ராசி | பலன் |
மேஷம்  | சவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர் கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமா வார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள். |
ரிஷபம்  | அரசு காரியங்கள் சாதகமாக முடியும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பழைய கடனைத் தீர்க்க புது வழியை யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். |
மிதுனம்  | குடும்பத்தினருடன் வீண் விவாதம் வந்துப் போகும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். யாருக்காகவும் சாட்சி கையொப்பமிட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். போராடி வெல்லும் நாள். |
கடகம்  | எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு மற்றவர்களுடன் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. |
சிம்மம்  | திடீர் திடீரென்று எதையோ இழந்ததை போல் இருப்பீர்கள். சில நேரங்களில் மறந்த சொந்தங்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் வளைந்து கொடுத்து போவது நல்லது. உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள். |
கன்னி  | சகோதரர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மாலையில் நீண்ட நாள்களாக நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். பிற்பகலுக்கு மேல் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம். இன்று நீங்கள் தொடங்கும் காரியம் சாதகமாக முடியும். வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. |
துலாம்  | கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தேவையான பணம் கையில் இருப்பதால் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். சிலருக்குக் குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக்கூடும். வயிறு தொடர்பான உபாதைகள் ஏற்படக்கூடும் என்பதால், வெளியிடங்களில் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் அதிகாரிகளின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். |
விருச்சிகம்  | வெகுநாள் திட்டமிட்ட பணி எளிதாக நிறைவேறும். மனதில் புத்துணர்வும், நம்பிக்கையும் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். நிலுவைப் பணம் சிலருக்கு வசூலாகும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி வளரும் |
தனுசு | இன்று அதிக மனசஞ்சலம் ஏற்படும் நாள். தேவை இல்லாத எதிர்மறை எண்ணங்களை இன்றைய தினத்தில் தவிர்க்கப் பாருங்கள். குரு பார்வை உங்களுக்கு ஓரளவு சில நன்மைகளை செய்யும். வேலை பளு அதிகரிக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் பிறர் வேலையையும் சேர்த்து நீங்கள் பார்க்க வேண்டி வரலாம். எனினும் கவலை வேண்டாம் இந்த நிலை கூடிய விரைவில் மாறும். மற்றபடி குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்ல வேண்டிய நாள் இந்த நாள். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. |
மகரம் | தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் உங்கள் யோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்துடன் உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்த படி இருந்தாலும், பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத் தான் இருக்கும் |
கும்பம் | உத்வேகத்துடன் பணிபுரிவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். கூடுதல் லாப கிடைக்கும். பெண்கள் கலையம்சம் நிறைந்த பொருள் வாங்குவர். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும் |
மீனம் | உங்களின் நற்குணங்களை பலரும் அறிந்து கொள்வர். தொழிலில் திட்டமிட்ட பணிகளை அக்கறையுடன் நிறைவேற்றுவீர்கள். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். பெண்கள் நகை, புத்தாடை வாங்குவர். சிக்கலான விஷயங்கள் கூட இறுதியில் ஒரு நல்ல முடிவுக்கு வரும் தினம். |