Sunday, May 26, 2024
Homeஜோதிட குறிப்புகள்குரு பகவான் எந்த பாவத்தில் இருந்தால் என்ன பலன்கள் கிடைக்கும்

குரு பகவான் எந்த பாவத்தில் இருந்தால் என்ன பலன்கள் கிடைக்கும்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

குரு பகவான் எந்த பாவத்தில் இருந்தால் என்ன பலன்கள் கிடைக்கும்: 

கிரகங்களில் சூரியனுக்கு அடுத்தபடியாக வலிமையான கிரகம் குருவாகும் அது ஏறக்குறைய ஓராண்டு காலம் ஒரு ராசியில் இருக்கும் அது மிகுந்த நன்மைகளை செய்யும்.

குரு பகவான் ஒருவர் ஜாதகத்தில் லக்கினம் எனும் முதல் பாவத்தில் அமர்ந்து இருந்தால் அந்த ஜாதகம் தோஷமற்ற ஜாதகம் இவ்வாறு கிரக சிந்தாமணி என்னும் நூல் கூறுகிறது.இதற்கு காரணம் ஒரு ஜாதகத்தின் முக்கிய இடங்களான 5, 7, 9 ஆகிய ஸ்தானங்களை லக்கினத்திலிருந்து பார்ப்பதாகும்.

இந்த குரு பகவான் தீமை எதுவுமே செய்யாத? செய்யும் நீச பலம் பெற்றால் அஷ்டமஸ்தானம் எனும் எட்டாம் வீட்டில் இருந்தால், விரைய ஸ்தானம் எனும் பனிரெண்டாம்  வீட்டில் இருந்தால் தீமைகளை செய்யும்.

லக்கினம் -முதல் வீடு -Guru in First House 

ஒருவர் தம் ஜாதகத்தில் லக்கினம் எனும் முதல் பாவத்தில் குரு பகவான் இருக்கப்பெற்றவர்,எல்லா நம்பிக்கையும் பெற்றிருப்பார்,பிறருக்கு உபதேசம் செய்யும் தகுதி இருக்கும்,சாந்தம் உள்ளவராய் இருப்பார்,இனிப்பு பொருள்களை மிகவும் விரும்புவர்,நன்றியுள்ளவர், பெருந்தன்மையாக இவர் பிறருக்கு உதவிகள் செய்வதில் விருப்பம் உள்ளவர் ஆவார்,இவருக்கு பிறர் விரும்பும் உடல் அமைப்பும், அழகும் அமைந்திருக்கும்,இவர் வாழ்வில் அமைதியும் புகழும் பெறுவார்,இவரிடம் அறிவாற்றலும், ஆழமான சிந்தனையும் அமைந்திருக்கும்,கணிதம், விஞ்ஞானம், ஜோதிடம், மருத்துவம் ஆகியவற்றை அறிந்திருப்பார்,இவர் தம் மனதிற்குள் எதையும் மறைத்து வைக்க அறியாதவர் ,உத்தமர்.

 2-ம் வீட்டில் குரு-Guru in Second House 

குரு பகவான் இரண்டாவது பாவத்தில் அமையப்பெற்றவருக்கு,பொன் பொருள் ஆடை ஆபரணங்கள் ஆகியன சேரும்,வீடு ,வாகனம், நிலம் ,ஆடு ,மாடு, கோழி ஆகியவற்றை கொண்டு வசதியாக வாழ்வார்,தெய்வீக ஆசார அனுஷ்டானத்தில் பக்தி உள்ளவர்,பிறர் மனம் புண்படாமல் பேசுவார்.

 3-ம் வீட்டில் குரு-Guru in Third House 

குரு பகவான் மூன்றாம் பாவத்தில் இருக்கப் பெற்றவருக்கு,அவர் குழந்தைகளே அவருக்கு விரோதிகளாக மாறுவர்,தன்னலம் மிகுந்தவர்,முதலில் தமக்கு வேண்டியவற்றை கவனம் செலுத்துவார் பிறகுதான் மற்றவரைப் பற்றிய அக்கறை கொள்வார்.பொதுவாக மூன்றாம் இடத்தில் குரு அமைவது கிரக தோஷமே!இதற்கு கிரக தோஷ பரிகார பூஜை செய்வது நலம் தரும்.

குரு பகவான்

4-ம் வீட்டில் குரு-Guru in Fourth House 

குரு பகவான் நான்காம் பாவத்தில் இருக்கப்பெற்றவர்-ஆனந்தமாக வாழ்வார். இவருக்கு மனைவியின் அன்பும், வசதிகள், மிகுந்த அளவில் ஏற்படும்.தர்ம காரியங்களுக்கு தாராளமாக செலவு செய்வார்,அரசாங்கத்தின் மூலம் மிகுதியான வருமானம் வரும்,

5-ம் வீட்டில் குரு-Guru in Fifth  House 

ஐந்தாம் பாவத்தில் குரு பகவான் அமையப் பெற்றவருக்கும்-ஓரிரு குழந்தைகளே பிறக்கும்,தாய் மாமன் இருக்கமாட்டார். ஜாதகப்படி அரசு அலுவலகத்தில் வேலை செய்வார்.குழந்தைகளால் யோகத்தை அனுபவிப்பார்.புத்தி கூர்மை உள்ளவர்.பந்தயம், லாட்டரி, கமிஷன், வியாபாரம் ஆகியவற்றில் லாபம் அடைவார்கள்.5ம் மிடம்  என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம் என்றும் புத்திர ஸ்தானம் என்றும் கூறப்படும் இந்த ஸ்தானத்தில் கிரகங்கள் இருக்கக் கூடாது சுபகிரகங்களின் பார்வை இருக்கலாம்.ஏதேனும் ஒரு கிரகம் இருந்தால் கிரக பரிகார பூஜை செய்து கொள்வது நல்லது.

6-ம் வீட்டில் குரு-Guru in Sixth House 

ஆறாம் பாவத்தில் குரு பகவான் அமையப் பெற்றவருக்கும்-உப்புச நோய்கள், ரத்தம் கெடுதல், சர்க்கரை நோய் முதலியன ஏற்பட வாய்ப்பு உண்டு.நல்ல வேலைக்காரர்கள் அமைவார்கள்,உடலின் உள்ளே கோளாறு இருந்தாலும் வெளியே தெரியாது.கம்பீரமாய் இருப்பார் பகைவரை வென்று பலம் பெறுவார்

 7-ம் வீட்டில் குரு-Guru in Seventh House 

ஏழாம் பாவத்தில் குரு பகவான் அமையப்பெற்றவர்-ஆனந்தமாய் வாழ்வார் இளம்வயதில் திருமணம் நடக்கும்.இவர்கள் கல்வி ஞானம், புத்திக்கூர்மை, உத்தியோகம், வியாபாரம் ஆகியவற்றில் சிறந்து விளங்குவர்.வீடு, நிலம், வாகனம், ஆடு ,மாடு ஆகியவற்றோடு சுகபோக வாழ்க்கை அனுபவிப்பர்.

 8-ம் வீட்டில் குரு-Guru in Eight House 

குரு பகவான் எட்டாம் பாவத்தில் அமையப்பெற்றவருக்கு-நீண்ட ஆயுள் உண்டு ஆனால் நிம்மதியான வாழ்க்கை அடைவது அறிவு.ஆஸ்துமா போன்ற நோய் ஏற்படக்கூடும்.உடல் பருத்து விடாமல் கவனித்துக் கொள்ளவேண்டும்.வயிற்று கோளாறுகள் ஏற்படலாம்.

குரு பகவான்

9-ம் வீட்டில் குரு-Guru in Nineth House 

ஒன்பதாம் பாவத்தில் குரு பகவான் அமையப்பெற்றவருக்கு-தகப்பனார் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்.பல குழந்தைகளைப் பெறும் பேருண்டு செல்வம் பொழியும் சிறப்பான வாழ்க்கை அமையும்.ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரத்தில் ஏராளமாக பணம் ஈட்டுவார்.நெடுந்தூர பயணங்கள் கடல் கடந்த பயணங்கள் ஆகியவற்றினால் லாபம் ஏற்படும்.

10-ம் வீட்டில் குரு-Guru in Tenth House 

பத்தாம் பாவத்தில் குரு பகவான் அமையப்பெற்றவருக்கு-ஏதாவது ஒரு துறையில் தலைமை ஏற்கும் வாய்ப்பு ஏற்படும்.சிறந்த சிவபக்தராக விளங்குவார்.இவர் சிறந்த கல்வி ஞானம் மிகுந்தவர்.வாழ்க்கையில் செல்வமும் பெற்று சிறப்பாக வழிநடத்துவார்

11-ம் வீட்டில் குரு-Guru in Eleventh House 

பதினோராம் பாவத்தில் குரு பகவான் அமையப்பெற்றவருக்கு-வசதி மிகுந்த வாழ்க்கை அமையும்.பணியாளர்கள் பணி செய்வார் சிறிய தந்தை, மூத்த சகோதரர் ஆகியோரால் செல்வ உதிக்கட்டும்.நல்ல நண்பர்கள் துணையுடன் புகழ் பெறுவார்.இசை, நடனம் ஆகியவற்றில் ஆர்வம் ஏற்படும்

12-ம் வீட்டில் குரு-Guru in Twelfth  House 

பனிரெண்டாம் பாவத்தில் குரு பகவான் அமையப்பெற்றவருக்கு-போக இச்சை மிகுதியாக இருக்கும். இவர் தம் மனைவிக்கு அடங்கி நடப்பார்.எப்போதும் எங்காவது சுற்றி கொண்டே இருப்பார்.வாழ்க்கையில் நிம்மதி இராது ஏராளமாக செலவு செய்வார் அதனால் கடன் தொல்லைகள் ஏற்படும்.உணவு உடை இன்பம் ஆகியவற்றை தக்க நேரத்தில் அனுபவிக்க  இயலாது.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்160ஜோதிட தொடர்102ஆன்மிக தகவல்93குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53நட்சத்திர ரகசியங்கள்33பரிகாரங்கள்32சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19தசா புத்தி பலன்கள்19அற்புத ஆலயங்கள்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18சுபகிருது வருட பலன்கள்13சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313குரோதி வருட பலன்கள் 202413புத்தாண்டு பலன்கள்-202213சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8தேவாரத் திருத்தலங்கள்7திருமண பொருத்தம்7கருட புராணம்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5அட்சய திருதியை3ஜோதிட கருத்து கணிப்பு3தினம் ஒரு திருவாசகம்3மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2மே மாத ராசிபலன்கள் -20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241மார்ச் மாத ராசி பலன் 20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1மாசி மாத பலன்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular