Friday, March 31, 2023
Homeஅடிப்படை ஜோதிடம்நவகிரகங்கள் மாந்தியுடன் இணைந்த பலன்கள்

நவகிரகங்கள் மாந்தியுடன் இணைந்த பலன்கள்

ASTRO SIVA

google news astrosiva

நவகிரகங்கள் மாந்தியுடன் இணைந்த பலன்கள்

நவகிரகங்கள் மாந்தியுடன் இணைந்த பலன்கள் பற்றி விரிவாக கொடுத்துள்ளேன் படித்து பயன் பெறுங்கள்
 
சூரியன்+மாந்தி:
 
தந்தை மற்றும் தந்தைவழி முன்னோர்களால் ஏற்பட்ட சாபத்தை உணர்த்தும்.
 
பூர்வீக சொத்தை அனுபவிக்க முடியாது
 
 தனது குலத்தாரிடமே பகை, கருத்து வேறுபாடு ஏற்படும். 
 
வலது கண் பாதிப்பு இருக்கும்.
 
பிதுர்காரகனாகிய சூரியனுடன் லக்னத்திற்கு 3 மற்றும் ஒன்பதாம் பாவத்தில் அமர தந்தைக்கு பெரும் கண்டத்தை தருகிறது.
 
பரிகாரம்:
 
திலஹோமம் செய்வது நல்ல பலன்தரும்.
 
சந்திரன்+மாந்தி:
 
தாய் மற்றும் தாய்வழி முன்னோர்கள் இடையே ஏற்பட்ட சாபத்தை உணர்த்தும்.
 
தாய்வழி உறவுகள் இடையே பிரிவினையை ஏற்படுத்தும்.
 
மனபயம் மிகுதியாக இருக்கும். 
 
இடது கண் பாதிப்பு இருக்கும். 
 
சந்திரனும் மாந்தியும் இணைந்து லக்னத்திற்கு 4 மற்றும் 10-ஆம் இடங்களில் அமரும்பொழுது ஜாதகரின் தாய்க்கு கஷ்டத்தை தருகின்றன. அவசொல், சுகமின்மை, நிம்மதியின்மை போன்ற அசுப பலன்களையும் கண்டத்தையும் தரும்.
 
பரிகாரம்: 
அமாவாசை வழிபாடு நல்ல பலன் தரும்
 
செவ்வாய்+மாந்தி:
 
உடன் பிறந்தவர்கள் இடையே விரோதம் இருக்கும். 
 
தீராத ரத்த சம்பந்த நோய் தாக்கம்  இருக்கும். 
 
சொத்துக்களால் விருத்தி இருக்காது.
 
வாஸ்து  குற்றமுள்ள வீடு மனை அமையும்.
 
பரிகாரம்: 
சஷ்டி திதியில் முருகன் வழிபாடு நல்ல பலன் தரும்
 
 
புதன்+மாந்தி:
 
தாய்மாமன் ஆதரவு கிடைக்காது. 
 
கன்னிப் பெண் சாபம் இருக்கும்.
 
கல்வியில் தடை ஏற்படும்.
 
புரிந்துகொள்ளும் தன்மை இருக்காது.
 
நம்பிக்கை மோசடியை சந்திக்க நேரும்
 
பரிகாரம்:
 
புதன்கிழமை சக்கரத்தாழ்வார் வழிபாடு மாற்றத்தையும் ஏற்றத்தையும் மிகுதிப்படுத்தும்.
 
குரு+மாந்தி:
 
கருச்சிதைவு ஏற்படும். 
 
கருத்தரிக்கும் தன்மை குறைவாக இருக்கும். 
 
குழந்தைகளுக்கு கண்டம், தோஷம் இருக்கும் 
 
குழந்தைகளால் நிம்மதி குறைவு ஏற்படும்.
 
மனதுக்குப் பிடித்த குழந்தைகள் பிறக்காது. 
 
மனதிற்குப் பிடித்த குழந்தைகள் பிறந்தாலும் மனதிற்கு பிடிக்காத வாழ்க்கையை குழந்தைகள் தேர்ந்தெடுப்பார்கள்.
 
குரு சாபம் தேடி வரும்
 
பண இழப்பு மிகுதியாக இருக்கும்
 
பரிகாரம்: 
வியாழக்கிழமைகளில் சித்தர் ஜீவசமாதிகளை வழி பட்டால் நற்பலனை அதிகரிக்க முடியும்.
 
சுக்கிரன்+மாந்தி: 
 
பெண் சாபத்தால் பாதிப்பு அதிகமாக இருக்கும். 
 
மனைவியால் கடும் சாபம், கண்டம் ஏற்படும். 
 
ஆடம்பரப் பொருட்கள் எளிதில் கிட்டாது அல்லது விரைவில் பழுதாகிவிடும்.
 
பரிகாரம்: 
வளர்பிறை வெள்ளிக்கிழமைகளில் சுமங்கலிப் பெண்களின் நல்லாசி,பெண் சாபத்திலிருந்து விடுதலை பெற்றுத் தரும்.
 
சனி+மாந்தி: 
 
குல தெய்வ குற்றம்,  சாபத்தை காட்டும்.
 
நிலையான வேலை ஆட்கள் கிடைக்கமாட்டார்கள். 
 
தகுதிக்கு தகுந்த வேலை கிடைக்காது
அல்லது உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்காது. 
 
உறவுகள் இடையே பிரிவை தரும் பூர்வீகம் தொடர்பான சர்ச்சை,மன பயம் இருந்து கொண்டே இருக்கும். 
 
பரிகாரம்: 
கால் ஊனமுற்ற முதியோர்களுக்கு செயற்கை உடல் உறுப்பு வாங்க நிதி உதவி செய்ய வேண்டும்.
 
ராகு+மாந்தி: 
 
விஷ பயம் ஏற்படும். 
 
மானத்தை காக்க போராட நேரும் 
 
பரிகாரம்: 
சனிக்கிழமைகளில் துர்க்கை, காளி வழிபாடு பயத்தை நீக்கும்
 
கேது+மாந்தி: 
 
விஷ பயம் இருக்கும் 
 
பிரிவினைகள், வழக்குகள், தண்டனை கிடைக்கும். 
 
பரிகாரம்: 
ஆஞ்சநேயர் வழிபாடு நல்ல பலனை அதிகரிக்கும்.
 
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் !!!!
 
எனது அனைத்து  பதிவுகளையும் ஒரே கிளிக்கில் படிக்க …
👇

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular