Friday, September 29, 2023
Homeஅடிப்படை ஜோதிடம்அடிப்படை ஜோதிடம்-பகுதி-12-திரேகாணம்

அடிப்படை ஜோதிடம்-பகுதி-12-திரேகாணம்

ASTRO SIVA

google news astrosiva

திரேகாணம் 

ஒரு ராசியை மூன்று பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு 10 பாகைகளும் ஒவ்வொரு திரேகாணம் எனப்படும். ஒரு ராசியின் முதல் 1° டிகிரி முதல் 10°டிகிரி முதல் முதல் திரேகாணம். 10° டிகிரி முதல் 20° டிகிரி வரை இரண்டாவது திரேகாணம் 20° டிகிரி முதல் 30° டிகிரி வரை மூன்றாவது திரேகாணம் எனப்படும். ஒவ்வொரு ராசிக்கும் 1,5, 9 ஆம் அதிபதிகள் திரேகாண அதிபதிகள் அவர்கள். 

உதாரணமாக ஒரு கிரகம் மேஷ ராசியில் இருப்பதாக வைத்துக்கொள்வோம் அது  1°டிகிரி முதல் 10° டிகிரிக்குள் இருந்தால் திரிகாண சக்கரத்தில் அது மேஷத்திலேயே இருக்கும். அந்த கிரகம் 10° டிகிரி முதல் 20° டிகிரிக்குள் இருந்தால் மேஷத்தின் 2வது திரேகாணத்தில்  உள்ளது. எனவே அதற்கு 5ஆம் இடமான சிம்மத்தில் திரேகாண சக்கரத்தில் போடவேண்டும். அந்த கிரகம் 20° டிகிரி முதல் 30° டிகிரிக்குகள் இருந்தால் அது 3வது திரேகாணத்தில் இருக்கிறது எனவே  9-ஆம் வீடான தனுசுவில் போடவேண்டும்

இந்த மூன்று வகைகளில் அந்த கிரகம் எந்த திரேகாணதில் இருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதற்கு தகுந்தாற்போல் திரேகாணச் சக்கரத்தில் கிரகங்களை அடைக்க வேண்டும். 

ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள உதாரண ஜாதகத்தை எடுத்துக்கொண்டு அதன் பாகை-கலை  சுத்தமாக கிரக  நிலையை அறிந்து அதற்கேற்றாற்போல் சக்கரம் தயார் செய்வோம்.transparent அடிப்படை ஜோதிடம்-பகுதி-12-திரேகாணம்

திரேகாணம் 
திரேகாணம் 
astro2 அடிப்படை ஜோதிடம்-பகுதி-12-திரேகாணம்

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் ..நன்றி

நன்றியுடன்! 

சிவா.சி  

✆9362555266

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular