Thursday, December 7, 2023
Homeஅடிப்படை ஜோதிடம்அடிப்படை ஜோதிடம் -பகுதி-25-லக்கினாதிபதி நின்ற பலன்கள்-மகரிஷி பராசரர்

அடிப்படை ஜோதிடம் -பகுதி-25-லக்கினாதிபதி நின்ற பலன்கள்-மகரிஷி பராசரர்

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

லக்கினாதிபதி நின்ற பலன்கள்-மகரிஷி பராசரர் 

 
லக்னாதிபதி லக்னத்தில் இருந்தால்
ஜாதகர் நல்ல ஆரோக்கியத்துடனும், புத்திக்கூர்மை உள்ளவராகவும், மனம் அடிக்கடி மாறுபவராகவும், இரண்டு மனைவிகளை உடையவராகவும் அவர்கள் ஒற்றுமையாகவும் இருப்பார்கள்.
 
லக்னாதிபதி 2ஆம் பாவத்தில் இருந்தால்:  
லாபம், அறிவு ,மகிழ்ச்சி, நல்ல குணங்கள், மதத்தின் மீது பற்று, கௌரவம் மற்றும் நிறைய மனைவிமார்கள் மற்றும் 
சுற்றத்தாருடன் ஒற்றுமையாக இருப்பார்கள்.
 
லக்னாதிபதி 3-வது வீட்டில்: 
 ஜாதகர் சிங்கம் போன்று கர்ஜிப்பர் (சிம்மக்குரல்) எல்லாவிதமான சொத்துக்களும், கௌரவமும், இரண்டு மனைவிகளும், நுண்ணறிவும், மகிழ்ச்சியும் பெற்றிருப்பார்.
 
லக்னாதிபதி 4-வது வீட்டில்: 
 ஜாதகர் தந்தைவழி மற்றும் தாய்வழி வந்தவர்களுடன் மகிழ்ச்சியுடனும், அதிகமான சகோதரர்களுடனும், நல்ல குணம், சிற்றின்ப ஆசை, வசீகரமான தோற்றம் போன்றவற்றுடன் இருப்பார்.
 
 லக்னாதிபதி 5ஆம் வீட்டில்:
 ஜாதகர் செயற்கை மூலம் வம்ச விருத்தியும், மகிழ்ச்சியுடனும், கௌரவத்துடனும் இருப்பர். முதல் குழந்தையை இழந்து விடுவர், மேலும் அரசனுக்கு அருகில் இருப்பர்.
 
 லக்னாதிபதி 6ஆம் இடத்தில்: 
சுபகிரகங்களின் பார்வை இல்லாமல் அசுபக் கிரகங்களுடன் தொடர்பு இருந்தால் ஜாதகர் மகிழ்ச்சி இல்லாமலும், எதிரிகளின் தொல்லையை அனுபவிப்பான்.
 
லக்கினாதிபதி நின்ற பலன்கள்-மகரிஷி பராசரர்

 

 லக்னாதிபதி 7ஆம் வீட்டில்:
லக்னாதிபதி அசுப கிரகமாக இருந்து ஏழாம் வீட்டில் இருப்பின் ஜாதகரின் மனைவி நீண்ட நாள் வாழ மாட்டார். அங்கு சுபகிரகம் இருந்தால் ஒருவருகொருவர் குறிக்கோள் இல்லாமலும் அலைவார், மேலும் வறுமையும் கவலையும் கலந்து முகத்தில் தோன்றும். அவர்கள் மாறுபட்ட நிலையில் அரசனைப் போல் இருக்க வேண்டுமானால் அங்கு கூடிய கிரகம்,அந்த இடத்தின் அதிபதி வலிமை உள்ளதாக இருக்க வேண்டும்.
 
லக்னாதிபதி 8ஆம் வீட்டில்:
ஜாதகர் திறமை பெற்ற அறிவாளியாகவும், நோய் உள்ளவராகவும், திருட்டு குணம், முன் கோபக்காரனாகவும், சூதாட்டம் மற்றும் பிறருடைய மனைவிமார்களை நேசிப்பவர்களாகவும் இருப்பார்.
 
 லக்னாதிபதி 9ஆம் வீட்டில்:
 ஜாதகர் அதிர்ஷ்டசாலி, மக்களை நேசிப்பார், விஷ்ணு பக்தர், திறமையுள்ளவர், பேச்சாற்றல் உடையவர், மனைவி, மகன்களுடன், சொத்துக்களுடன் இருப்பவர்
 
 லக்னாதிபதி 10ஆம் வீட்டில் இருப்பின்: 
ஜாதகர் பெற்றோர்களுடன் மகிழ்ச்சியாகவும், ராஜமரியாதையுடன், புகழ், சந்தேகம் இல்லாத சுயமாக சம்பாதித்த சொத்துக்கள் உடன் இருப்பார்.
 
லக்னாதிபதி 11 ஆம் வீட்டில்:
ஜாதகன் எப்போதும் லாபத்துடன், நல்ல குணநலன்கள், புகழ் மேலும் அதிகமான மனைவிகளுடன் இருப்பார்
 
 லக்னாதிபதி 12ஆம் வீட்டில்
 சுப கிரகங்கள் இல்லாமல் இருந்தால் ஜாதகர் மகிழ்ச்சியை பறி கொடுத்து விடுவார். பலனளிக்காத செயல்களுக்கு செலவு செய்வார். கோபத்தை அதிகம் காட்டுவார்.
 
மேலும்  லக்னாதிபதிபற்றிய தகவல்கள்.. அடுத்த பதிவில்…
 
நன்றியுடன்! 
சிவா.சி  
✆9362555266
 
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular