Wednesday, March 22, 2023
Homeபிலவ வருட புத்தாண்டு பலன்கள்பிலவ வருட புத்தாண்டு பலன்கள்- ரிஷப ராசி

பிலவ வருட புத்தாண்டு பலன்கள்- ரிஷப ராசி

ASTRO SIVA

google news astrosiva

பிலவ வருட புத்தாண்டு பலன்கள்- ரிஷப ராசி

வெள்ளை மனசு காரரான ரிஷப ராசி அன்பர்களே!!

உண்மையை விரும்பும், கலைநயம் உள்ள கடின உழைப்பால் எதையும் சாதித்துக் காட்டும் உங்களுக்கு இந்தப் புத்தாண்டு எப்படிப்பட்ட பலன்களை தரப் போகிறது என்பதை பார்ப்போம்.
  •  உங்கள் ராசிக்கு 12-வது ராசியில் புத்தாண்டு பிறப்பதால் சுப விரயங்கள் அதிகமாகும் முதல் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்
  • கணவன் மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பீர்கள்
  • ஆடை ஆபரணம் சேரும்
  • மதிப்பு மரியாதை கூடும்
  • வெளியூர் பயணங்கள் திருப்தி தரும்
  • கடனை பைசல் செய்வீர்கள்
  • பிள்ளைகள் ஆதரவாக நடப்பார்கள் அவர்களின் எதிர்காலத்திற்கு முக்கிய முடிவுகள் எடுப்பதில் சேமிக்கவும் தொடங்குவீர்கள்
  •  முன்கோபம் அலட்சியப் போக்கு மாறும்
  • மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும்
  • ஆவணி மாதம் திருமணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள்
  •  உடன்பிறந்தவர் களுக்கு தக்க நேரத்தில் உதவுவீர்கள்
  • சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்
  •  தாய்வழி உறவினர்களிடையே நிலவி வந்த மனக்கசப்பு நீங்கும்
  • அரைகுறையான கட்டட வேலைகளை புரட்டாசி கார்த்திகை மாதங்களில் முடிப்பீர்கள்
  • பழைய சொத்தை விற்று புது சொத்து வாங்குவீர்கள்
  • குழந்தை இல்லாதவர்களுக்கு மார்கழி தை மாதங்களில் குழந்தை பாக்கியம் உண்டாகும்
  • மனப்போராட்டம் அரசு காரியங்களில் தேக்கநிலை மாறும்
  • வசதியான வீட்டுக்கு குடி புகுவீர்கள்
  • குலதெய்வ பிரார்த்தனை மனநிறைவு தரும்
  • பால்ய நண்பர்கள் உதவுவார்கள்
  • எதிர்கால ஆசையில் ஒன்று நிறைவேறும்
  • தாழ்வுமனப்பான்மை விலகும்
  • வெளிநாட்டிலுள்ள உறவினர்கள் நண்பர்களால் திடீர் திருப்பங்கள் நிகழும்
  •  அக்கம்பக்கத்தார் உடன் இருந்த மோதல்கள் மாறும் அவர்களின் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்
  • வழக்குகள் சாதகமாக முடியும்
பிலவ வருட  புத்தாண்டு பலன்கள்- ரிஷப ராசி

செல்லவேண்டிய ஆலயம் :

ரிஷப ராசி அன்பர்கள் இந்த புத்தாண்டில் நற்பலன்களைப் பெற வேண்டி ஸ்ரீ சபர மூர்த்தியை வழிபடலாம்.

 லிங்கபுராணம், ஸ்ரீ ஆகாச பைரவர் முதலான நூல்களிலும் மற்றும் பல நூல்களிலும் ஸ்ரீ சரபேஸ்வரர் ஆராதனை குறித்து விளக்கப்பட்டுள்ளன.
 நீங்கள் கும்பகோணம் அருகிலுள்ள திருபுவனத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ சரபேஸ்வரரை சனிக்கிழமைகளில் சென்று வணங்கி வாருங்கள் இயலாதவர்கள் மாதப்பிறப்பு, பவுர்ணமி, அமாவாசை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் வீட்டிலேயே
ஓம் சரபேச்வராய  நம★என்று கூறி ஸ்ரீ சரபேஸ்வரரை வணங்கி வழிபடலாம் நற்பலன்கள் கிடைக்கும்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular