- Advertisement -
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் -2020-2022-மேஷம்
மேஷம் : சுமார்- கவனம்
(அசுவினி1,2,3,பரணி1,2,3,4,கிருத்திகை 1)
எதையும் செய்து முடிக்கும் எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் ஆற்றல் கொண்ட மேஷ ராசி அன்பர்களே .
வரும் ராகு கேது பெயர்ச்சியானது உங்களது சிறப்பான பலன்களை எதிர்பார்ப்பது கடினம் காரணம் ராகு 2ம் வீட்டிலும் கேது 8 ம் வீட்டிலும் அமர்கிறார் .. இது சில குழப்பங்களை ஏற்படுத்தும் அமைப்பாகும் .
- குடும்பத்தில் பண முடை ஏற்படும் ,கடன் வாங்கும் நிலைக்கு தள்ள படுவீர்கள்
- குடும்ப உறுப்பினர்களுடன் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது .
- தேவையற்ற பகை உருவாகும்
- கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத சூழ்நிலை இருக்கும்
- எந்த தொழிலையும் மாற்ற வேண்டாம்
- உண்ணும் உணவில் கவனம் தேவை
- கடன் கொடுப்பதை தவிர்க்கவும் ..
- குரு பெயர்ச்சிக்கு பிறகு நல்ல சூழல் உருவாகும்.இவை யாவும் பொது பலன்கள் மட்டுமே அவரவர் தசா புத்தி ஏற்ப பலன்கள் மாறுபடும் ..
பரிகாரம்:
துர்க்கை ,காளி ,வழிபாடு சிறப்பை தரும்..திருநாகேஷ்வரம் சென்று ராகு பகவானை தரிசிப்பது சிறப்பை தரும் .
- Advertisement -