Thursday, March 28, 2024
Homeஅடிப்படை ஜோதிடம்மகர லக்னம் பற்றிய விரிவான தகவல்கள்

மகர லக்னம் பற்றிய விரிவான தகவல்கள்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

மகர லக்னம்

ராசி மண்டலத்தில் பத்தாவது ஸ்தானம் மகர லக்னம். இது கால புருஷனின் இரு முழங்கால்களையும் குறிக்கும். இது சர ராசியாகும். இரட்டை அல்லது ஸ்திரீ ராசி எனப்படும். பிருஷ்டோதய ராசி. இரவில் பலம் கொண்டது. தெற்கு திக்கைக் குறிக்கும். இதற்கதிபதி சனி பகவான். இதில் அடங்கியுள்ள நட்சத்திரங்கள் உத்திராடம் 2, 3, 4வது பாதங்களும். திருவோணமும், அவிட்டம். முதல் இரண்டு பாதங்களாகும்.

மகர லக்னத்தில் பிறந்தவர்களின் குண நலன்கள்

இதில் பிறந்தவர்கள் தடுத்தர உயரமுடையவர்கள். நல்ல உடலமைப்பு கொண்டவர்கள். பேச்சில் வல்லவர்கள். நிதானமாகவும், தெளிவாகவும். அழுத்தந்திருத்தமாகவும் பேசுவார்கள். எதையும், எளிதில் மனதில் பதியவைத்துக்கொள்வார்கள் எடுத்த காரியத்தை விடாமுயற்சியுடன் செய்து முடிப்பார்கள்.

மகர லக்னம்

இளகிய மனம் கொண்டவர்கள். பிறர் துன்பத்தைக் கண்டு மனமிரங்கி தம்மால் இயன்ற உதவியைச் செய்வார்கள். அதே சமயம் பண விஷயத்தில் கெட்டியானவர்கள். வீண் செலவு செய்யமாட்டார்கள். ஆகையால் இவர்கள் ஓரளவு புணம் சேர்ப்பார்கள். ஜனன காலத்தில் இந்த லக்னத்தை குரு பார்த்தால் பல லட்சங்கள் சம்பாதிப்பார்கள். கொஞ்சம் சங்கோஜப் பேர்வழி. நேர்மைக்கும் நியாயத்திற்கும் கட்டுப்பட்டவர்கள், சாஸ்திர ஆராய்ச்சியில் நாட்டமுள்ளவர்கள்.

கிரகங்களின் ஆதிபத்திய பலன்கள்

சூரியன்

8ஆம் இடத்திற்கு உடையவர். சூரியனுக்கும் சந்திரனுக்கும் அஷ்டமாதிபத்திய தோஷம் இல்லை என்பதால் இவர் பாபி அல்ல. கெடுபலன்களை அளிக்கமாட்டார். ஆனாலும் யோக பலன்களையும் தரமாட்டார். இவர் வலுத்தால் தீர்க்காயுள், பொருளாதார ஏற்றம், அரசால் ஆதாயங்களும் அனுகூலங்களும் ஏற்படும்.

இவர் 8ல் ஆட்சியானால் ஜாதகர் பொறியியல் படிப்பும், தொழில் நுண்ணறிவு பெற மேல்நாடு செல்லும் யோகமும் கிட்டும்.

சந்திரன்

7-க்குடையவர், சர லக்னத்திற்கு 7-ம் இடம் மாரக ஸ்தானமானதால் மாரகாதிபத்தியம் பெற்றுப் பாபியாகிறார். இவர் வலுத்தால் களத்திர பாவம் விருத்தியடையும், மனைவி திறமைசாலி. இனியசுபாவம் உள்ளவன் சத்புத்திர பாக்கியம் உள்ளவன்.அதே சமயம் ஆரோக்கியம் கெடும். சீதள சம்பந்தமான வியாதி தொந்திரவு கொடுக்கும்.

மகர லக்னம்

இவர் கெட்டால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அதே சமயம் களத்திர பாவம் கெடும். சந்திரன் 2-ல் இருந்தால் மனைவி வந்தபிறகு இழந்த பொருள்களை மீண்டும் சம்பாதிக்கும் யோகம் ஏற்படும். வளர்பிறை சந்திரன் மாரகாதிபத்தியத்துடன் கேந்திராதிபத்தியமும் பெறுகிறார். இவர் மறைவது நல்லது என்பது மேதைகளின் கருத்து.

செவ்வாய்

4-ம் இடத்திற்கும் 11-ம் இடத்திற்கும் ஆதிபத்தியம் பெறுகிறார். சர லக்னத்திற்கு 11-ம் இடம் பாதகஸ்தானமானதால் செவ்வாய் பாதகாதிபதியாகிறார். 11ஆம் இடம் லாபஸ்தானம். தனமும் லாபமும் முக்கியம்.

செவ்வாய் வலுத்தால் பொருளாதாரம் நன்றாக இருக்கும். தாய், சுகம், வீடு, வாகனம் ஆகியவை சிறப்பாக அமையும். ஆனால் ஆரோக்கியம் கெடும். இவர் கெட்டால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆனால் நஷ்டமும், பொருளாதாரம் கெடுதலும். 4ஆம் இடத்தின் காரகங்கள் கெடுதலும் நேரும்.

புதன்

ரண, ருண, ரோக, சத்துருஸ்தானமான 6-ம் இடத்திற்கும் பாக்கியஸ்தானமான, வலுத்த திரிகோணமான 9-ம் இடத்திற்கும் அதிபதியான புதனை 6-ம் இட ஆதிபத்தியம் பாதிக்காது. ஆகவே சுபனாகவே சொல்லப்பட்டுள்ளது. இவர் வலுத்தால் உத்தியோக உயர்வு, அரசால் ஆதாயங்கள், அனுகூலங்கள், வியாபார விருத்தி, வியாபாரம் மூலம் வருமானம், பாக்கிய விருந்தி ஆகிய நற்பலன்களை அளிப்பார், அதே சமயம் உடல்நலக் குறைவும் ஏற்படும்.

இவர் கெட்டால் 6ம் இடத்தின் கெடுபலன்கள் ஏற்படா. ஆனால் சத்துருக்களாலும் தாய்மாமனாலும் நஷ்டங்களும் விரயங்களும் ஏற்படும்.

குரு

தைரியஸ்தானமான 3-ம் இடத்திற்கும் விரயஸ்தானமான 12-ம் இடத்திற்கும் அதிபதியாகையால் பாபியாகிறார். இவர் வலுத்தால் இளைய சகோதரம் விருத்தியடையலாம். மற்றபடி வலுத்த குரு பொருளாதாரத்திற்கு நல்லதல்ல.

இவர் 6, 8ல் மறைந்தாலோ, லக்னத்தில் நீசம்பெற்றாலோ, நல்லது. மற்ற இடங்களில் இருப்பது நல்லதல்ல. ஆனாலும் 3க்குடை யவர் 10ல் இருந்தால் உயர் பதவியை அளிப்பார்.

சுக்கிரன்

திரிகோணஸ்தானமான 5க்கும், வலுத்த கேந்திரமான 10க்கும் ஆதிபத்தியம் பெறும் சுக்கிரன் பூர்ண ராஜயோகக்காரகராகிறார். புத்திரபாக்கியம், புத்திரர்களுக்குச் சுபபலன்கள்; புத்திரர்களால் அனு கூலம். எதிர்பாராத வரவு, உத்தியோகம், கவுரவம், அந்தஸ்து ஆகிய சுபபலன்களை வலுத்த சுக்கிரன் அளிப்பார். சுக்கிரன் புதனுடன் சேர்ந்தால் ராஜயோகமாகும். இவர் கெடக்கூடாது.

அரசியல், நாடகம், நாட்டியம், சினிமா, சங்கீதம், ஏற்றுமதி, இறக்குமதி, போக்குவரத்து விமானநிலையம், அரசு அலுவலகம் ஆகிய துறைகளில் உத்தியோகம் அமையும். வாகனம், வாகனங்களின் உபரிபாகம் வாசனைப்பொருள், அலங்காரப் பொருள், புத்தகம் ஆகியவற்றின் வியாபாரம் விருத்திபெறும்.

சனி

லக்னத்திற்கும் தன ஸ்தானத்திற்கும் அதிபதியாகிறார். ஆகையால் சுபராகிறார். இவர் வலுத்தால் தீர்க்காயுள், ஆரோக்கியம், புகழ், பொருளாதாரம் ஆகியவை நன்றாக இருக்கும். இவர் கெட்டால் ஆயுள் குறையும். பொருளாதாரம் திருப்தியாக இருக்காது. கஷ்ட நஷ்டங்களும் கெட்ட பெயரும் ஏற்படும்.

மகர லக்னம்

சர லக்னத்திற்கு 2-ம் இடம் மாரக ஸ்தானமானதால் மாரகாதிபத்தியமும் ஏற்படுகிறது. இவர் 2ல் ஆட்சியானால் ஆரோக்கியம் பாதிக்கப்படுமே தவிர, மாரகம் செய்யமாட்டார். இவர் 4ல் நீசமானால் தன் தசையில் யோக பலன்களை அளிப்பார் இவர் 8ல் இருந்தால் 3ம் பார்வையால் தன் உச்சவீடும் ஜீவனஸ்தானமுமான 10ம் இடத்தையும் தன் சொந்த வீடான தனஸ்தானத்தையும் பார்ப்பதால் தன் தசையில் யோக பலன்களை அளிப்பார். லக்னாதிபதி என்ற முறையில் இவர் கோணமேறுவதும் நல்லதே.

சுபர் அசுபர் விளக்கம்

கோணமான 5-ம் இடத்திற்கும் வலுத்த கேந்திரமான 10-ம் இடத்திற்கும் ஆதிபத்தியம் பெறுவதால் சுக்கிரனும், வலுத்த கோணமான 9-ம் இட ஆதிபத்தியம் பெற்றதால் புதனும் சுபர்கள் என்பது அனைத்து நூலாசிரியர்களின் ஒருமித்த கருத்து. லக்னாதிபதியானாலும் மாரகாதிபத்தியமும் பெறுவதால் சனியைச் சுபர் என்று சொல்லவில்லை.

ஆக சுக்ரன்,புதன் இருவரும் சுபர். ஆனால் சந்திரகாவிய நூலாசிரியர் செவ்வாயும் சுபர் என்கிறார். 4 ஆம் வீட்டு ஆதிபத்தியம் காரணமாக இருக்கலாம்.

பாபி

சந்திரன், செவ்வாய், குரு மூவரும் பாபி என்பது பெரும்பாலான கருத்து. சந்திரகாவிய ஆசிரியர் செவ்வாய் சுபர். குரு, சந்திரன் இருவரே பாபி என்கிறார்.

மாரகஸ்தானமான 7-ம் இடத்திற்கு அதிபதியாவதால் சந்திரன் அபமிருத்யு தோஷம் பெற்றுப் பாபியாகிறார். 3க்கும் 12க்கும் உடைய குருவும் பாபியாகிறார். பாதகாதிபத்தியம் பெறுவதால் செவ்வாயும் பாபி என்று பெரும்பாலும் சொல்லப்பட்டுள்ளது. சந்திர காவிய நூலாசிரியர் மட்டும் செவ்வாயைச் சுபர் என்கிறார்.

யோகாதிபதி

கேந்திரம் கோணம் ஆகிய இரண்டு ஆதிபத்தியமும் பெறுவதால், 5,10க்குடைய சுக்ரன் பூர்ண ராஜயோககாரகர் ஆகிறார். புதன் 9ஆம் ஆதிபத்தியம் வலுத்த கோணமானதாலும் 9ஆம் இடமான கன்னி மூலத் திரிகோண ஸ்தானமானதாலும் 6ஆம் இடத்தாதிபத்தியம் அடிபட்டுப் போவதால் யோகாதிபதியாகிறார்,இவர் சுக்ரனுடன் சேர்ந்தால்தான் யோகத்தைக் கொடுப்பார் என்பது பலரின் கருத்து; ஆக யோகாதிபதிகள் சுக்ரன், புதன்.

மாரகாதிபதி

சனி 2க்குடையவர், சந்திரன் 7 குடையவர், குரு 12க்குடையவர், சூரியன் 8க்குடையார் செவவாய் 11ஆம் இடமான பாதகஸ்தானாதிபதி,

பொதுவாக இந்த ஐவரும் மாரகாதிபதிகள். சனி கொல்லக்கூடியவர் என்று ஜாதகஅலங்கார நூலாசிரியர் சொன்னாலும் லக்னாதிபதியும் ஆயுள்காரகனும் ஆனதால் சனி கொல்லமாட்டார். என்பது பெரும்பாலான கருத்து. சூரியனுக்கு அஷ்டமாதிபத்திய தோஷமேற்படாதாகையால் சூரியனும் கொல்லமாட்டார். ஆகையால் சந்திரன், குரு, செவ்வாய் மூவரும் கொல்லக் கூடியவர்கள். சந்திர காவிய நூலாசிரியரின் கருத்துப் படி சந்திரனும் குருவுமே வலுத்த மாரகாதிபதிகள்.

முக்கிய நிகழ்ச்சிகள் நேரும் காலம்

மாதுர் தோஷம் (தாய்க்கு கண்டம்)

  • சூரிய தசை-ராகு, , சுக்கிர புக்திகள்.
  • சந்திர தசை-ராகு, குரு, சனி புக்திகள்.
  • செவ்வாய் தசை-ராகு, குரு, சனி புக்திகள்.
  • குரு தசை-சனி, சுக்கிரன், ராகு புக்திகள்.
  • சனி தசை – சுக்ரன், சந்திரன், ராகு புக்திகள்.
  • சுக்ர தசை – சந்திரன், ராகு, குரு, சனி புத்திகள்.
  • ராகு தசை-ராகு, குரு, சனி, சந்திர புக்திகள்,

மேற்படி காலங்களில் தாயாருக்குக் கண்டாதிபிணிகளோ, மரணமோ அல்லது தாயாரால் கஷ்ட நஷ்டங்களும் அவருடன் விரோதமும் பிரிவினையும் ஏற்படக்கூடும்.

பிதுர்தோஷம்(தந்தைக்கு கண்டம்)

  • சூரிய தசை-செவ்வாய், குரு, கேது புக்திகள்.
  • ராகு தசை – குரு, சனி, சுக்கிர புக்திகள்.
  • சனிதசை-சனி, சுக்கிரன், குரு புக்திகள்.
  • சுக்கிர தசை-சுக்கிரன், சனி, குரு புக்திகள்.

மேற்படி தசாபுக்திக் காலங்களில் தகப்பனாருடன் விரோதமோ, பிரிவினையோ அல்லது அவருக்குக் கண்டாதிபிணிகளோ நேரலாம்.

மகர லக்னம்

திருமணம் நடைபெறும் காலம்

  • ராகு தசை-குரு, புதன்,சுக்கிரன், சந்திர புக்திகள்.
  • சந்திர தசை-குரு, புதன், சுக்கிர புக்திகள்.
  • சனி தசை-புதன், சுக்கிரன், சந்திர புக்திகள்.
  • புதன் தசை – சுக்கிரன், சந்திரன், குரு புக்திகள்.
  • கேது தசை-சுக்ரன், குரு, புதன் புக்திகள்.
  • சுக்கிர தசை-சந்திரன், சனி புத புக்திகள்.

மேற்படி தசாபுக்திக் காலங்களில் திருமணம் நடக்கக் கூடும். மனைவிக்குச் சுபபலன்களும் மனைவியால் ஆதாயங்களும் அனுகூலங்களும் ஏற்படக்கூடும்.

களத்தில் தோஷம்(மனைவிக்கு கண்டம்)

  • சந்திர தசை-ராகு சனி கேது புக்திகள்.
  • ராகு தசை-ராகு சளி கேது சுக்கிர புக்திகள்.
  • சனி தசை-சனி கேது சுக்ரன் சூரிய புக்திகள்.
  • புத தசை-கேது ராகு சனி புக்திகள்.
  • கேது தசை-கேது சுக்ரன் சூரியன் ராகு புத்திகள்.
  • சுக்கிர தசை-சூரியன் செவ்வாய் குரு புக்திகள்,

மேற்படி தசாபுத்திக் காலங்களில் மனைவியுடன் விரோதம்; மனஸ்தாபம்: பிரிவினை அல்லது மனைவிக்கு கண்டாதி பிணிகள் அல்லது மரணமோ கூட நேரலாம்.

புத்திர பாக்கியம்

  • ராகு தசை-சுக்ரன் சந்திரன் புக்திகள்.
  • குரு தசை -குரு புதன் சந்திரன் ராகு புக்திகள்.
  • சனி தசை – புதன் சந்திரன் ராகு குரு புக்திகள்.
  • சுக்கிரதசை-சூரியன், சந்திரன், ராகு, குரு புக்திகள்.

மேற்படி காலங்களில் புத்திரப்பேறு பெறுவதோ, புத்திரர்களுக்கு முன்னேற்றமான பலன்கள் கிடைப் பதோ, புத்திரர்களுக்கு சுபகரியங்கள் நடப்பதோ அவர்களால் அனுகூலமும் ஆதாயமும் கிடைப்பதோ நடைபெறலாம்.

புத்திர தோஷம்(பிள்ளைகளுக்கு கண்டம்)

  • சூரிய தசை-ராகு,குரு. சனி புக்திகள்.
  • ராகு தசை-சனி, புதன்,செவ்வாய் புக்திகள்.
  • சனி தசை -புதன், கேது. சூரியன், ராகு புக்திகள்,
  • கேது தசை-கேது, சூரியன், ராகு. புதன் புக்திகள்,
  • சுக்கிர தசை-செவ்வாய், புதன், கேது புக்திகள்

மேற்படி தசா புக்தில் காலங்களில் புத்திரனால் கஷ்ட நஷ்டமோ, புத்திரருடன் மளஸ்தாபமோ, விரோதமோ, பிரிவினையோ அல்லது புத்திரனுக்குக் கஷ்ட நஷ்டங்கள், கண்டாதி பிணி அல்லது மரணமோ கூட நேரலாம். ஆகக்கூடி புத்திரசோகம் ஏதாவது ஒரு வழியில் நேரலாம்.

சகோதர தோஷம்(உடன் பிறப்புக்கு கண்டம்)

  • செவ்வாய் திசை – செவ்வாய்,கேது, சுக்கிரன், சூரியன் புத்திகள்.
  • ராகு தசை-குரு, கேது, சுக்கிரன் புக்திகள்.
  • குரு தசை- புதன், சூரியன்,செவ்வாய் புக்திகள்.
  • கேது திசை – கேது,சுக்ரன்,சூரியன், செவ்வாய் புத்திகள்
  • சுக்கிர தசை-செவ்வாய், ராகு, குரு, சனிபுக்திகள்

மேற்படி காலங்களில் சகோதரனால் கஷ்டநஷ்டகள்.விரோதம், பிரிவினை ஆகியவையோ அல்லது சகோதானுக்குக் கஷ்டநஷ்டங்களோ, கண்டாதி பிணிகளோ, மரணமோ ஏற்படலாம்.

மாரகம்(மரணம்)

  • சந்திரன் தசை-சந்திரன், செவ்வாய், சனி, சுக்கிரன்,சூரிய புக்திகள்.
  • குரு தசை – சந்திரன், செவ்வாய், சனி, சுக்கிரன்,சூரிய புக்திகள்.
  • செவ்வாய் தசை -சந்திரன், செவ்வாய், சனி, சுக்கிரன்,சூரிய புக்திகள்.

மேற்படி புக்திகளில் கஷ்ட நஷ்டம், கண்டாதிபிணிகள் மரணம் போன்ற கெடு பலன்கள் நேரக்கூடும்.

யோக காலங்கள்:

  • சுக்ர தசை-சந்திரன்,குரு,ராகு சனி புக்திகள்
  • புதன் தசை-சந்திரன்,குரு,ராகு சனி புக்திகள்
  • சனி தசை மூன்றில் ஒரு பாகம்.
  • ராகு தசை – முன்றில் ஒரு பாகம் ஆகிய காலங்களில் யோக பலன்களாக நடக்கும்.
மகர லக்னம்

யோகம் தரும் கிரக அமைப்புகள்

  • 5,10-க்குடைய சுக்ரன் 5ல் இருந்தால் யோகம்.
  • புதனும் சுக்கிரனும் லக்கினத்திலும் சந்திரன் 5-ல் இருந்து, குருவினால் பார்க்கப்பட்டால் யோகமாகும். அரசாளும் யோகம்.
  • லக்னத்தில்தில் குருவும் லாபஸ்தானத்தில் சுக்ரனும் செவ்வாயுமிருந்தால் குருதசை தன யோகத்தை அளிக்கும். சகோதரரால் தனம் கிடைக்கும்.
  • புதன், சூரியன், சந்திரன் கூடி லக்னத்தில் இருக்க செவ்வாயும் சுக்கிரனும் 12ல் இருந்தால் சகோதரர் மூலம் தனம் கிட்டும். சுயமாகவும் நிறைய சம்பாதிப்பான்.
  • புதனும் சனியும் கூடி 9ல் இருந்தால் யோகம்.
  • குருவுடன் சேர்ந்து ராகு 12ல் இருந்தால், ராகு யோகத்தை அளிப்பார்.
  • சந்திரன் கடகத்தில் ஆட்சியாகவும் மகரத்தில் செவ்வாய் உச்சமாகவும் இருந்தால் ராஜயோகம்.
  • செவ்வாய், குரு,சனி,சூரியன் நால்வரும் உச்சமானால் ராஜயோகம்.
  • செவ்வாய், குரு, சனி உச்சமானால் ராஜயோகம்.
  • செவ்வாய், குரியன், சனி உச்சமானால் ராஜயோகம்.
  • செவ்வாயும் குரு, சனி, சூரியன் ஆகியோரில் யாரேனும் ஒருவர் உச்சமானாலும் யோகம்.
  • புதனும் சுக்கிரனும் கூடினால் தர்மகர்மாதிபதி யோகம்.
  • சந்திரன் 7ல் ஆட்சி பெற சுக்ரன் 5-லோ 10-லோ ஆட்சி பெற, குரு 3-ல் இருந்து சந்திரனைப் பார்த்தால் திருமணத்திற்குப் பின் நல்ல யோகம் ஏற்படும்.
  • 7.9.10 ஆகிய வீட்டிற்குடையவர்கள் ஆட்சியானால் அரசாளும் யோகம்.
  • 4ஆமாதி 10 ஆமாதி பரிவர்த்தளையானால் பெரிய பதவியும் புகழும் கிட்டும்.
  • 4 ஆமதியுடன் சனி சேர்ந்து உச்சமானால் ராணுவம், போலீஸ், அரசாங்கம் ஆகியவற்றில் பெரிய அதிகாரியாவான்.
  • 5-ம் அதிபதி 7-ம் அதிபதி பரிவர்த்தனையானால் மனைவியால் அதிர்ஷ்டம்.
  • சனி புதன் சுக்கிரன் மூவரும் லக்னத்தில் அமர்ந்து குருவால் பார்க்கப்பட்டால் யோகம் பல லட்சங்களுக்கு அதிபதியாவான்.
  • 10ல் குருவும் 3ல் சுக்கிரனும் பரிவர்த்தனை பெற்றால் பெரிய பதவி வகிக்கும் யோகம்.
  • குரு 2லோ, 12லோ ஆட்சியானால் சுப பலனை அளிப்பார்.
  • 3ம் அதிபதி 10ல் ,10ம் அதிபதி ஆட்சி, 11-ல் சூரியன், புதன்,கேது பாராளுமன்ற உறுப்பினர், அரசியல், புகழ்,
  • மாரகாதிபதி சந்திரன் 8ல் 7ல் வக்கிர சனி பாதகாதிபதி செவ்வாயும் பாதகஸ்தானத்தில் இருந்து சனியை பார்க்கிறார்.ஜென்ம சனியில் சந்திரதசை கேது புத்தியில் விபத்தால் மரணம்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்183இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்158ஜோதிட தொடர்101ஆன்மிக தகவல்92அம்மன் ஆலயங்கள்62குரு பெயர்ச்சி பலன்கள்53108 திவ்ய தேசம்52பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19ராசிபலன்19அற்புத ஆலயங்கள்18தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சுபகிருது வருட பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413புத்தாண்டு பலன்கள்-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8கருட புராணம்7திருமண பொருத்தம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6சித்தர்கள்5தை மாதம்5தினம் ஒரு திருவாசகம்3ஜோதிட கருத்து கணிப்பு3மார்கழி மாத ராசி பலன்கள்-20232ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2தை மாத பலன்கள்1மார்ச் மாத ராசி பலன் 20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231மாசி மாத பலன்கள்1பங்குனி மாத ராசி பலன்கள் -20241

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular