Tuesday, May 21, 2024
Homeதோஷங்களும்-பரிகாரமும்நாக (சர்ப)தோஷங்கள் என்றால் என்ன ?பரிகாரம் மற்றும் பலன் !

நாக (சர்ப)தோஷங்கள் என்றால் என்ன ?பரிகாரம் மற்றும் பலன் !

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

சர்ப தோஷங்கள் 

அனைத்து கிரகங்களும் ராகு கேதுவிற்கு இடையில் அமைந்த ஜாதகத்தில் பாதி கட்டங்கள் காலியாக இருந்தால் அது பூரண கால சர்ப்ப தோஷம் ஆகும்.

ஏதேனும் மூன்று கிரகங்கள் வெளியே அமைந்தாலும் அது காலசர்ப்பதோஷம் ஆகாது. லக்னம், ஏழாம் வீடு தவிர மற்ற வீடுகளில் அமரும் ராகு கேதுக்களை பொறுத்து சர்ப்ப தோஷங்கள் பலவகைப்படும்.

 அனந்த கால சர்ப தோஷம்(Anandhakala Sarba Dosham)

ராகு 1 வீட்டிலும் கேது 7ஆம் வீட்டிலும் இருக்க மற்ற கிரகங்கள் இவர்களுக்கிடையே அமைவதே அனந்த  கால சர்ப்ப தோஷம் இதை விபரீத காலசர்ப்பதோஷம் எனவும் கூறலாம். இவர்கள் பல இடையூறுகளுக்கு பிறகுதான் தங்கள் சொந்த முயற்சியால் வாழ்வில் முன்னுக்கு வருவர் எனினும் திருமண காலத்தில் சில இடையூறுகள் உண்டாகும்.

சங்கசூட சர்ப தோஷம்(Sangasooda Sarba Dosham)

ராகு 9ஆம் வீட்டிலும் கேது 3-ஆம் வீட்டிலும் இருக்கும் ஜாதக அமைப்பு உடையோர் பொய் கூறுவர். முன் கோபம், வாழ்க்கை ஏற்றத்தாழ்வு நிறைந்ததாக இருக்கும்.

கடகசர்ப தோஷம்(Kadaga Sarba Dosham)

4ல் ராகு 10ல் கேது இருந்தால் சட்ட சிக்கல் வரும். அரசாங்க தண்டனை உண்டு. பத்தில் ராகு இருட்டு சம்பந்தமான தொழில் கொடுப்பார். புகைப்படம் ,எக்ஸ்ரே போன்ற தொழில் கிடைக்கும். இடம் கொடுத்த ராசியாதிபதி  கெட்டால்  சட்டத்திற்குப் புறம்பான வேலைகளை செய்ய தூண்டுவார்.

குளிகை சர்ப  தோஷம் (Kuligai Sarba Dosham)

2ல் ராகு 8ல் கேது இருந்தால் உடல் நலம் கெடும், இழப்புக்கள், விபத்துக்கள் நேரும், பொருளாதார பாதுகாப்பற்ற நிலை ஏற்படும். ராகுவுக்கு இடம் கொடுத்த ராசி அதிபதி பலம் பெற்று இருந்தால் வெளிநாட்டு பயணம் கிட்டும்.

வாசுகி சர்ப தோஷம்(Vaasuki Sarba Dosham)

3ல் ராகு 9ல் கேது இருந்தால் இந்த தோஷம் ஏற்படும் தொழில் பிரச்சனைகள் ஏற்படும். காது மற்றும் இளைய சகோதரர்களால் பிரச்சனை உருவாகும்.

சங்கல்ப சர்ப தோஷம் (Sangalba Sarba Dosham)

4ல் ராகு 10ல் கேது இருந்தால் ஜாதகரின் வேலை தொழில் கடும் தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவைப்படும்.

பத்ம சர்ப தோஷம் (Padma Sarba Dosham)

5ல் ராகு 11ல் கேது இருந்தால் குழந்தை பிறப்பதில் பிரச்சனை ஏற்படும். இதனுடன் சந்திரன் கெட்டால் ஆவி தொல்லை ஏற்படும். மேலும் நண்பர்களால் ஏமாற்றமும், நோய் உண்டானால் குணமடைய தாமதமாகும்.

மகாபத்ம சர்ப தோஷம்(Mahapadma Sarba Dosham)

6ல் ராகு 12ல் கேது இருந்தால் நோயினால் தொல்லை உண்டாகும். எதிர்காலம் இடையூறுகள் நிறைந்ததாக இருக்கும். ஆறாம் அதிபதியை பொருத்து நோய் குணமாகும்.

சர்ப தோஷங்கள்

தக்ஷக  சர்பதோஷம்(Dhshaga Sarba Dosham)

கேது லக்னத்தில், ராகு ஏழில் இருந்தால் முன் யோசனையும் யூகம் செய்யும் ஆற்றலும் உடையவர். மது, மாதுவால் இறப்பார். திருமண வாழ்வில் தொல்லை ஏற்படும்.

கார் கோடக சர்ப தோஷம் (Karkodaga Sarba Dosham)

ராகு 8ல், கேது 2ல் இருந்தால் கார்கோடக சர்ப்ப தோஷம் உண்டாகும். எதிரிகள் அதிகமாக இருப்பர்.

விஸ்தார சர்ப்ப தோஷம்

ராகு 11ல்,கேது 5ல் இருந்தால் குழந்தைகள் தொடர்பான பிரச்சனை உண்டாகும். அடிக்கடி பயணம் செய்வார். வாழ்க்கையில் பிற்பகுதி நன்றாக இருக்கும்.

 சேஷ நாக சர்ப தோஷம் (Seshanaga Sarba Dosham)

ராகு 12ல் ,கேது 6ல் இருந்தால் உடல் நலத்தில் பிரச்சனை ஏற்படும். வழக்குகளில் சிக்கல் உண்டாகும். எதிரிகள் தொல்லை அதிகரிக்கும்.

சர்ப தோஷம் வர காரணம் என்ன ??

நமக்கு இந்த பிறவியில் தோஷங்கள் அமையப் பெற்ற ஜாதகம் வரக் காரணம் நாம் முற்பிறவியில் செய்த கர்மவினைகளை ஆகும். முற்பிறவியில் பெரியோர்களை துன்புறுத்தினாலோ அல்லது இரண்டு பாம்புகள் இணைந்திருக்கும் போது அவற்றை கொல்ல முயலும்போது ஒன்றை மட்டும் கொன்றால் மற்றது தப்பித்து விட்டால் அது மிகக் கொடூரமான பாவமாகும்.

பாவம் செய்தவர்கள் தான் மறுபிறவியில் லக்கினத்தில் ராகு அல்லது கேது தனித்து இருக்க பிறக்கின்றனர். வயல்வெளியில் உள்ள பாம்புப் புற்றுகளை அழிப்பதாலும் புற்றுக்கள் அமையப் பெற்ற இடத்தை அசுத்தம்  செய்தாலும் வாயில்லா ஜீவன்களை துன்புறுத்தி அதில் மகிழ்ச்சி காண்பாதாலும்  மற்றும் மாந்திரீக கலைகளை தவறான விதத்தில் பயன்படுத்தினாலும் ராகு கேது தோஷம் ஏற்படுகின்றது.

 பரிகாரங்கள் :

  • தங்கம் நிரம்பிய குடம் அல்லது தெய்வீகம் நிறைந்த பொருட்களுடன் கும்பம் வைத்து வழிபட்டால் தோஷம் நீங்கி செல்வ செழிப்பு உண்டாகும்.
  • பட்டு சார்த்துதல் தானியம் மற்றும் திவ்ய  ஆபரணங்கள் வழங்கினால் தோஷம் விலகி கல்வி மற்றும் சுபிட்ச வாழ்வு உண்டாகும்
  • உப்பு காணிக்கை செலுத்தினால்  காலசர்ப்ப தோஷம் விலகி உடல் நலம் பெறும்.
  • மஞ்சள் காணிக்கை  செலுத்தினால் சர்ப்ப தோஷத்தின் விஷத்தன்மை நீங்கும்
  • நல்ல மிளகு ,கடுகு, சிறு பயிறு போன்றவற்றை நைவேத்தியமாக செலுத்தினால் நாகதோஷத்தில் இருந்து விடுபட்டு ஆரோக்கிய வாழ்வை பெறலாம்.
  • மஞ்சள் பொடி,பால் நைவேத்தியம் படைத்தால் தோஷத்தினால்  ஏற்பட்ட குறைகள் நீங்கி குழந்தை பாக்கியம் உண்டாகும்.
  • தோஷ பரிகாரத்திற்கு  மஞ்சள் பொடி காணிக்கை ,பால்-பழம் , அப்பம், இளநீர், பூக்கள் அவள் நைவேத்தியம் செய்ய வேண்டும்.
தோஷங்கள்

 பரிகார ஸ்தலங்கள்

குன்றத்தூரில் சேக்கிழார் பெருமான் ஏற்படுத்திய திருத்தலம் ராகு பகவானுக்கு பரிகாரத்தலமாக அமைந்துள்ளது. ராகு கேது பிடிக்குள் மற்ற ஏழு கிரகங்களும் அகப்பட்டு தன் பலத்தை இழக்கும் பெரிய தோஷம்உள்ளவர்கள் இத்தலத்திற்கு வந்து ராகு கால பூஜையில் கலந்து கொண்டு பரிகாரம் செய்தால் தோஷ நிவர்த்தி அடைந்து நன்மையடையலாம்.

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலுக்கு அருகேயுள்ள தலத்தில் மகாளன் எனும் நாகம் காளத்திநாதர் ஆணைப்படி இங்கு லிங்கம் அமைத்து பூஜித்தது. மூலவர் மகாளேஸ்வரர். இது ராகு-கேது பூஜித்த தலமும் ஆகும். இங்கு வழிபட்டு வந்தால் சர்ப்ப தோசம் நீங்கும்.

ஆதிசேஷன் பூஜித்து அருள் பெற்ற தலம் ஸ்ரீ வடிவுடை அம்மன் உடனுறை ஸ்ரீ படம்பக்கநாதர் மற்றும் ஸ்ரீ மாணிக்கதியாகேஸ்வரர் இவரை வணங்கினால் ராகு கேதுவால் உண்டான தோஷம் விலகும். இது சென்னையில் உள்ள திருவொற்றியூரில் அமைந்துள்ளது.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்160ஜோதிட தொடர்102ஆன்மிக தகவல்93குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53நட்சத்திர ரகசியங்கள்33பரிகாரங்கள்32சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19தசா புத்தி பலன்கள்19அற்புத ஆலயங்கள்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18சுபகிருது வருட பலன்கள்13சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313குரோதி வருட பலன்கள் 202413புத்தாண்டு பலன்கள்-202213சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8தேவாரத் திருத்தலங்கள்7திருமண பொருத்தம்7கருட புராணம்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5அட்சய திருதியை3ஜோதிட கருத்து கணிப்பு3தினம் ஒரு திருவாசகம்3மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2மே மாத ராசிபலன்கள் -20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241மார்ச் மாத ராசி பலன் 20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1மாசி மாத பலன்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular