Sunday, July 14, 2024
Homeஜோதிட குறிப்புகள்கேது கிரகம் எந்த வீட்டில் இருந்தால் என்ன பலன் ?

கேது கிரகம் எந்த வீட்டில் இருந்தால் என்ன பலன் ?

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

 கேது கிரகம் (Kethu) எந்த வீட்டில் இருந்தால் என்ன பலன் 

ராகு(Rahu) கிரகத்தைப் போலவே கேது(Kethu) கிரகமும் கொடூரமான பலன்களைத் தரும்.கேது(Kethu) கிரகம் ஓர் ராசி  மண்டலத்தை தாண்டுவதற்கு 18 மாதங்கள் ஆகும்.12 ராசிகளையும் சுற்றிவர ராகு- கேதுவிற்கு(Rahu-Kethu) 18 வருடங்களாகும்.

இந்த கிரகங்கள் தாங்கள் எந்த வீட்டில் இருக்கின்றனவோ அந்த இடத்துக்கு சொந்தமான கிரகத்தின் தன்மையை இவை பிரதிபலிக்கும். அதனால் இவ்விரண்டிற்கும்சாயா கிரகங்கள் என்று பெயர்.

இனி  கேது(Kethu)  கிரகம் பன்னிரு வீடுகளில் எந்த வீட்டில் இருந்தால் என்ன பலன்கள் ஏற்படும் என்பதை பார்ப்போம்.

லக்னத்தில் கேது 

ஒருவர் ஜாதகத்தில் லக்கினம் எனும் முதல் பாதத்தில் கேது(Kethu) கிரகம் இருக்கப்பெற்றவர்,பார்வைக்கு கட்டுடலுடன் அழகாக காட்சி அளிப்பார்,ஆனால் இவர் உண்மையில் வலுவற்றவர்,பலவீனமானவர் ,பக்திமான் என்றும் சித்துவேலை கற்றவர் என்றும் அதீத சக்தி தம்மிடம் உள்ளது என்றும் தற்பெருமை பேசிக் கொள்வார்,பல்வேறு நோய்கள் ஏற்பட்டு தொல்லை தரலாம்,

தீயோர் தொடர்பால் பழக்கங்கள் ஏற்பட்டு ,சுற்றத்தார் இடமும் சுற்றி இருப்பவர் இடமும் கெட்ட பெயர் எடுக்க நேரலாம்,மாந்திரீகம், மரணம், தாந்திரீகம், வசியம், ஏவல் ,பில்லி ,சூனியம் ஆகியவற்றில் ஆர்வமும் ஈடுபாடும் உள்ளவராய் இருப்பார்.

நீங்கள் எதிர்பார்க்கும் முன்னேற்றங்களில் சிறுசில தடைகள் உண்டு. உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் இல்லையே என்று அவ்வப்போது கவலையும், ஏக்கமும் எழும். எனினும் அனுபவ அறிவால் சாதிப்பீர்கள். சித்தர்கள், மகான்கள் ஆகியோரின் ஆசிர்வாதம் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும்.

2-ல்கேது

கேது(Kethu) கிரகம் 2-ல்அமையப்பெற்றவர் ,கவிதை, கதை, நாடகம், ஞானநூல், ஆகியவற்றில் மிகுதியான ஈடுபாடு ஏற்படும்.கற்ற கல்வியை விட மிகுந்த அறிவாற்றல் இருக்கும்.குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி இராது.பொருளாதாரத்தில் சிக்கல்கள் ஏற்பட்டு மன அமைதி கெடும்.

எப்போதும் உண்மையே பேசுவீர்கள். அதனாலேயே சிறுசிறு பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடலாம். ஆனால் மனசாட்சிப்படி வாழ்வதால் உண்டாகும் திருப்தியே போதும் என்று மகிழ்வீர்கள். சுய விருப்பத்துக்கு ஏற்ப ஒரு படிப்பை முடித்து அதன் மூலமாக அதீத முன்னேற்றம் காணும் யோகம் உண்டு.

3-ல்கேது

கேது(Kethu) கிரகம்3-ல் அமையப் பெற்றவர்,சகோதர ,சகோதரிகளுடன், உறவினர்களுடன் பகை ஏற்படும்.அசட்டுத்தனமான தைரியத்தால் தொல்லைகள் ஏற்படும்.மனைவி மக்களிடம் ஏற்படும் மன வருத்தத்தினால் மன நிம்மதி கெடும்.

நீண்ட ஆயுளும், அதீத செல்வ சேர்க்கையும் உண்டு. “மூன்றில் கேது முடிசூட வைப்பார்” என்றொரு சொல் வழக்கு உண்டு. அதற்கேற்ப நீங்கள் ஆளுமை திறனோடு விளங்குவீர்கள். சுற்றியுள்ளோர் எல்லோரும் நன்மை செய்ய அதை அனுபவிக்கும் பாக்கியசாலியாக திகழ்வீர்கள்.

4-ல்கேது

நான்காம் பாவத்தில் கேது(Kethu) கிரகம் இருக்கப்பெற்றவர்,வாழ்க்கை போராட்டம் வாழ்க்கையாக இருக்கும்.மனைவி மக்களை பிரிந்து ஊர் ஊராக அலைய நேரிடும். 4-ம் பாவத்தை சுபகிரகம் ஏதாவது பார்த்தால் தீய பலன்கள் சற்று குறையலாம்.

சில தருணங்களில் சித்தம் போக்கு சிவம் போக்காக காணப்படுவார்கள். இந்த அன்பர்களில் சிலருக்கு மருத்துவராகவும் யோகம் கிட்டும். படிப்பின் நிமித்தம் தாயாரை பிரிய நேரிடும். கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி, உருவாக்குதல் ஆகியவற்றில் திறம்பட சாதிப்பார்கள்.

நான்காம் பாவத்தில் பாவ கிரகங்கள் அமைந்தால் துன்பப்படுவர்,இதற்கு தோஷ பரிகார பூஜை செய்து நலம் பெறலாம்.

கேது

5-ல்கேது

கேது(Kethu) 5-ல் இருக்கப்பெற்றவர்,தொலைதூர நாடுகளுக்கு பயணம் சென்று துன்பம் அடைவார்.முதலில் பெண் குழந்தை பிறக்கும்.பிற்காலத்தில் சொத்து, சுகம், செல்வம் ஆகியன ஏற்படும்.சொந்த ஊரில் நிந்தனைக்கு ஆளாவார்.கிராம தேவதையை பூஜை செய்பவராய் இருப்பார்.

அறிஞர்கள் மற்றும் கல்வியாளர்களின் தொடர்பும் அவர்களால் முன்னேற்றமும் உண்டு. சுற்றி இருப்பவர்களின் சுய ரூபத்தை எளிதில் உணரும் ஆற்றல் உண்டு. வாழ வந்த இடத்தில் உயர்வை அடைவீர்கள். கேது ஐந்தில் இருக்க பிறந்த ஜாதகர்களில் சிலருக்கு முக்காலமும் உணரும் வல்லமையும் கிடைக்க வாய்ப்பு உண்டு

பூர்வ புண்ணிய ஸ்தானம் என கூறப்படும் இந்த ஐந்தாவது ஸ்தானத்தில் பாவ கிரகங்கள் இருப்பது நல்லதன்று.இத்தகைய அமைப்பு உள்ளவர்கள் கிரக பரிகார பூஜைகள் செய்ய வேண்டும்

6-ல்கேது 

ஆறாம் பாதத்தில்  கேது(Kethu) கிரகம் இருக்கப்பெற்றவர்,உடல் உறுப்புகளில் குறைபாடு  உள்ளவர்.உறவினரோடும் மனைவியோடும்நண்பர்களோடும் அவசியமில்லாமல் சண்டையிட்டு விரோதிகளை உருவாக்கிக் கொள்வார்.அந்த விரோதிகளால் பல துன்பங்களும் அவர்கள் ஆயுதத்தால் தாக்குதல் ஏற்படாமல் தவிர்க்க முயலவேண்டும்.

எதிரிகள் எவரும் இல்லாத நிலை உருவாகும். நீங்கள் எதைச் செய்தாலும் வெற்றிதான். கடன் இல்லாத வாழ்க்கை வரப்பிரசாதம். திடீர் அதிர்ஷ்டம், வெளிநாடு சென்று சம்பாதிக்கும் யோகம் உண்டு.

வறுமையினால் கடன் ஏற்பட்டு தொல்லை ஏற்படாது விழிப்பாய் இருக்க வேண்டும்.

ஆறாம் பாவத்தில் சுப கிரகங்கள் இருந்தால் நற்பலன்கள் எட்டுவதில்லை பாப கிரகமான கேது இருந்தால் தொல்லைகள் தாமே!இந்தத் தொல்லைகளை தவிர்க்க தினந்தோறும் கேது பகவானை முறைப்படி வழிபட்டு கிரக தோஷ பரிகார பூஜை செய்யவேண்டும்,

7-ல்கேது

ஏழாம் பாவத்தில் கேது(Kethu) கிரகம் அமையப் பெற்றவர்,திருமண வாழ்வில் மகிழ்ச்சி இராது.மனைவி -கணவனை விரும்ப மாட்டாள் அதனால் சண்டை சச்சரவு ஏற்படும்.இதனால் இவர் மனைவியை பிரிந்து மற்றொரு பெண்ணை மணப்பார்,

அவளிடமும் இவர் சண்டையிட்டு அதனால் அவள் உறவினர் விரோதம் ஏற்படும்.இப்படி போராட்ட வாழ்க்கைய நடத்துபவர்.இன்பத்தை தேடி அடைவதாக எண்ணிக்கொண்டு சிபிலிஸ் ,கொனரியா, முதலிய நோய்களும் சிறுநீரகக் கோளாறுகளும் ஆளாகாமல் விழிப்பாக இருக்கவேண்டும்.

7-ல் கேது என்றதும் தோஷம் என்று பலரும் அஞ்சுவார்கள். இந்த நிலை திருமண தடையை ஏற்படுத்தும் என்பார்கள். அதேநேரம் 7-ல் இருக்கும் கேது பகவான் சுப கிரகங்களின் பார்வையைப் பெற்றால் அற்புதமான வாழ்க்கை துணை அமையும். ஆக, மற்ற கிரகங்களின் நிலைகளையும் ஆராய்ந்து தெளிவது அவசியம்.

இவர் தம் வாழ்க்கையில் நலம்பெற தம் மனைவியுடன் ராகு -கேது கிரக தோஷ பரிகார பூஜை செய்து தினம்தோறும் நவகிரக வழிபாடு செய்ய வேண்டும்.அதனால் நலம் பெறலாம், வாழ்வில் வளம் பெறலாம், மனதில் நிம்மதி பெறலாம்,.

8-ல்கேது

 எட்டாம் இடத்தில் கேது(Kethu) கிரகம் அமையப் பெற்றவர் துன்பம், எந்த தொழில் செய்தாலும் இழப்பு, நம்பிக்கை துரோகம், வறுமை, நோய், எல்லோருடனும் விரோதம், சிடுசிடுப்பு ஆகியவற்றுக்கிடையே வாழ நேரும்.

படபடப்பாகவும் ஒருவிதப் பதற்றத்துடனும் காணப்படுவார்கள். இவர்கள் சிறுவயதில் நிறைய ஏமாற்றங்களை சந்திக்க நேரிட்டதால் மத்திம வயதில் எவரையும் எளிதில் நம்பாதவர்களாக திகழ்வார்கள். வனம் நிறைந்த மலை பிராந்தியங்களுக்கு சென்று வருவதில் விருப்பமுள்ளவர்கள்.

இவரே விரோதிகளை உருவாக்கிக் கொள்வார்.இவர் மரணத்திற்கு காரணம் இவரே நாள் தோறும் நவகிரக வழிபாட்டை செய்தால் நலம் பெறலாம்.

9-ல்கேது

ஒன்பதாம் பாவத்தில் கேது(Kethu) கிரகம் இருக்கப்பெற்றவர் ஏழையாக மட்டுமின்றி கோழையாகவும் இருப்பார்.மனைவியின் கை பொம்மை, உறவினரோடு பகை கொள்ளுவார். இவரால் தந்தைக்கு மிக்க துன்பம் எனினும் தெய்வ பக்தி உள்ளவர்.

தந்தைக்கே உபதேசம் செய்யும் சம்த்தர்கள். சுயமாக முன்னேற விரும்புவர். ஆன்மீக நூல்கள் வெளியிட உதவுவதிலும், பழமையான ஓலைச்சுவடிகளை புதுப்பிக்க அல்லது நூலாக்கம் செய்ய உதவி செய்வதிலும் மிகுதியான ஆர்வம் இருக்கும். அதே போன்று சித்த மருத்துவத்திலும் விருப்பம் இருக்கும். எவ்வளவு பொன் பொருள் சேர்த்தாலும் பிறருக்கு கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.

கேது

10-ல்கேது

பத்தில் கேது கிரகம்(Kethu) இருக்கப்பெற்றவர் சற்று கொடூரமான தேவதைகளை வணங்குபவர்.காம இச்சைகளை தீர்த்துக்கொள்ள மிகுந்த அளவு செலவு செய்வார்.எப்போதும் வெளியூர் பயணங்களில் சுற்றிக் கொண்டிருப்பார்.

தகவல் களஞ்சியமாக, பல்வேறு விஷயங்களை அறிந்தவர்களாக திகழ்வார்கள். தர்ம காரியங்களில் இவர்களுக்கு விருப்பம் இருக்கும். அதே நேரம் ஓர் இடத்தில் தொடர்ந்து வேலை பார்க்க இயலாத நிலை உருவாகும். ஆனாலும், சொந்தத் தொழிலில் புகழ் பெறும் வாய்ப்பு உண்டு.

தொலைதூர நாடுகளுக்குச் சென்று பணம் ஈட்டுவார்.பிற பெண்களால் இவர் தம் மனைவியை பிரிய வேண்டிய நிலை ஏற்படும். அப்படி பிரியும் மனைவியால் அவமானமும் வம்பு வழக்குகளும் ஏற்பட வாய்ப்புண்டு.

11-ல்கேது

பதினோராம் பாவத்தில் கேது(Kethu) கிரகம் இருக்கப்பெற்றவர் போர் சாதனங்களை சேகரிப்பான் அல்லது ராணுவ தளங்களில் ஏலம் விடப்படும் பொருட்களை வாங்குபவரா இருப்பார்.தெய்வ பக்தியும், கடமை தவறாத உணர்ச்சியும், உறவினர்களிடம் அன்பு உள்ளவனாய் இருப்பான்.

எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவார்கள். அவர்கள் தொட்டது துலங்கும் வீடு மனை சொத்து என குறைவில்லாத வாழ்க்கை அமையும்.

நல்ல நண்பர்கள் மூலம் இவருக்கு செல்வம் சேரும்.பெண்களுக்காக தாராளமாக செலவு செய்வார். அதனால் முதுமை காலத்தில் கெட்ட பெயர்களையும் நோய்களையும் பெற நேரும்.

12-ல்கேது

 12ஆம் இடத்தில் கேது(Kethu) கிரகம் இருக்கப்பெற்றவர் வசதியுள்ள குடும்பத்தில் பிறந்தவராக இருப்பார்.இவர் வளர வளர வசதிகள் குறைய ஆரம்பிக்கும்.இவரது நடுத்தர வயதில் எந்த சொத்தும் இராது.

மோட்சம் கைகூட செய்யும். இப்படியான ஜாதகர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது கருத்து. இவர்களுக்கு வருங்காலத்தை உணரும் சக்தி வாய்க்கும். அதற்கு ஏற்ப செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். இவர்களுக்கு சாப்பாடும், தூக்கமும் குறைவுதான். சளைக்காத உழைப்பால் சாதிப்பார்கள்.

மனைவி சொத்துக்களுடன் வருவாள் வந்தபின் மனைவியின் சொத்துக்களும் நகைகளும் விரையமாகும்.நண்பர்கள் உதவி செய்து நஷ்டம் அடைவார்கள்.குடும்பத்தில் நிம்மதி இராது.

கேது

கேதுவின் அருளை பெறுவது எப்படி ?

கேது பகவானின் திருவருளைப் பெற செவ்வாய்க்கிழமைகளில் கேது பகவான் காயத்ரி மந்திரம் சொல்லி வழிபடுவது சிறப்பு. பிள்ளையாருக்கு அருகம்புல் சமர்ப்பித்து மோதகம் படைத்து விநாயகர் அகவல் பாராயணம் செய்து நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபட்டால் கேது பகவான் மகிழ்ச்சி அடைவார்.

காஞ்சிபுரத்தில் கோயில் கொண்டிருக்கும் சித்ரகுப்தரை தரிசித்து விட்டு வருவதும், கேது பகவானுக்கு ப்ரீதியானது. ஏழை மாணவர்களின் படிப்புக்கு உதவி செய்வது, சமய சொற்பொழிவு முதல் ஆன்மீக காரியங்களுக்கும், கோயில் திருப்பணிகளில் ஈடுபடும் அன்பர்களுக்கு உதவி செய்வதாலும், கேது பகவானின் திருவருளை பரிபூரணமாக பெறலாம்.

கேது தோஷம் போக்கும் ஸ்ரீ மகா கணபதி மங்கலமாலிகா ஸ்தோத்திரம்

விநாயகப் பெருமானை உள்ளன்போடு வழிபடும் அன்பர்களுக்கு ஜாதகத்தில் கேதுவால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும் என்கின்றன ஞான நூல்கள். அவ்வகையில் அனுதினமும் பிள்ளையாருக்கு அருகம்புல் சமர்ப்பித்து சுண்டலும், கொழுக்கட்டையும் நைவேத்தியம் செய்து அபூர்வ துதி பாடல்களை பாடி வழிபடுவதால் விசேஷ பலன்கள் கை கூடும்.

பிள்ளையாரை போற்றும் அபூர்வ துதிகளில் ஒன்று ஸ்ரீ மகாகணபதி மங்கலமாலிகா ஸ்தோத்திரம் இதை படிப்பதால் சகல மங்களங்களும் உண்டாகும். கேது போன்ற கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும். அற்புதப் பலன்களை அருளவல்ல மங்கலமாலிகா ஸ்தோத்திரத்தை அடியொற்றி அமைந்த எளிய வடிவிலான துதிப்பாடல் வரிகளில் சில இங்கே உங்களுக்காக..

நீலகண்டனின் புத்திரரே

அம்பாலின் இடது மடியில் அமர்ந்தவரே

முப்பத்திரு உரு கொண்டவரே

மகா கணபதியே மங்கலம் உண்டாகட்டும்.

பேழை வயிற்று விநாயகனே

கருணாமூர்த்தியே கணபதியே

சந்திரகர்வம் அழித்தவரே யானை

முகத்தோனே மங்கலம் உண்டாகட்டும்.

கேது

ஐங்கரனே அடியார் வணங்கும்

இறையோனே பாச அங்குசம்

தரித்தவரே மகத்துவமே யானைக்காது

கொண்டவரே மங்கலம் உண்டாகட்டும்

குங்குமப்பூ வண்ண மேனியனே

சர்ப கயிறு தரித்தவனே

ஆனந்த ரூபனே கணபதியே

மங்கலம் உண்டாகட்டும்

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்530அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்102ஆன்மிக தகவல்99குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்35நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்17ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular