Friday, July 26, 2024
Homeஅடிப்படை ஜோதிடம்அடிப்படை ஜோதிடம் -பகுதி-21-நவாம்சம்

அடிப்படை ஜோதிடம் -பகுதி-21-நவாம்சம்

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

அடிப்படை ஜோதிடம் -பகுதி-21-நவாம்சம் 

 நவாம்சம் என்பது ஒரு ராசியை ஒன்பது சம பாகங்களாக பிரித்து ,ராசியில் உள்ள கிரகம் அது எந்த பகுதியில் உள்ளது என்பதை காட்டுவதாகும் 

ராசி சக்கரம் என்பது கிரகங்களின் நிஜமான தோற்றம் ஆகும் .நவாம்சம் என்பது அதனுடைய நிழல் என்றே  கூறலாம் .ஒரு கிரகத்திற்கு கிடைத்திருக்கும் சுப ,அசுப வர்க்கங்களை கணிக்க மட்டுமே நவாம்சம் சொல்ல பட்டது .அதில் கிரகங்களுக்கு பார்வை இல்லை ,மறைவு ஸ்தானமும் இல்லை .ஆனால் சேர்க்கை வர்கோத்தமம் உண்டு .

ராசி சக்கரம் என்னும் உண்மைநிலையில் மட்டுமே கிரகங்களுக்கு பார்வை உண்டு .நவாம்சம் என்பது ராசி சக்கரத்தை ஒன்பதின் மடங்கில்  எந்த கிரகம் எங்கே ? எந்த துல்லிய நிலையில் சுபத்துவ ,பாபத்துவ அமைப்பில் உள்ளது என்று பார்க்க உதவுகிறது 

மேலும் நவாம்சத்தை வைத்து திருமண வாழ்க்கையை துல்லியமாக கூற முடியும்.

நவாம்சம் எப்படி போட வேண்டும்? 

நவாம்ச கட்டம் போடுவதற்கு முன் கிரகங்களுக்குரிய நட்சத்திரங்கள் பற்றி  தெரிந்திருக்க வேண்டும் 

சூரியன் -கார்த்திகை ,உத்திரம் ,உத்திராடம் 

சந்திரன்- ரோகினி ,அஸ்தம் ,திருவோணம் 

செவ்வாய்-சித்திரை ,அவிட்டம் ,மிருகசீரிடம்  

ராகு-சுவாதி ,சதயம் ,திருவாதிரை  

குரு-புனர்பூசம் ,பூரட்டாதி  ,விசாகம்  

சனி- பூசம், அனுஷம், உத்திரட்டாதி  

புதன்-ஆயில்யம் ,கேட்டை ,ரேவதி  

கேது-அசுவினி ,மகம் ,மூலம்  

சுக்கிரன்- பரணி ,பூராடம் ,பூரம் 

நவாம்சம் கணிக்கும் முறை :

சந்திரன் ,குரு ,கேதுவின் நட்சத்திரங்களின் பாதம்-மேஷம் முதல் கடகம் 

செவ்வாய் ,சனி ,சுக்கிரன் நட்சத்திரங்களின் பாதம்-சிம்மம்  முதல் விருச்சிகம் 

சூரியன் ,புதன் ,ராகு நட்சத்திரங்களின் பாதம்-தனுசு முதல் மீனம்  

உதாரண ஜாதகத்தின் ராசி கட்டம் 

WhatsApp%2BImage%2B2021 03 25%2Bat%2B12.59.40%2BPM அடிப்படை ஜோதிடம் -பகுதி-21-நவாம்சம்

 

 

 

 உதாணர ஜாதகத்தின் அம்ச கட்டம் 

WhatsApp%2BImage%2B2021 03 25%2Bat%2B1.00.02%2BPM அடிப்படை ஜோதிடம் -பகுதி-21-நவாம்சம்

 

உதாரண ஜாதகத்தின் நட்சத்திர பாதம் 

கிரகம் ராசி தீர்க்காம்சம் நட்சத்திர பாதம்
லக்னம் கடகம் 22:32 ஆயில்யம்-2
சூரியன் தனுசு 19:39 பூராடம் -2
சந்திரன் துலாம் 27:41:00 விசாகம்-3
செவ்வாய் மீனம் 27:59:00 ரேவதி-4
ராகு கும்பம் 14:05 சதயம் -3
குரு ரிஷபம் 03:00 கிருத்திகை -2
சனி தனுசு 12:20 மூலம்-4
புதன் மகரம் 07:34 உத்திராடம்-4
கேது சிம்மம் 14:05 பூரம்-1
சுக்கிரன் விருச்சிகம் 27:30:00 கேட்டை-4
மாந்தி கடகம் 01:42 புனர்பூசம்-4

 

குறிப்பு :
லக்கினம் புதனின் நட்சத்திரத்தில் இரண்டாம் பாதத்தில் உள்ளது ஆகையால் நவாம்சத்தில் மகரத்தில் போடவேண்டும் ..இதேபோல் பிற கிரகங்களையும் அதன் நட்சத்திர பாதத்தை பொறுத்து ..நவாம்சத்தில் போடவேண்டும் 
 
நவாம்ச லக்கினத்தின் பலன்களை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம் ….
 
நன்றியுடன்! 
சிவா.சி  
✆9362555266

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்103ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

1 COMMENT

  1. ஜோதிடம் கற்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. நன்றி .அடுத்த பதிவு நவாம்ச பலன் அறிதலை நோக்கிக் காத்திருக்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular