Saturday, December 2, 2023

மாங்கல்ய தோஷம்

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

மாங்கல்ய தோஷம்

 பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும் சில  கிரகங்களின் சேர்க்கை, கோச்சார நிலை, தசா புத்திகள் போன்ற காரணிகளால் திருமணம் தாமதமாகும். அல்லது பெண்ணுக்கு உரிய வயதில் திருமணம் நடக்க தடையாக இருக்கும் கிரக அமைப்புகள்தான் மாங்கல்ய தோஷம் என்கிறோம்.

 மாங்கல்ய தோஷம் என்றால் என்ன??

 பெண் ஜாதகத்தில்  லக்னத்திலிருந்து எட்டாம் இடம் தான் மாங்கல்ய ஸ்தானம் இதில் சூரியன் ,செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய கிரகங்கள் இருப்பது நல்லதல்ல.
 எட்டாம் அதிபதி பலம் குறைந்து காணப்பட்டாலும் மாங்கல்ய தோஷம் ஏற்படும். பெண்கள் ஜாதகத்தில் எந்த ஒரு இடத்திலும் செவ்வாய் ,கேது இணைந்து நிற்பது அவ்வளவு நல்லதல்ல.
 எட்டாம் இடத்தில் மேலே  ஐந்து கிரகங்கள் இருந்து அந்த இடம் அந்த கிரகங்களின் சொந்த வீடாக, உச்சம் பெற்று இருந்தால் தோஷம் குறையும். அவ்வீட்டில் குரு, சுக்கிரன் பார்வை இருந்தால் தோஷம் விலகும்.

மாங்கல்ய தோஷம் எதனால் வருகிறது

 சென்ற பிறவிகளில் நாம் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையிலேயே இந்தப் பிறவியில் நமது ஜாதகக் கட்டங்கள் அமைகின்றன முற்பிறவியில் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருந்த தம்பதிகளை பிரிப்பதினால் ஏற்படுவது மாங்கல்ய தோஷமாகும்.திருமணமான ஆண் மகனை காம இச்சைகளால் கவர்ந்து இழுக்கும் பெண்களுக்கு மாங்கல்ய தோஷம் ஏற்படுகின்றது .

 திருமணத்திற்கு முன் கன்னிப் பெண்களுக்கு மாங்கல்ய தோஷம் கழிக்கும் முறை

 ஒரு புதிய பொட்டு தாலி தங்கத்தில் வாங்கி தங்களது குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்தின் பாதத்தில் அந்தத் தாலியை வைத்து பூஜை செய்து ஒரு மஞ்சள் கயிற்றில் கோர்த்து எடுத்துக்கொள்ளவும் ஆலயத்திலோ அல்லது வீட்டிலோ தங்களது இஷ்ட தெய்வங்களை வழிபட்டு ஒரு சுமங்கலி பெண் இந்த மாங்கல்ய தாலியை திருமணம் தடைபட்டு வருகின்ற பெண்ணிற்கு கட்ட வேண்டும்.
 இரண்டு மணி நேரம் கழித்து அந்த தாலி கட்டப் பட்ட அந்த கன்னிப் பெண்ணை மீண்டும் அமர செய்து தாலி கட்டிய அதே சுமங்கலி பெண்ணின் கையால் அந்த மாங்கல்யத்தை அவிழ்த்து விடவும். அதன் பிறகு அந்த கன்னிப்பெண் குளிக்க வேண்டும்.
 அதே சமயத்தில் தோஷம் கழிக்கும் பொழுது உடுத்தியிருந்த உடைகள் மீண்டும் உடுத்தக்கூடாது அதனால் அந்த உடைகளை வீசி எறியும் அதன் பிறகு அந்தக் கன்னிப் பெண் கழுத்தில் கட்டிய  மாங்கல்யத்தை குலதெய்வம் அல்லது தங்களுக்கு இஷ்டமான பெண் கடவுள்களுக்கு சீர்வரிசையாக மஞ்சள், குங்குமம், வளையல், புடவை, பழங்கள், வெற்றிலை, பாக்கு, சந்தனம், இனிப்பு ஆகிய ஒன்பது மங்கலப் பொருட்களுடன் அந்த தாலியையும் வைத்து இஷ்ட தெய்வத்திற்கு காணிக்கையாகத் தர வேண்டும்.
 அல்லது அந்தத் தாலியை உண்டியலில் காணிக்கையாக செலுத்தி விடலாம் இந்த தோஷம் கழிக்கும் நாள் செவ்வாய் அல்லது வெள்ளி இல்லாமல் இருப்பது நல்லது இப்படி தோசம் கழித்துவிட்டால்  திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் விரைவில் நடைபெறும். இது பொதுவான முறையாகும். அவரவர் ஜாதகத்திற்கு ஏற்ப நிவர்த்தி செய்ய ஜோதிடரை அணுகவும் .

 மாங்கல்ய தோஷ பரிகாரம்: 

வன்னி மர விநாயகரை மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்கள் அன்று  மனமுருகி வழிபட்டு அன்றைய தினம் ஒன்பது கன்னி பெண்களுக்கு வஸ்திரதானம் செய்தால்  மாங்கல்ய தோஷம் நீங்கும்.
 திருமணத்திற்குப் பிறகு மாங்கல்யத்தில் ஆபத்து வருமோ என்று பயப்படும் பெண்கள் செவ்வாய்க்கிழமை எமகண்டத்தில் பைரவருக்கு விராலி மஞ்சள் மாலை சூட்டி,மஞ்சள்  கயிறு வைத்து, சர்க்கரை பொங்கல், பால் பாயசம், பானகம், நிவேதனம் செய்து சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுத்து பைரவரை வழிபட வேண்டும்.

பெண்களின் மாங்கல்ய தோஷத்திற்கு  ஸ்ரீமகாலட்சுமி பூஜை சக்திவாய்ந்த பரிகாரம்

 ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சையில் ,நெய்  விளக்கு ஏற்றி வழிபாடு செய்யலாம். அம்மனுக்கு எலுமிச்சை மாலை அணிவிக்கலாம். எலுமிச்சை அன்னம் படைத்து வழிபட்டு தோஷ நிவர்த்திக்கு சிறப்பு.
 நவராத்திரி தினங்களில் அம்பிகையை வழிபட்டு சுமங்கலிப் பெண்களுக்கு தேவையான மங்கல பொருட்களை கொடுப்பதன் மூலம் மாங்கல்ய தோஷம் குறையும்.
 எந்த கிரகத்தினால் மாங்கல்ய தோஷம் ஏற்பட்டு உள்ளதோ அந்த கிரகத்திற்கு பரிகாரம் செய்து வழிபட்டால் தோஷ நிவர்த்தி ஆகும்.

 மாங்கல்ய தோஷத்திற்கு செல்ல வேண்டிய கோவில்: 

தஞ்சாவூர் மாவட்டம் திருமங்கலம் குடியில் எழுந்தருளியுள்ள மங்களநாதர் சென்று வணங்கினால் மாங்கல்ய தோஷம் தாக்கம் குறையும்.
மேலும்
 பிரளயநாதர் திருக்கோயில்,சோழவந்தான் ,மதுரை 
 
கல்யாணராமர் திருக்கோவில்,புதுக்கோட்டை 
 
வல்லப விநாயகர் திருக்கோவில் , கீழவாசல்,தஞ்சாவூர்.
 
 அபயவரத ஆஞ்சநேயர் திருக்கோயில், திண்டுக்கல்.
 
 விஸ்வநாதர் திருக்கோவில், சாத்தூர், விருதுநகர்.
 
 நாகம்மாள் திருக்கோயில், பாலமேடு.கெங்கமுத்தூர் ,மதுரை 
 
  தேவி கருமாரியம்மன் திருக்கோயில், மதுரை
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular