Friday, July 26, 2024
Homeஅடிப்படை ஜோதிடம்அடிப்படை ஜோதிடம்-பகுதி -2-சுப அசுப கிரகங்கள்

அடிப்படை ஜோதிடம்-பகுதி -2-சுப அசுப கிரகங்கள்

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

அடிப்படை ஜோதிடம்-சுப அசுப கிரகங்கள்

நன்மை, தீமை செய்யும் கிரகங்களை எவ்வாறு வகைப்படுத்துவது?

சுப, அசுப கிரகங்களை இரு வகையில் வகைப்படுத்தலாம். அவை:

(1) இயற்கையான சுப, அசுப கிரகங்கள்

(2) லக்ன அடிப்படையிலான சுப, அசுப கிரகங்கள்

இனி விரிவாகப் பார்ப்போம்

 இயற்கையான சுப, அசுப கிரகங்கள்

இயற்கையான சுபகிரகங்கள்:

குரு, சுக்கிரன், தீய கிரகங்களுடன் சேராத புதன், வளர்பிறைச் சந்திரன்.

இயற்கையான அசுபகிரகங்கள்:

சூரியன், செவ்வாய், சனி, இராகு, கேது, தீய கிரகங்களுடன் சேர்ந்த புதன், தேய்பிறைச் சந்திரன்.

 லக்ன அடிப்படையிலான சுப, அசுப கிரகங்கள்

ஒவ்வொருவரின் ஜென்ம லக்னத்திற்கு ஏற்ப கிரகங்களின் சுப, அசுபத் தன்மை மாறுபடுகிறது. உதாரணத்திற்கு இயற்கையில் சுபனான குரு, மகர லக்னத்திற்கு பாவியாகி தீய கிரகமாகிறான். இதே போல் இயற்கையில் அசுப கிரகமான செவ்வாய், கடக லக்னத்திற்கு யோகம் செய்வராக மாறி, சுபத் தன்மை பெறுகிறார்.

இவ்வாறு மற்ற லக்னங்களுக்கும் சுப, அசுப கிரகங்களின் அட்டவணை தரப்பட்டுள்ளது. லக்ன அடிப்படையில் சில கிரகங்கள் மாரகர்களாக மாறுகின்றனர். மாரகர்கள், கொடியவர்கள், தீமை செய்பவர்கள். அவர்களே ஜாதகரின் மரணத்தை ஜாதக அடிப்படையில், சனிபகவானுடன் (ஆயுள்காரகன்) கூட்டணி அமைத்து தீர்மானிப்பவர்கள்.

சில மாரகர்கள் அவர்கள் ஜாதகத்தில் தாம் இருக்கும் இடத்தைப் பொறுத்து, மரணத்தை தராமல், மாரகத்திற்கொப்பாகிய கண்டத்தைக் கொடுப்பவர்கள்.

புதன் சில ஜாதகங்களில், தீய கிரகச் சேர்க்கையால் சுபலனையும், மாரகத்தையும் கலந்து செய்வதை அனுபவத்தில் காணலாம்.

சுப அசுப கிரகங்கள்

இந்த கட்டுரையின் மூலம் நாம் அறிந்துகொள்வது யாதெனில், எந்த ஒரு கிரகத்தையும், சுப கிரகம் என்றோ, அசுப கிரகம் என்றோ சட்டென்று முடிவு செய்ய இயலாது. ஆராய்ந்தே ஒரு முடிவுக்கு வர இயலும்.

இயற்கை சுப கிரகங்களுக்கு சொந்தமான நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பொதுவாக சாத்வீக குணமுள்ளவராக இருப்பார்கள். இருப்பினும் அவர்கள் யோக வாழ்க்கையை அனுபவிக்க தக்க வயதில் வரும் தசைகளின் தசா நாதர்கள், லக்கின அடிப்படையில் சுப கிரகங்களாகி, ஜாதகத்தில் நல்ல நிலையில் இருப்பது மிக அவசியமாகும்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்103ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

1 COMMENT

  1. ஸ்திர லக்னத்திற்கு ( கும்ப) 3,8 மாரகர் ஆனால் செவ்வாயும் , புதனுமல்லவா மாரகர்கள் . நீங்கள் சொல்லும், சந்திரன் செவ் எப்படி மாரகர் ஆவர் ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular