செவ்வாய் பகவான்12வீடுகளில் நின்ற பலன்கள்
1-ம் பாவம்
- ஒரு ஜாதகனின் லக்கினம் எனும் முதல் பாவத்தில் செவ்வாய் இருந்தால்பிற பெண்களுடன் தொடர்பு ஏற்படலாம்,
- அற்பத்தனமான செயல்களை தவிர்ப்பது நல்லது,
- செவ்வரி படர்ந்து, உடல் வலிமை பெற்று இருக்கும்,
- சொத்துகள் சேர வாய்ப்பு உண்டாகும்,
- மற்ற கிரகங்கள் வலுப்பெற்று இருந்தால் சொத்துக்கள் வரும்,
- முதல் பாவம் கடகம், மிதுனமானால் பலன்கள் ஏறுக்குமாறாக இருக்கும்
2-ம் பாவம்
- இரண்டாம் பாவத்தில் செவ்வாய் இருந்தால்
- அவர் முன்கோபம் மிகுந்தவராக இருப்பார்,
- இளமையில் திருமணம் நடக்கும்,
- மனைவியிடம் அடிக்கடி சண்டை விடுவார்,
- கோபத்தில் சொற்கள் திக்கும் ,
- நிலபுலன்கள் வாய்க்கும்
3-ம் பாவம்
- மூன்றாம் பாவத்தில் செவ்வாய் இருந்தால்
- சகோதர ,சகோதரிகள் உடன் சண்டை சச்சரவு ஏற்படும்,
- வாகனங்களால் விபத்து நேரலாம்,
- பிடிவாதம், குறுகிய நோக்கம் ,அவசரம் ஆகிய குணங்களால் பொருள் இழப்பும், அவமானமும் ஏற்படும்,
- நடிகை, நாட்டியக்காரி ஆகியவர்களின் நட்பினால் இழப்பு ஏற்படும்,
4-ம் பாவம்
- நான்காம் பாவத்தில் செவ்வாய் அமைந்தவர்
- இளைய சகோதரனை இழக்கக்கூடும்,
- செங்கல் அடுக்கிய வீட்டில் குடியிருக்க நேரும் ,
- அடிக்கடி அக்கம்பக்கத்தில் சண்டை சச்சரவு ஏற்படும்,
- துணிச்சல் கொண்ட இவர் முதுமையில் பல தொல்லைகளை அனுபவிக்க நேரும்,
5-ம் பாவம்
- ஐந்தாம் பாவத்தில் செவ்வாய் அமைந்தால்
- குறுகிய புத்தி,நலம் கெட்ட உடல், தாயாருக்கு நோய், சூதாட்டத்தில் பொருள் இழப்பு ஏற்படும்,
- பரிகாரத்தாலும் முருக பக்தியாலும் இந்த பலனை மாற்றலாம்.
6-ம் பாவம்
- ஆறாம் பாவத்தில் செவ்வாய் அமையப் பெற்றவர்
- வாழ்க்கையை உற்சாகமாக இருக்கும்,
- பகைவர் தொல்லை தருவார்,
- பேச்சு அதிகார தோரணையில் அமைந்திருக்கும்,
- வேலையாட்கள் துரோகம் செய்வர் ,
- உடலில் படைகள் ,புண்கள் ,சிறுநீர் வியாதிகள், காய்ச்சல், இதய நோய்கள் நுரையீரல் கோளாறுகள், ஏற்படலாம்.
7-ம் பாவம்
- ஏழாம் பாவத்தில் செவ்வாய் அமையப் பெற்றவர்
- பல சகோதரர்களை பெற்றவர்,
- சயரோக நோய் ஏற்படாமல் விழிப்பாய் இருக்க வேண்டும்,
- மனைவிகளால் தொல்லை ஏற்படலாம்,
- செரிமானக் கோளாறு ஏற்படலாம்,
- சண்டை, சச்சரவுகள் உண்டாகும்,
- அடிக்கடி உணவு உறவினர்களுடன் வம்பு வழக்குகள் ஏற்படும்,
8-ம் பாவம்
- எட்டாம் பாவத்தில் செவ்வாய் அமையப் பெற்றவர் பலருக்கு ஆயுள் குறைவு
- ஆயுதங்களால் தாக்கப்பட நேரிடலாம்,
- பிறரின் துரோகம், ஒழுக்கமின்மை ஆகிய கோளாறுகளால் ரத்த அழுத்தம் மிகுதியாகலாம் ,
- மன நிம்மதியற்ற வாழ்க்கை அமையக்கூடும்,
9-ம் பாவம்
- ஒன்பதாம் பாவத்தில் செவ்வாய் இருக்கப்பெற்றவர்
- பொய் சொல்வார்
- நாத்திக வாதம் புரிவார்,
- மகிழ்ச்சியாயும் உடல்நலத்தோடு இருந்தாலும் தந்தையின் உடல்நலக் குறைவினால் பிரச்சனைகள் ஏற்படும்,
- பொருள் இழப்பு ஏற்படும்,
10-ம் பாவம்
- பத்தாம் பாவத்தில் செவ்வாய் அமையப் பெற்றவர்
- முருக பக்தராய் இருப்பார்,
- தைரியமுள்ள இவர் எதையும் விரைந்து செயல்பட வைப்பார்,
- பொது செயல்களில் ஈடுபடுவோர்,
- தலைவர் பதவி பெற்று புகழ் பெறுவார்,
- சபல புத்தி மிகுதியாய் இருக்கும் ஆனால் சாமர்த்தியமாக நடந்து கொள்வார்
11-ம் பாவம்
- பதினோராம் பாவத்தில் செவ்வாய் இருக்கப் பெற்றவர்
- எதிரிகள் பலரை ஏற்படுத்திக் கொள்வார்,
- மோசமான நண்பர்கள் சேருவார்,
- நிலபுலங்கள் வாங்குவார்,
- தைரியசாலியாக செயல்படுவார்,
- ஆயுதத்தால் காயம் ஏற்பட்டாலும் அதன் மூலம் லாபத்தை அடைவார்கள்
- செவ்வாய் பற்றிய விவரங்களில் மிகுந்த அளவு தோஷ பரிகார பூஜைகள் செய்தால் நலம் பெறலாம்,
12-ம் பாவம்
- பனிரெண்டாம் பாவத்தில் செவ்வாய் இருந்தால்
- திருடர்களால் பொருள் நஷ்டம்
- காதில் நோய்கள்,
- புறங்கூறும் பழக்கத்தால் சண்டை சச்சரவு ,
- ரகசிய எதிரிகளால் கோர்ட், போலீஸ் ஸ்டேஷன் செல்ல நேரிடலாம்
- இளமையிலேயே ஆண்மை குறைந்து விடும் வாய்ப்பு உண்டு ,
- இதுவரை 12 பாவங்களில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் நன்மை தீமைகளை அறிந்தோம் .
- தீமையான செயல்களை செய்வதால் ஏற்படும் பாவத்தை விலக்கி பாதையை சரிபடுத்த தோஷ பரிகார பூஜைகள் செய்வது நல்லது.