Friday, June 14, 2024
Homeஅடிப்படை ஜோதிடம்சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியங்கள்

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியங்கள்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

சிம்ம லக்னம்

ஐந்தாவது ராசியான ‘சிம்ம ராசி’ கால புருஷனின் வயிற்றைக் குறிக்கும். இது நெருப்பு தத்துவத்தைக் கொண்டது. சிரசால் உதிக்கும் சிரயோதய ராசி, ஒற்றை அல்லது ஆண் ராசி, ஸ்திர ராசி. இதில் மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் ஆகிய நட்சத்திரங்கள் அடங்கும். இந்த ராசிக்கு அதிபதி “சூரியன்”.

நவ நாயகர்களில் சூரியனை ராஜா என்றும் சந்திரனை ராணி என்றும் குறிப்பிடுவார்கள். ராஜாவின் வீடு அரண்மனை அல்லவா! அதனால் இந்த ராசியை ராஜராசி அல்லது அரச ராசி என்று வர்ணிக்கின்றோம். இது மிகவும் பொருத்தமானது. எப்படி எனில்? சூரியன் ராஜா அவரை மிஞ்ச யாரும் முடியாது அதனால் சூரியன் தன் வீட்டில் எந்த கிரகத்தையும் உச்சம் பெறவும் நீசம் பெறவும் இடம் கொடுக்கவில்லை. அதனால் எந்த கிரகமும் உரிமை கொண்டாட முடியாத அரச கிரகத்தின் அரச ராசியாகவே தனி சிறப்புடன் திகழ்கிறது.

சிம்ம லக்ன

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களின் பொது பலன்கள்

ஒரு அரசனுக்கு உள்ள கம்பீரம், ராஜதந்திரம், வீரம், சாகசம், தைரியம், பண்பு, நியாயம் தவறாமை ஆகிய குணங்கள் சிம்ம லக்னத்தாருக்கு இயற்கையாகவே உண்டு. புகழ்ச்சி இகழ்ச்சிகளால் பாதிக்கப்பட மாட்டார்கள். எதையும் மன்னித்து மறந்துவிடும் சுபாவம் கொண்டவர்கள். சாதுரியமாகவும், சமயோஜிதமாகவும் பேசும் திறமை படைத்தவர்கள். தெய்வ பக்தியும், வேத சாஸ்திரம் சம்பிரதாயங்களில் பற்றுள்ளவர்கள். தீர்க்க ஆயுள் உள்ளவர்கள்.

கிரகங்களின் ஆதிபத்திய பலன்

சூரியன்

லக்னாதிபதியானதால் யோகத்தை கொடுக்கக் கூடியவர். இவர் வலுத்தால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நல்ல புகழும் கீர்த்தியும் ஏற்படும். நிர்வாகத் திறமை உண்டு. பண வசதி தாராளமாக இருக்கும். இவர் கெடக்கூடாது கெட்டால் பண வசதியும் ஆரோக்கியமும் கெடும். வீண் பழியும் அவமானமும் ஏற்படும்.

“சூரியன்” ஆட்சி அல்லது உச்சமானால் வெகு விசேஷம். இவர் 6, 10, 11-ம் இடங்களில் இருக்கலாம். பொதுவாக 5-ல் சூரியன் விசேஷம் இல்லை என்றாலும் லக்னாதிபதியானதால் 5-ல் இருப்பது விசேஷமே.

சந்திரன்

லக்னாதிபதிக்கு நண்பரானாலும் ஆதிபத்தியம் சரியில்லை. விரயாதிபத்தியம் பெறுகிறார். இவர் 11-ல் இருப்பது விசேஷம். பொதுவாக எந்த லக்னத்திற்கும் 12க்குடையவர் 11ல் இருந்தால் தன் தீய பலன்கள் நீங்கி சுப பலன்களை அளிப்பார். ஆகையால் பதினோராம் இடத்து சந்திரன் பொருளாதார மேன்மையை அளிப்பார். இவர் சூரியனிடமிருந்து எவ்வளவு விலகி இருக்கிறாரோ அவ்வளவும் நல்லது. இவர் சனி அல்லது குருவுடன் சேர்ந்து 6 அல்லது 8 அல்லது 12 இல் இருந்தால் சுப பலன்களை அளிப்பார்.

செவ்வாய்

4-ம் இடத்திற்கும், 9-ம் இடத்திற்கும் உடையவர். கேந்திர ஆதிபத்தியமும், கோணாதிபத்தியமும் பெற்றதால் யோகாதிபதி ஆகிறார். சுகம், தாய், வித்தை, வீடு, வாகனம் ஆகியவற்றிற்கு 4-ம் அதிபத்தியத்தாலும், பிதா, பிதுர் பாக்கியம், புண்ணியம், பக்தி ஆகியவற்றிற்கு 9-ம் அதிபத்தியத்தாலும் காரகராகும் செவ்வாய் வலுத்தால் மேற்படி கூறிய காரக பலன்கள் வலுக்கும்.

சிம்ம லக்ன

இவர் 3, 4, 6, 9, 10 ஆகிய இடங்களில் இருப்பது விசேஷம். இவர் சுக்கிரனுடன் சேர்ந்து சுபஸ்தானங்களில் இருந்தால் தர்மகர்மாதிபதி யோகமாகும். இந்த இருவருடன் குரு சேர்ந்தால் பூரணமான யோகம் உண்டு.

புதன்

2, 11குடைய புதன் சிம்ம லக்னத்திற்கு பாவியாகவே சொல்லப்பட்டுள்ளது. மனிதனுக்கு குடும்பம், தனம், லாபம் ஆகியவை வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள். இரு முக்கிய அதிபத்தியம் கொண்ட புதனை பாவி என்று சொன்னதற்கு காரணம்? புதனுக்கு மாரகம் செய்யும் அதிகாரமும் இருப்பதால்தான். இவர் வலுத்தால் தனலாபமும், செய்தொழில் லாபமும் விருத்தி அடையும். வலுத்த புதனால் ஆரோக்கியத்தை பற்றி பிரச்சினை எழுமே தவிர கல்வி, குடும்பம், வாக்கு, லாபம் ஆகியவை கெடாது.

இதில் ஒரு அதிசயம் என்னவென்றால் புதன் கெட்டாலும், மறைந்தாலும் ஆரோக்கியமும் கல்வியும் கெடாது. “மறைந்த புதன் நிறைந்த கல்வி” சுப பலன்கள் குறையும்.அவ்வளவே காரணம் சூரியனுக்கு நண்பன்.

குரு

5-க்கும், 8-க்கும் உரிய குரு பாவியாகவே சித்தரிக்கப்பட்டுள்ளார். ஐந்தாம் இடம் மூலத்திரிகோண ஸ்தானமாக அமைவதாலும், சூரியனுக்கு மித்ருவானதாலும் இவரால் நன்மைகள் உண்டு. இவர் வலுத்து ஐந்தாம் இடத்துடன் சம்பந்தப்பட்டால் புத்திர பாக்கியம் நன்றாக இருக்கும். பொருளாதார வசதி குறையாமல் இருக்கும். உத்தியோக சம்பந்தமான பரீட்சைகளில் வெற்றி பெற்று வேலை கிடைத்தல் ஆகிய நல்ல பலன்களை அளிப்பார். இவர் கெடுவது மேற்படி பலன்களை பாதிக்கும்.

சுக்கிரன்

3,10க்குடையவர். இவர் வலுப்பது நல்லது. 3-ல் நல்லவர்

சனி

6,7ஆகிய இடங்களுக்கு ஆதிபத்தியம் பெறும் சனிபகவான் பாவி என்றே சொல்லப்பட்டுள்ளது. காரணம்? 6-ம் இடம் கெட்ட ஸ்தானம், அதே சமயம் 7-ம் இடம் களத்திரம், தொழிலில் கூட்டாளி ஆகியவற்றைக் குறிக்கிறது. 7-ம் இடம் தான் மூலத்திரிகோண ஸ்தானம். ஆகையால் ஏழாம் வீட்டு அதிபதி என்ற முறையில் சமகுணம் உள்ளவராகிறார். ஆறாம் வீட்டில் அதிபதி என்ற முறையில் பாவி ஆகிறார். ஆகையால் இவர் தசையில் நோய் நொடிகளும், கடனும், நஷ்டங்களும் ஏற்படலாம்.

இவர் 6-ல் இருப்பது சரள யோகம் ஆகும். 7-ல் திக்பலம் பெறுகிறார். இவர் 10லிருந்தால் ராஜயோகத்தை அளிப்பார். சூரியனுக்கு பகை கிரகமானாலும் களத்திரத்தை பொருத்தவரை பாதகமான விளைவுகளை ஏற்படுத்த மாட்டார். அரசியல், சினிமா, நடனம், நாடகம், சங்கீதம் ,ஆகிய கலைத்துறை. கப்பல் மூலம் வர்த்தகம், ரயில், பஸ், விமானம் ஆகிய போக்குவரத்து துறைகள், கண்ணாடி தொழிற்சாலை, அரசு அலுவலகம், ஏற்றுமதி இறக்குமதி ஆகிய துறைகளிலும் பணிபுரியும் வாய்ப்பு உண்டாகும்.

மேலும் அலங்கார பொருள், கலைப்பொருள், வாசனைப் பொருள், வெள்ளி, ஈயம் மதுபானம் ஆகியவற்றின் வியாபார விருத்தியையும் அளிப்பார்.

சுபர் அசுபர் விளக்கம்

சுபர்

சிம்ம லக்னத்திற்கு லக்னாதிபதி சூரியனும், 4,9க்குடைய செவ்வாயும் பூரண சுபர்கள். இவர்கள் வலுத்தால் நல்ல பலன்களை அளிப்பார்கள். பஞ்சமாதிபதி குருவும் சுப பலனை அடிக்க கூடியவர்.

யோகாதிபதி

செவ்வாய்

கேந்திரமெனும் 4 ஆம் இடத்திற்கும், கோணம் எனும் 9-ம் இடத்திற்கும் அதிபதி ஆவதால், செவ்வாய் ஒருவரே பூரண ராஜயோகத்தை அளிக்க வல்லவர். ஆனாலும் இவருக்கு ஒன்பதாம் இடம் பாதகஸ்தானம் உண்டாகிறது. இவருடன் பத்துக்குடைய சுக்கிரன் சேர்ந்தால் தர்மகர்மாதிபதி யோகம் அமையும்.

சுக்கிரன்

3-க்கும் 10-க்கும் உடைய சுக்கிரன் மூன்றாம் இடம் மாரக ஸ்தானமானதால் பத்தாம் அதிபதியத்தின் வலிமையை இழந்து மாரகம் பண்ணும் பாவி செவ்வாயுடன் சேர்ந்தால் யோகத்தை அளிப்பார்.

குரு

பஞ்சமாதிபத்தியத்தால் சுபரானாலும் அஷ்டமாதிபத்தியம் சேர்வதால் மாசு ஏற்படுகிறது. இருந்தாலும் ஐந்தாமிடமான சுபஸ்தானம் மூலத்திரிகோண ஸ்தானம் ஆவதால் சம்பந்த விசேஷத்தால் யோகத்தை அளிப்பார்.

சிம்ம லக்ன

பாவிகள்

புதனும், சுக்கிரனும், சனியும் பாவி ஆகிறார்கள். புதன்2,11 ஆம் இடம் சுபஸ்தானமாக கருதப்படாததாலும், பொதுவாக இரண்டாம் இடம் மாரக ஸ்தானமானதாலும் இவர் பாவி ஆகிறார்.

சுக்கிரனுக்கு கேந்திராதிபத்திய தோஷமும்,ஸ்திர லக்கினத்திற்கு 3-ம் இடம் மாரக ஸ்தானமானதால் மாரகாதிபத்தியமும் ஏற்படுவதால் பாவி ஆகிறார்.

6,7 க்குடையவரானதால் சனியும் பாவி ஆகிறார்

மாரகாதிபதி

செவ்வாய்

பாதகாதிபதி என்ற ஒரே காரணத்தால் மாரகம் செய்யக்கூடும். ஆனால் மாரகாதிபதி சம்பந்தம் பெற்றால் ஒழிய செய்ய மாட்டார்.

சனி

6,7க்குடையவரானதால் மாரகம் செய்ய அதிகாரம் உண்டு.

சுக்கிரன்

மாரக ஸ்தானமான மூன்றாம் இடத்திற்கு அதிபதியானதால் மாரகம் செய்ய அதிகாரம் உண்டு.

புதன்

2-ம் வீட்டு ஆதிபத்தியம் மாரகம் வந்தமையால் மாரகம் பண்ண அதிகாரம் உண்டு.

குரு

ஸ்திர லக்கினத்திற்கு எட்டாம் இடம் மாரக ஸ்தானமானதால் குருவும் மாரகாதிபதி ஆகிறார். பெரும்பான்மையான நூல்கள் சனி, புதன், சுக்கிரன் ஆகிய மூவரையும் மாரகம் செய்யக்கூடியவர்கள் என்று உறுதி செய்கின்றன.

முக்கிய நிகழ்ச்சிகள் நேரும் காலகட்டம்

தாய்க்கு கண்டம்

 • சந்திர தசை- சனி, புதன், சுக்கிர புத்திகள்
 • ராகு தசை – சனி, சுக்கிரன், புத்திகள்.
 • குரு தசை – சனி, புதன், சந்திர புத்திகள்.
 • சுக்கிர தசை – சூரியன், ராகு, சந்திர புத்திகள்.

மேற்படி தசா புத்தி காலங்களில் மாதாவுக்கு கண்டாதி பிணிகள், மரணமோ அல்லது மாதாவுடன் விரோதம் அல்லது பிரிவினையோ ஏற்படும்.

தந்தைக்கு கண்டம்

 • கேது திசை – சூரியன், சனி, புத்திகள்.
 • சனி தசை- சனி, சுக்கிரன், சூரியன் புத்திகள்.
 • சுக்கிர திசை – செவ்வாய், குரு, சனி புத்திகள்.
 • ராகு தசை -குரு, சனி, சூரியன் புத்திகள்.
 • குரு தசை- சனி, சுக்கிரன், சூரியன் புத்திகள்.

மேற்படி தசா புத்திகளில் தகப்பனாருக்கு பீடை, கண்டாதிபிணி அல்லது மரணம் அல்லது அவருடன் விரோதமோ பிரிவினையோ ஏற்படலாம்.

சிம்ம லக்ன

திருமணம் நடைபெறும் காலகட்டம்

 • சுக்கிர திசை- சந்திரன், புதன், புத்திகள்.
 • சூரிய தசை – குரு, புதன் புத்திகள்.
 • குருதசை – புதன், சுக்கிர புத்திகள்.
 • சனி திசை -புதன், குரு, சுக்கிர புத்திகள்.
 • புதன் திசை-சுக்கிரன், சந்திரன், குரு புத்திகள்.

மேற்படி காலங்களில் திருமணம் நடக்கும்.

மனைவிக்கு கண்டம்

 • சுக்கிர தசை – சுக்கிரன் சனி ராகு புத்திகள்.
 • சூரிய தசை – ராகு சனி சுக்கிரன் புத்திகள்.
 • புதன் தசை – சுக்கிரன் ராகு சனி புத்திகள்.
 • குரு தசை – சுக்கிரன் சனி ராகு புத்திகள்.
 • சனி திசை -சனி சுக்கிரன் ராகு புத்திகள்.
 • கேது தசை -சுக்கிரன் சனி ராகு புத்திகள்.

மேற்படி தசா புத்திகளில் களத்திர விரோதமோ, பிரிவினையோ அல்லது மனைவிக்கு கணடாதி பிணிகளும் அல்லது மரணமோ நேரலாம்.

குழந்தை பிறக்கும் காலகட்டம்

 • குரு தசை -சுக்கிரன், சந்திரன், செவ்வாய் புத்திகள்
 • சனி திசை -சந்திரன், செவ்வாய், குரு புத்திகள்
 • புதன் தசை – சுக்கிரன், செவ்வாய், குரு புத்திகள்.
 • சுக்கிர தசை- சுக்கிரன், குரு புத்திகள்.
 • சந்திர தசை- செவ்வாய், குரு, புதன் புத்திகள்.

மேற்படி காலங்களில் புத்திரன் பிறப்பதோ புத்திரனுக்கு சுப பலன்களோ நடக்கும்.

குழந்தைக்கு கண்டம்

 • குரு தசை- ராகு, குரு, சனி புத்திகள்.
 • சனி தசை -ராகு, குரு, சனி புத்திகள்.
 • புதன் தசை- ராகு, குரு, சனி புத்திகள்.
 • சுக்கிர திசை- ராகு, குரு, சனி புத்திகள்.
 • சந்திர தசை – ராகு, குரு, சனி புத்திகள்.

மேற்படி காலங்களில் புத்திர விரோதம் அல்லது பிரிவினை அல்லது புத்திரர்களுக்கு கஷ்ட நஷ்டங்களோ கண்டாதி பிணிகளோ மரணமோ சம்பவிக்கலாம்.

சகோதரர்களுக்கு கண்டம்

 • செவ்வாய் தசை – ராகு, சுக்கிரன் புத்திகள்
 • ராகு தசை- சனி, செவ்வாய் புத்திகள்
 • சனி திசை -புதன், ராகு புத்திகள்
 • கேது திசை- செவ்வாய், சனி புத்திகள்

இந்த காலம் சகோதர விரோதம் அல்லது பிரிவினை அல்லது அவர்களுக்கு கஷ்ட நஷ்டம் கண்டாதி பிணிகள் அல்லது மாரகம் நேரலாம்.

மரணம் அல்லது கண்டம் ஏற்படும் காலகட்டம்

 • சுக்கிர திசை- செவ்வாய், ராகு, சனி புத்திகள்.
 • புதன் திசை- செவ்வாய், ராகு, சனி புத்திகள்.
 • சந்திர தசை – செவ்வாய், ராகு, சனி புத்திகள்.
 • குரு திசை -சுக்கிரன், ராகு புத்திகள்.
 • சனி தசை- சுக்கிரன், சூரியன், ராகு புத்திகள்.
 • செவ்வாய் தசை- ராகு, சுக்கிரன், சூரிய புத்திகள்.

மேற்படி காலங்களில் கஷ்ட நஷ்டங்கள், பிணி, சத்ருபாதை அல்லது மரணம் நேரலாம்.

யோகமான காலகட்டம்

 • செவ்வாய் தசை- குரு, புதன், சுக்கிரன் புத்திகள்
 • ராகு தசை – குரு, சனி, புதன் புத்திகள்.
 • சனி திசை – சனி, சந்திரன், குரு, புத்திகள்.
 • சூரிய தசை- சனி, புதன், புத்திகள்.

மேற்படி தசா புத்தி காலங்களில் சுப பலன்களும் யோகங்களும் கிட்டும்.

சிம்ம லக்ன

சில யோகம் தரும் கிரக அமைப்புகள்

 • புதன் திரிகோணங்களில் இருந்தால் நல்ல பலன்களை அளிப்பார். மற்ற இடங்களில் இருப்பது நல்லதல்ல.
 • சூரியன், செவ்வாய், புதன் மூவரும் கூடினால் தனயோகமாகும்.
 • சூரியனும் புதனும் கூடினால் சுப பலன்கள் உண்டு .
 • சூரியன் புதன், குரு மூவரும் கூடினால் தனயோகமாகும்.
 • 3,10க்குடைய சுக்கிரன் 3-ல் நல்லவர். 10-ல் இருந்தால் கெடுபலன்களை அளிப்பார்.
 • சனி செவ்வாயுடன் சேர்ந்து 12ல் இருந்தால் சனி திசை யோக திசையாகும்.
 • செவ்வாய், புதன், குரு மூவரும் லக்னத்தில் இருந்தால் யோகம்.
 • 3-ல் சுக்கிரன் ஆட்சி பெற, 4க்குடைய செவ்வாய் 10ல் இருந்தால் யோகம்.
 • செவ்வாயும் சுக்கிரனும் சேர்ந்தால் தர்மகர்மாதிபதி யோகம். இவர்களுடன் குரு சேர்ந்தால் இந்த யோகம் வலுக்கும்.
 • சூரியன், புதன், செவ்வாய் சுக்கிரன் ஆகிய நால்வரும் சேர்ந்து ஒன்று 4,7,10 ஆகிய ஏதாவது ஒரு கேந்திரத்தில் இருந்தால் யோகம். அரசியலில் முன்னேற்றம் உண்டு.
 • 7, 9 குடைய சனியும் செவ்வாயும் ஆட்சி பெற சுக்கிரன் 3-ல் இருந்தால் ராஜயோகம்.
 • லக்னாதிபதியான சூரியன் உச்சம் பெற அவருடன் 5, 9, 10க்குடைய குரு, செவ்வாய், சுக்கிரன் சேர வெகு ராஜயோகம் ஆகும்.
 • லக்னம் முதல் நான்கு கேந்திரங்களிலும் கிரகங்கள் இருந்தால் யோகம்.
 • சூரியனும் சுக்கிரனும் 10லிருந்தால் பிதுரார்ஜித சித்தி உண்டு.
 • லக்னாதிபதி, தனாதிபதி பரிவர்த்தனையானால் தனபிராப்தி உண்டு.
 • லாபாதிபதி புதன் லாபம், தனம், பஞ்சமம், பாக்கிய, ஜீவன ஸ்தானங்களில் அதாவது ஒன்று 11, 2, 5, 9, 10ல் இருந்தால் லாபம் பெறும் யோகம்.
 • லக்னத்தில் செவ்வாயும், லாபத்தில் சூரியனும் இருந்தால் ராஜயோகம்.
 • ஒன்பதுக்குடைய செவ்வாயும், 10க்குடைய சுக்கிரனும் உச்சம் பெற, லக்னாதிபதி உச்சம் பெற்று தனாதிபதியான புதனுடன் சேர்ந்தால் தனயோகம்.
 • லக்னாதிபதி லாப ஸ்தானம் ஏற லாபாதிபதி பத்தில் சுக்கிரனுடன் இருக்க ராஜ யோகம்.
 • 6,7க்குடைய சனி பத்தில் இருந்தால் ராஜயோகம்.
 • சூரியன் சிம்மத்திலும், கன்னியில் புதனும், மீனத்தில் குருவமாக மூவரும் ஆட்சியானால் லட்சுமி, சரஸ்வதி யோகம்.
 • சிம்மத்தில் செவ்வாயும், மிதுனத்தில் ராகு யோகம்.
 • கன்னியில் சூரியனும், சிம்மத்தில் புதனுமாக 2,3ம் அதிபதிகள் பரிவர்த்தனை தன பிராப்த்தி யோகம்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்102ஆன்மிக தகவல்97குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53நட்சத்திர ரகசியங்கள்35பரிகாரங்கள்32சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20அற்புத ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20தசா புத்தி பலன்கள்19ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18சுபகிருது வருட பலன்கள்13சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313குரோதி வருட பலன்கள் 202413புத்தாண்டு பலன்கள்-202213சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8தேவாரத் திருத்தலங்கள்7திருமண பொருத்தம்7கருட புராணம்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5அட்சய திருதியை3ஜோதிட கருத்து கணிப்பு3தினம் ஒரு திருவாசகம்3மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2மே மாத ராசிபலன்கள் -20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241மார்ச் மாத ராசி பலன் 20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1மாசி மாத பலன்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular