அடிப்படை ஜோதிடம்-பகுதி-3
கிரகங்கள், ஆட்சி, உச்சம், நீசம்,மூலத்திரிகோணம்
பொதுவாக ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஆட்சி, உச்சம், நட்பு, பகை, நீசம் என ஒவ்வொரு ராசியில் உள்ளது. உதாரணமாக மேஷ ராசியில் சூரியன் உச்சம். ரிஷபத்தில் சந்திரன் உச்சம். கடகத்தில் செவ்வாய் நீசம். சனி பகை என்று ஒவ்வொரு கிரகத்துக்கும் சொல்லப்பட்டுள்ளன.
பொதுவாக மக்களிடையே ஆட்சி, உச்சம், நட்பு பெற்ற கிரகங்கள் பற்றி சில மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன.
6, 8, 12-க்குடைய கிரகம் ஆட்சி,உச்சம், நட்பு பெற்றால் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கும்.
6-க்குடையவர் நீசம் பெற்றால் கடன், நோய், எதிரி, வம்பு, வழக்கு ஏற்படாது.
8-க்குடையவர் நீசம் ஆயுள் பங்கம் ஏற்படும்.
6-குடையவர் ஆட்சி பெற்றால் சரள யோகம்.
12-க்குடையவர் நீசம் பெற்றால் விரையம் குறையும். அதே நேரத்தில் வெளிநாடு செல்ல நேரும். தூக்கம் கணவன்-மனைவி தாம்பத்திய உறவு பாதிக்கும்.
எனவே ஒவ்வொரு கிரகத்திற்கும் நன்மையும் தீமையும் கலந்தே பலன்கள் நடைபெறும். யோகத்தை செய்யும் கிரகம் நீசம், பகை,அஸ்தமனம், கிரக யுத்தம், மறைவு போன்றவற்றால் பாதிப்படைய கூடாது. பாதித்தால் முழுமையான பலன்கள் கிடைக்காது. யோகத்தை செய்யாத கிரகம் நீசம், பகை, அஸ்தமனம், போன்றவற்றால் பாதிப்பு அடைய வேண்டும். நன்மைகள் உண்டாகும்.

பொதுவாக ஆட்சி, உச்சம், நீசம் பெற்ற கிரகம் ஒரு ராசியில் இருக்கும் பொழுது ஒரு குறிப்பிட்ட டிகிரி வரை இருக்கும். அந்த டிகிரியில் இருக்கும் வரை ஆட்சி, உச்சம், நீசம், மூலத்திரிகோணம் உறுதியாக உள்ளதாக அர்த்தம். அந்த குறிப்பிட்ட டிகிரியில் இல்லையென்றால் மேற்கண்ட நிலையை அடைவதில்லை. சமநிலையில் அல்லது நட்பு நிலையில் உள்ளதாக அர்த்தம்.
ஆட்சி, உச்சம், மூலதிரிகோணம் நீசம் என பொதுவாக ஜாதகத்தில் உள்ளதை மேலோட்டமாக நம்பி ஏமாறக்கூடாது மேலே தரப்பட்டுள்ள அட்டவணையில் எந்தெந்த டிகிரியில் கிரகங்களின் நிலை எவ்வாறு உள்ளது என்பதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்…
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்..