின் தந்தைக்கு உடல்நல பாதிப்பு இருக்கும். சிலர் வெளியூர்களில் சென்று தொழில் செய்வார்கள். சிலருக்கு தலைவலி இருக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும்.

இன்றைய ராசி பலன் -06.02.2023

இன்றைய ராசி பலன் – 6.2.2024

மேஷம்
மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றாலும் செலவுகள் அதிகரிக்கும். ஆடம்பர பொருட்களால் கையிருப்பு குறையும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.
ரிஷபம்
உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். மற்றவர்கள் மிது தேவையில்லாத கோபம் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சுபகாரியங்களையும் புதிய முயற்சிகளையும் சற்று தள்ளி வைப்பது நல்லது.
மிதுனம்
எந்த செயலையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டம் நீங்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். வருமானம் பெருகும்.

இன்றைய ராசி கட்டம்

இன்றைய பஞ்சாங்கம்
கடகம்
எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் அமைதி இருக்கும். தொழில் சம்பந்தபட்ட வழக்குகளில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். புதிய பொருள் சேரும்.
சிம்மம்
குடும்பத்தில் வீண் செலவுகளால் பணப்பிரச்சினை ஏற்படலாம். மற்றவர்களை நம்பி பணமோ பொருளோ கொடுக்காமல் இருப்பது நல்லது. எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதில் சற்று தாமதம் உண்டாகும். தொழில் ரீதியான புதிய முயற்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.
கன்னி
உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படலாம். பிள்ளைகளால் வீண் விரயங்கள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலப் பலன்கள் கிட்டும்.
துலாம்
பொருளாதார ரிதீயாக அனுகூலம் ஏற்படும். உறவினர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். அலுவலகத்தில் வேலைபளு குறையும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வியாபார ரீதியாக உங்கள் முயற்சிகள் வெற்றி பெற்று மன நிம்மதி ஏற்படும்.
விருச்சிகம்
குடும்பத்தில் நிம்மதி இல்லாத சூழ்நிலை உண்டாகும். பெற்றோருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.
தனுசு
வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.
மகரம்
பிள்ளைகளால் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் வீண் விரயங்கள் உண்டாகும். அயராத உழைப்பால் எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பொறுப்புடன் செயல்பட்டால் வியாபாரத்தில் லாபங்களை அடைய முடியும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.
கும்பம்
எந்த ஒரு செயலையும் நம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். பெரிய மனிதர்களுடன் நட்பு ஏற்படும். நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். கணவன் மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமை கூடும். வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும்.
மீனம்
பிள்ளைகளால் அனுகூலம் கிட்டும். உடன்பிறந்தவர்களிடம் ஒற்றுமை கூடும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.

இன்றைய பஞ்சாங்கம்-6.2.2024

தமிழ் தேதி தை -23,செவ்வாய்
ஆங்கில தேதி பிப்ரவரி -06
திதி ஏகாதசி மாலை04.7 மணி வரை பின் துவாதசி
யோகம் வ்யாகாதம் /ஹர்ஷணம்
கரணம் பாலவம்
நட்சத்திரம் காலை 7.35 வரை கேட்டை பின் மூலம்
வார சூலை வடக்கு
சந்திராஷ்டம ராசி மேஷம்
ராகு காலம் 3.28PM -4.56PM
எமகண்டம் 9.35AM -11.03AM
நல்ல நேரம் -காலை 11.12AM -11.42AM
நல்ல நேரம் -பிற்பகல் 12.42PM -1.42PM ,5.12PM -6.42PM
நல்ல நேரம் -இரவு 7.42PM -8.42
இன்றைய சிறப்புகள் ஸபலா ஏகாதசி

இன்றைய ராசி பலன் -05.02.2023

இன்றைய ராசி பலன் -4.2.2024

மேஷம்
மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது உத்தமம்.
ரிஷபம்
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். உடன்பிறந்தவர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். கொடுத்த கடன்கள் இன்று வசூலாகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
மிதுனம்
பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். நண்பர்கள் தேவையறிந்து உதவுவார்கள். வியாபாரத்தில் உங்கள் புகழ் மேலோங்கும். சிலருக்கு உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும்.

இன்றைய ராசி கட்டம்

image 6 இன்றைய ராசி பலன் -05.02.2023
கடகம்
உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஈடுபாடு குறையக்கூடும். சுபமுயற்சிகளில் தடங்கல்கள் உண்டாகலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை தரும்.
சிம்மம்
குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். பிள்ளைகள் வழியில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு கிட்டும்.
கன்னி
குடும்பத்தில் திடீர் தனவரவுகள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் லாபம் கிட்டும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
துலாம்
குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலம் உண்டாகும். வேலையில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிட்டும்.
விருச்சிகம்
நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். குடும்பத்துடன் தூர பயணம் செல்ல நேரிடும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள்.
தனுசு
உங்களுக்கு எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் கூட காலதாமதமாகும். தேவையில்லாத செலவுகளால் கையிருப்பு குறையும். பணபற்றாக்குறை சமாளிக்க சிக்கனமுடன் செயல்பட வேண்டும். அனுபவமுள்ள பெரியவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் பல புதிய மாற்றங்கள் உண்டாகும்.
மகரம்
உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள். கடன் பிரச்சினைகள் குறையும். சேமிப்பு உயரும்.
கும்பம்
நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.
மீனம்
தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். எதிர்பார்த்த பணவரவுகளில் சிறு இடையூறுகள் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் ஏற்படும். பெரியவர்களின் ஆதரவால் அனுகூலங்கள் உண்டாகும்.

இன்றைய பஞ்சாங்கம்-5.2.2024

தமிழ் தேதி தை -22,திங்கள்
ஆங்கில தேதி பிப்ரவரி -05
திதி தசமி மாலை 5.25 மணி வரை பின் ஏகாதசி
யோகம் துருவம்
கரணம் வணிசை
நட்சத்திரம் அனுஷம் காலை 7.53 வரை பின் கேட்டை
வார சூலை கிழக்கு
சந்திராஷ்டம ராசி மேஷம்
ராகு காலம் காலை 8.8 மணி முதல் 9.36 வரை
எமகண்டம் பகல் 11.04-12.32 மணி வரை
நல்ல நேரம் -காலை 6.42-7.42
நல்ல நேரம் -பிற்பகல் 12.42-2.42
நல்ல நேரம் -இரவு 6.42-9.42
இன்றைய சிறப்புகள்

பரிகாரம் : தீராத கடன் பிரச்சினையை தீர்க்கும் எளிய பரிகாரம் !!

தீராத கடன் பிரச்சினையை தீர்க்கும் எளிய பரிகாரம்

கடன் இல்லாத வாழ்க்கையை நாமும் வாழத்தான் ஆசைப்படுகிறோம். ஆனால் என்ன செய்வது, அக்கடன் வாங்க கூடாது என்று நினைத்தால் கூட தவிர்க்க முடியாத சில பண தேவைகளுக்காக கடன் வாங்கி விடுகிறோம். கடன் வாங்கிய பிறகு அதனை அடைக்க முடியாமல் அவதிப்படுகிறோம். மேலும் சில வீடுகளில் கடன் குறையாமல் அதிகரித்துக் கொண்டே இருக்கும். இதனால் குடும்பத்தில் சந்தோஷம் என்பதே இருக்காது. எனவே கடனை தீர்க்கக் கூடிய பல பரிகாரங்கள் ஆன்மிகத்தில் உள்ளது. அவற்றில் ஒரு பரிகாரத்தை பற்றி தான் இப்பதிவில் பார்க்கப் போகிறோம்.

வீட்டில் கடன் பிரச்சனை தீர்ந்து குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாக திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வரவேண்டும். ஏனென்றால் கலிகாலத்தில் கண்கண்ட தெய்வம் முருகப்பெருமான். இவரை நாம் வழிபடும்போது நம் வீட்டில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
 தீராத கடன் பிரச்சினையை தீர்க்கும் எளிய பரிகாரம்

கடன் பிரச்சனையை தீர்க்கும் முருகப்பெருமானை வழிபடக்கூடிய ஒரு பரிகாரம் ஒன்றினை பற்றி பார்க்கலாம். இப்ப பரிகாரம் செய்ய தேவையான முக்கியமான பொருள் “செவ்வரளி பூ”

இந்த பூவினை வாங்கி உங்கள் கையால் மாலையாக கட்டி ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் முருகப்பெருமானின் படத்திற்கு போட்டு வழிபட வேண்டும். கழுத்தை நெரிக்கும் கடனும் எளிதில் காணாமல் போய்விடும். இந்த பரிகாரத்தை செய்தால் அதாவது பூஜை அறையில் உள்ள முருகப்பெருமானின் உருவப்படத்திற்கு செவ்வரளி மாலை போட்டு மண் அகல் விளக்கில் நெய்திபம் ஏற்றி உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனை அனைத்தும் எளிதில் நீங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.

இந்த பரிகாரத்தை தொடர்ந்து 27 செவ்வாய்க்கிழமை செய்து வர வேண்டும். முக்கியமாக காலை 6 மணி முதல் 7 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்து முடிக்க வேண்டும்.

பெண்கள் மாதவிடாய் காலத்தில் வீட்டில் உள்ள மற்றவர்கள் இந்த பரிகாரத்தை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு நீங்கள் தொடர்ந்து இருபத்தி ஏழு செவ்வாய்க்கிழமை இந்த பரிகாரத்தை செய்து வருவதன் மூலம் உங்கள் கடன் பிரச்சனை குறைந்து வருவதை நீங்களே பார்க்கலாம். 

ராசி பலன் : இன்றைய ராசி பலன் -04.02.2023

இன்றைய ராசி பலன் -4.2.2024

மேஷம்
சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். தூர பயணங்களில் கவனம் தேவை.
ரிஷபம்
இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன் கிட்டும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு மேலோங்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
மிதுனம்
உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணப்பிரச்சினை குறையும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியங்கள் கைகூடும்

இன்றைய ராசி கட்டம்

இன்றைய ராசி பலன்
கடகம்
எடுத்த காரியம் வெற்றி பெற சற்று கூடுதல் முயற்சி தேவை. குடும்பத்தினருடன் மாற்று கருத்துக்கள் ஏற்படலாம். தெய்வீக காரியங்கள் செய்து ஆனந்தம் அடைவீர்கள். தொழிலில் ஏற்பட்ட புதிய மாற்றங்களால் லாபம் பெருகும். பெரிய மனிதர்களின் சந்திப்பால் அனுகூலம் உண்டாகும்.
சிம்மம்
வெளியூர் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் ஏற்படலாம். எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன் வாங்கும் நிலை உருவாகும். மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய மாற்றங்களை செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம்.
கன்னி
எந்த செயலையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை சேரும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பழைய கடன்கள் வசூலாகும்.
துலாம்
உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளுக்கு பெற்றோரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். கையிருப்பு சற்று குறையும்.
விருச்சிகம்
குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பணவரவு தாராளமாக இருப்பதால் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். கூட்டாளிகளுடன் பேச்சுவார்த்தைகளில் அனுகூலப்பலன் கிட்டும். வேலையில் சிலருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும்.
தனுசு
பணவரவு சுமாராக இருக்கும். வாகனங்களால் விரயங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய கடின உழைப்பு தேவை. நண்பர்களால் அனுகூலம் கிட்டும். வேலையில் அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.
மகரம்
குடும்பத்தில் அமைதி நிலவும். பெரியவர்களோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை தரும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
கும்பம்
குடும்பத்தில் சுபகாரியங்கள் எளிதில் நடைபெறும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உடல் நலம் சீராக இருக்கும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். வேலையில் சக ஊழியர்கள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள்.
மீனம்
உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடை தாமதங்கள் உண்டாகலாம். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.

இன்றைய பஞ்சாங்க குறிப்புகள்

தமிழ் தேதி தை -21,ஞாயிறு
ஆங்கில தேதி பிப்ரவரி -04
திதி நவமி மாலை 5.50 மணி வரை
யோகம் விருத்தி
கரணம் கரசை
நட்சத்திரம் விசாகம் காலை 7.20 மணி வரை
வார சூலை மேற்கு
சந்திராஷ்டம ராசி மீனம்
ராகு காலம் மாலை 4.55-6.23 மணி வரை
எமகண்டம் பகல் 12.32 -1.59 மணி வரை
நல்ல நேரம் -காலை
நல்ல நேரம் -பிற்பகல் 2.42-4.55 மணி வரை
நல்ல நேரம் -இரவு 9.42-12.42 மணி வரை
இன்றைய சிறப்புகள் அசுப நாள் ,சுபகாரியங்கள் தவிர்க்கப்பட வேண்டும்

திவ்ய தேசம் 49:ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தோர்க்கான ஆயுட்கால வழிபாட்டு தலம் -திருப்பாடகம்

அருள்மிகு பாண்டவ தூத பெருமாள்

காஞ்சிபுரக் கோயில்கள் அத்தனைக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புண்டு. திருமால் பலமுறை பக்தர்களுக்கு நேரிடையாகக் காட்சி தந்த புண்ணிய பூமி யமுனைக் கரையிலிருந்த கிருஷ்ண பரமாத்மா காஞ்சிபுரத்தில் அருள்பாலித்த பல அதிசய சம்பவங்கள் இங்கு உண்டு, பிரார்த்தனை செய்தால் பகவான் எங்கு வேண்டுமானாலும் வந்து அருள்பாலிப்பார் என்பதை காதால் கேட்டதுண்டு. ஆனால் இந்த திருப்பாடகத்தில் நடைமுறையாக நடந்ததும் உண்மை,

காஞ்சிபுரம் திரு ஏகாம்பரநாதர் கோயிலுக்கு தென்மேற்கே அமைந்திருக்கிறது திருப்பாடக பெருமாள் கோயில்.மூன்று நிலை இராஜ கோபுரம் ஒரே ஒரு பிராகாரம்.

திவ்ய தேசம்
மூலவர் ஸ்ரீ பாண்டவத் தூதப் பெருமாள்
விமானம் சத்ர விமானம் 28 அடி உயரத்தில் பெருமாள் வீற்றிருக்கிறார்
தாயார் ருக்மணி தேவி
தீர்த்தம் மத்ஸ்ய தீர்த்தம்

பாண்டவர்களின் பெரிய பலம் கிருஷ்ணன், இதையறிந்த துரியோதனன் கண்ணனை அழித்து விட்டால் பாண்டவர்களை எளிதில் வென்று விடலாமென்று எண்ணி, கண்ணனை தன் இடத்திற்கு நயவஞ்சகமாக அழைத்தான் கண்ணன் அமரக்கூடிய இடத்தில் ஒரு ஆசனத்தைப் போட்டு அதனடியில் ஒரு நிலவறையை அமைத்தான் அந்த ஆசனத்தில் அமர்ந்தவுடன் கண்ணன், அந்த ஆசனத்தோடு பாதாளத்தில் விழுவான், அங்கிருக்கும் மற்போர் வீரர்கள், உடனே கண்ணனைக் கொல்ல வேண்டும் என்று திட்டம் தீட்டி அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை யெல்லாம் செய்தான் துரியோதனன். கண்ணனும், துரியோதன் அழைப்பை ஏற்று, அவனிடத்திற்கு வந்து அங்கு தனக்காகப் போடப்பட்டிருக்கும் ஆசனத்தில் அமர்ந்தான் துரியோதன் திட்டப்படி அந்த ஆசனம் பாதாளக் குகையில் விழ – அங்கு இருந்த வீரர்கள் கிருஷ்ணனை கொல்ல முயற்சி செய்தனர் பசுவால் கிருஷ்ணனோ விஸ்வரூபம் எடுத்து அந்த மல்யுத்த வீரர்களைக் கொன்றார்.

திவ்ய தேசம்

இந்தக் கதையைக் கேட்ட ஜெனமே ஜய அரசள், காஞ்சிபுரத்தில் அச்வமேத யாகம் செய்து பகவான் கிருஷ்ணனை வரவழைத்து அன்றைக்கு பாதாள் அறையில் விஸ்வரூபம் எடுத்துக் கொன்ற காட்சியை நினைவுபடுத்தி – தனக்கு இங்கேயே அந்த விஸ்வரூபக் காட்சியைக் காட்ட வேண்டும் என்று வேண்டினான் பக்தர்களுக்காக பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் அந்த விஸ்வரூப காட்சியை காஞ்சிபுரத்தில் காட்டிய இடம்தான் இந்த திருப்பாடகம் திருமங்கை பூதத்தாழ்வார் பேயாழ்வார் திருப்பாடக ஸ்தலத்தை மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள்.

பரிகாரம்:

பசுவான் நமக்கு மறைமுகமாக உதவி செய்ய வேண்டும் என்றால் அதற்கு மிக சாதாரண பிரார்த்தனைகளே போதும் ஆனால் பகவாள் நேரிடையாகவும் தரிசனம் தர வேண்டுமெனில் ‘ஹோமம்’ செய்வதின் மூலம் அந்த பாக்கியத்தைப் பெறலாம் என்பது உண்மை காரியத் தடைகள் நீங்க வேண்டுமென்றாலும் புதிய முயற்சியில் வெற்றி வாகை சூட வேண்டும் என்றாலும் திருப்பாடகம் வந்து இங்குள்ள கோயிலில் வளர்பிறை சதுர்த்தி அன்று பெருமாளை வேண்டிக் கொண்டு ஹோமம் செய்தால் போதும் பகவான் அத்தனைத் தடங்கல்களையும் போக்கி ஆனந்தமான வாழ்க்கையை அள்ளித் தருவார்.