Friday, March 31, 2023
Homeஜோதிட குறிப்புகள்ஜாதகத்தில் சந்திரன் பலமும்-பலவீனமும்

ஜாதகத்தில் சந்திரன் பலமும்-பலவீனமும்

ASTRO SIVA

google news astrosiva

 ஜாதகத்தில்  சந்திரன் பலமும்-பலவீனமும்

 
ஒரு மனிதரின் ஜாதகத்தில் சந்திரனின் நிலைமையை பார்த்து அவரின் மனம் எப்படி இருக்கும் என்பதை நம்மால் கூறிவிட முடியும். ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் நல்ல நிலைமையில் இருந்தால் அவர் எல்லாரிடமும் சிரித்தவாறு பழகுவார். ஆனால் சந்திரன் பலவீனமாக இருந்தால் அல்லது பாவ கிரகத்துடன் இருந்தால் அவரின் மனம் சரியாக இருக்காது.
 
 சந்திரன் லக்னத்தில் இருந்தால்
  • சுய வீட்டிலோ அல்லது நீசமாகவோ இருந்தால் அந்த ஜாதகர் பலசாலியாக இருப்பார் 
  • தெளிவான கண் பார்வையுடன் இருப்பார்
  •  கண்ணின் காந்த சக்தியால் பிறரை இழுப்பார் 
  • தான் செயல்களை நல்ல முறையில் முடிப்பார் 
  • பலவகையான உணவுகளை சாப்பிட்டு விடுவார் 
  • சந்திரன் பலவீனமாக இருந்தால் அல்லது பாவம் கிரகத்தால் பார்க்கப்பட்டார் 
  • அவர் கடுமையான மனிதராக இருப்பார் 
  • ராகுவுடன் இருந்தால் அவருக்கு சீதளம் பிடிக்கும் 
  • செவ்வாயுடன் பிடிவாத குணம் கொண்டவராக இருப்பார் 
  • சனி இருந்தால் விஷ யோகம் இருக்கும் அதனால் தலைவலி வரும் 
  • கபம் கட்டும் 

இரண்டாம் பாவத்தில் சந்திரன் இருந்தால்

  • அந்த ஜாதகர் நல்ல குடும்பத் தலைவராக இருப்பார் 
  • அந்த சந்திரன் சுபர் கிரகத்தால் பார்க்கப்பட்டால் அவருக்கு பெயர் புகழ் பணவசதி அனைத்தும் இருக்கும் 
  • சந்திரன் பாவ கிரகத்தால்  பார்க்கப்பட்டால் அவருக்கு கண்ணில் நோய் வரும் 
  • சிலர் உரிய நேரத்தில் உணவை சாப்பிட மாட்டார்கள் அதனால் அவர்களுக்கு கபம் கட்டும் 

3-ம் பாவத்தில்  சந்திரன் இருந்தால்

  • அந்த ஜாதகர் ஆணவ குணம் கொண்டவராக இருப்பார் 
  • தன் சகோதரர்களை மதிக்க மாட்டார் 
  • சந்திரன் பலவீனமாகவும் நீசமாகவோ இருந்தால் அவர் எல்லோரையும் விட்டெறிந்து பேசுவார் 
  • சந்திரனை சனி ராகு அல்லது செவ்வாய் பார்த்தால் அவருக்கு வயிற்றில் நோய் வரும் தலைவலி இருக்கும் 
  • பலரிடம் வீணாக பேசிவிட்டு பின்னர் வருத்தப்படுவார் 
  • எதையாவது சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக் கொள்வார்

4-ம் பாவத்தில் சந்திரன் இருந்தால்

  • அவர் தாயின் குழந்தையாக இருப்பார் 
  • அவருக்கு அன்னையின் ஆசீர்வாதம் இருக்கும் 
  • எதையும் பக்குவமாக பேசுவார் அவர் அந்த சந்திரனிலிருந்து 6, 8, 12 பாவ கிரகம் இருந்தால் அல்லது சந்திரனை சனி இராகு பார்த்தால் அவரின் தாயின் உடல் நிலை பாதிக்கப்படும் 
  • உரிய நேரத்தில் சாப்பிடாத காரணத்தால் தலையில் நீர் கோர்க்கும், சீதளம் பிடிக்கும் 

5-ம் பாவத்தில் சந்திரன் இருந்தால் 

  • அந்த ஜாதகருக்கு பெயர் புகழ் கிடைக்கும் ஆனால் பிள்ளைகளுடன் பிரச்சனை இருக்கும் 
  • அவருக்கு வயிற்று நோய், தோல் நோய் வரும் 
  • அவர் வறுத்த பொருட்கள் தயிர் ஊறுகாய் ஆகியவற்றைத் விரும்பி சாப்பிடுவார் 

6-ம்  பாவத்தில் சந்திரன் இருந்தால் 

  • சிலருக்கு ஆயுளில் பிரச்சனை இருக்கும் 
  • சிலர் நிறைய பொய் பேசுவார்கள் 
  • பிறரை ஏமாற்றுவார்கள் 
  • அந்த ஜாதகருக்கு தசா காலம் சரியில்லை என்றால் சிறுநீரகத்தில் பிரச்சனை இருக்கும் 
  • சந்திரனை சனி செவ்வாய் பார்த்தால் சீதளம் பிடிக்கும், விபத்து நடக்கும்

 7-ம் பாவத்தில் சந்திரன் இருந்தால் 

  • அந்த ஜாதகர் மனக்கட்டுப்பாடு இல்லாமல் இருப்பார் 
  • வீணாக வெளியே சுற்றுவார்
  • மது அருந்துவார் 
  • வயிற்றில் பிரச்சனை இருக்கும் 
  • சிலர் காதல் விஷயத்தில் சிக்குவார்கள் 
  • அந்த சந்திரனை பாவ கிரகங்கள் பார்த்தால் அவர் தன் மனைவிக்கு அடங்கிய வராக இருப்பார் 

8-ம் பாவத்தில் சந்திரன் இருந்தால்

  • அந்த ஜாதகருக்கு இளம்வயதில் ஜுரம் வரும் 
  • சந்திரனை குரு பார்த்தால் அவருக்கு நல்ல ஆயுள் இருக்கும் 
  • அதிகமாக கோபப்படுவார் 
  • சரியான நேரத்தில் சாப்பிட மாட்டார் 
  • தலைவலி,. முதுகுவலி வரும் 

சந்திரன் லக்னத்தில் இருந்தால்

9-ம் பாவத்தில்  சந்திரன் இருந்தால்

  • அந்த ஜாதகர் பெயர் புகழுடன் இருப்பார் 
  • சந்திரன் குருவால் பார்க்கப்பட்டால் அவருக்கு நல்ல புகழ் இருக்கும்
  •  குழந்தைகள் நல்லவர்களாக இருப்பார்கள் 
  • சந்திரனை சனி பார்த்தால் தொழில் விஷயமாக அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டியதிருக்கும் 
  • தொழில் சரியாக இருக்காது 
  • செவ்வாய் ராகுவுடன் சந்திரன் 9ல் இருந்தால் அவர் எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பார் 
  • உணவு விஷயத்தில் மனக் கட்டுப்பாடு இருக்காது 
  • சந்திரன் குரு உடன் இருந்தால் நன்கு சம்பாதிப்பார் 
  • அவருக்கு கஜகேசரி யோகம் உண்டாகும் 

10-ம் பாவத்தில் சந்திரன் இருந்தால் 

  • அந்த ஜாதகர் புகழுடன் இருப்பார் 
  • உடல் நிலை சிறப்பாக இருக்கும் 
  • சந்திரனின் ஏழாவது பார்வை நான்காவது பாவத்திற்கு இருக்கும்போது அவரின் அன்னையின் உடல் நலம் நன்றாக இருக்கும் 
  • சந்திரன் செவ்வாய் உடன் இருந்தால் அவர் பூமி வாகனம் வாங்குவார்
  •  அரசியல் உலகில் புகழுடன் இருப்பார் 
  • சந்திரன் சனியுடன் இணைந்தால் தொழிலதிபராக இருப்பார் 

11-ம் பாவத்தில் சந்திரன் இருந்தால்

  •  அந்த ஜாதகருக்கு லக்ஷ்மியோகம் இருக்கும் 
  • பெயர் புகழ் பணம் வசதியுடன் இருப்பார் 
  • ஆனால் வயிற்றுநோய் இருக்கும் 
  • சந்திரன் பலமாக இருந்தால் முன்கூட்டியே அவர் பல விஷயங்களை அறிய கூடியவராக இருப்பார் 
  • பலருக்கு நன்மைகள் செய்வார் 
  • சந்திரனை சனியும் ராகுவும் பார்த்தால் அவருக்கு மனதில் பிரச்சனை உண்டாகும் 
  • உணவு விஷயத்தில் கட்டுப்பாடு இல்லாமல் இருப்பார் 

12ல் சந்திரன் இருந்தால் 

  • அந்த ஜாதகர் அதிகமாக சாப்பிடுவார் 
  • அதிகமாக தூங்குவார் 
  • தேவையற்றதை பேசுவார் 
  • வயிற்றில் நோய்வரும் 
  • சந்திரனை சனி பார்த்தால் மனதில் பிரச்சனை இருக்கும் ஆனால் தூக்கம் வராது 
  • செவ்வாயுடன் சந்திரன் இருந்தால் அவருக்கு திருமண தடை உண்டாகும்
  •  சந்திரன் சூரியன் சனி 12ல் இருந்தால் பித்ரு தோஷம் உண்டாகும்
  •  வீட்டில் சண்டை இருக்கும் 

பரிகாரம் :

  • தினமும் சிவனை வழிபட வேண்டும் 
  • பால், கரும்புச் சாறு, தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும்
  •  இருட்டான அறையில் படுக்க கூடாது 
  • கருப்பு, நீலம், அடர்த்தியான பிரவுன் நிற ஆடைகளை அணியக்கூடாது
  •  வறுத்த பொருட்களை சாப்பிடக்கூடாது 
  • சூரியன் மறைந்த பிறகு வாழைப்பழம், ஆப்பிள் ,முள்ளங்கி சாப்பிடக்கூடாது 
  • வீட்டில் வடகிழக்கு, வடக்கு திசையை சுத்தமாக இருக்க வேண்டும்
  • உளுந்தால் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும்
எனது அனைத்து  பதிவுகளையும் ஒரே கிளிக்கில் படிக்க …
👇

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular