Saturday, December 2, 2023
Homeஅடிப்படை ஜோதிடம்பரணி நட்சத்திரத்தில் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் மற்றும் கிரகங்கள் நின்ற பலன்கள்

பரணி நட்சத்திரத்தில் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் மற்றும் கிரகங்கள் நின்ற பலன்கள்

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

பரணி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பிறந்தவன்

 • சிவந்த சரீரம் உள்ளவர் 
 • அதிக பலவான், 
 • நீதிமான், 
 • பகைவர்களை வெல்லும் சிங்கமாக இருப்பான், 
 • சிவப்பு நிறம் ரோமம் உள்ளவன் , 
 • செம்பட்டை தலைமயிர்  உள்ளவன், 
 • நிறைந்த செல்வம் உள்ளவன்,
 • இனியவன், 
 • புண்ணியம் செய்பவன், 
 • மாளிகை போன்ற வீட்டில் வாழ்பவன். 
 • அரசாங்கத்தால் மகிழ்ச்சி உண்டு,
 •  வாள்  போன்ற கண்ணுடைய அழகிய மனைவியை உடையவன்,
 •  வலக்கையில் மரு  உண்டு, 
 • காளியை போன்ற உக்கிரமான வடிவம் உடையவன், 
 • இது பரணி முதல் பாதத்தில் பிறந்த சூரிய அங்கிசத்தில்  பிறந்தவன் பலனாகும்.

பரணி முதல் பாதத்தில் கிரகங்கள் நின்ற பலன்கள்:

பரணி முதல் பாதத்தில்  சூரியன் நின்றால்: 

 • மெத்தப் படித்தவன் , 
 • ஜோதிடக்கலை நிபுணன், 
 •  பெயரும் புகழும் உள்ளவன் , 
 • குணமுள்ளவன், 
 • கவர்ச்சியானவர் ,
 •  நன்னடத்தை உள்ளவன் 
 •  கண்கள் காயம் அல்லது புரை (catract )  ஏற்படும், 
 • மருத்துவம் , சட்டம் ,விலங்கு மருத்துவம்  இவற்றில் ஒன்றில் பயிற்சி உள்ளவன் .

பரணி முதல் பாதத்தில்  சந்திரன்  நின்றால்: 

 • இவன் செல்வந்தன், 
 • தன் சகோதர சகோதரிகளால் மிகவும் மதிக்கப்படுபவர்
 •  வாகன யோகம் உள்ளவன் 
 • முன் யோசனையற்ற  அவசர முதலீடு செய்வதால் தன் செல்வத்தை இழப்பவன்  
 • இவன் இன்றைய தேவையை மட்டும் திட்டமிடுவான்  வருங்கால திட்டம் இவனிடம்  கிடையாது.

பரணி முதல் பாதத்தில் செவ்வாய்   நின்றால்:

 •  ஆயுள் 50 வரை தான் இருக்கலாம் 
 • சாதாரண  நோயால் வெளிநாட்டில் மரணம் நேரும் 
 • கூர்மையான ஆயுதங்கள் பயன்படுத்துவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் 
 • வாகனங்களை தானே ஓட்ட கூடாது 
பரணி
பரணி நட்சத்திரம் முதல் பாதம்

பரணி முதல் பாதத்தில் புதன்   நின்றால்:

 • ஆயுள் மத்திமம் தான் 
 • குழந்தை பருவத்தில் பாலாரிஷ்டம் உண்டு, 
 • இதை தாண்டி பிழைத்தால் இவன் ஆயுள் மிகவும் நீண்டதாக இருக்கும்
 •  பல நூல்கள் எழுதுவதில் இவன் ஈடுபடுவான் 
 •  கட்டிட குத்தகை(காண்ட்ராக்டர்)யால்  சம்பாதிப்பான் அல்லது பொறியாளராக இருக்கலாம்.

பரணி முதல் பாதத்தில் குரு நின்றால்:

 •  உண்மையானவன், 
 • சிறந்த பேச்சாளன், 
 • தந்தையிடம் அதிகம் பாசம் உண்டு. 
 • பிறர்  இவனை கடவுளாக மதிப்பார்கள். 
 • ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியுண்டு. 
 • தொழிற்சாலை தலைவராகவோ , வங்கி அதிகாரியாகவோ  பணி செய்வான். 
 • மூளை சம்பந்தமான நோய்கள் காணலாம் இந்த வகையில் விழிப்பு தேவை

பரணி முதல் பாதத்தில் சுக்கிரன்  நின்றால்:

 • உயர்ந்த சங்கீத வித்துவான். 
 •  பாடகன். 
 • குறைவாக உண்பவன் 
 • எல்லோரும்  இவனை விரும்புவர் 
 •  புகை ,குடி பழக்கம் அதிகம் . 
 • கண்ணுக்கு மேல் நெற்றியில் காயம் ஏற்படும் .
 • விளையாட்டு போட்டிகளில் வித்தகன் 
 •  சுகபோக விருப்பமுள்ளவன் 
 • சங்கீத கருவிகள் (வாத்தியங்கள் )விற்பனை மற்றும்  எவை ஆனாலும் இவனுக்கு சம்பாத்தியம் உண்டு 

பரணி முதல் பாதத்தில் சனி நின்றால்:

 •  சமய மத சம்பந்தமான விஷயங்களில் ஆராய்ச்சி உள்ளவன்
 • இதனால் அதிக சம்பாத்தியம் உண்டு 
 • இவன் அறிவாளி. 
 • பல பெரிய அந்தஸ்து உள்ளவர்களால் மதிக்கப்படுபவர். 
 • நயமாக பேசுபவன். 
 • தலையில் காயத்தால் வடு  ஏற்படும். 
 • மூளை அறுவை  ஏற்படும் அதிக  தலை வலி ஏற்படும். 

பரணி முதல் பாதத்தில் ராகு நின்றால்:

 •  மிகவும் பலவான் . 
 • மிகவும் பிரசித்தி அடைவான். 
 •  மரியாதை அந்தஸ்து இவனை வந்தடையும்.
 •  இவன் பணம் நிறைய சம்பாதிப்பான். ஆனால் இறக்கும் போது ஏழையாகி விடுவான் 
 • வழக்காடல் முதலியவற்றால் நாய்கடி, காய்ச்சல் முதலிய நோய்கள் காணலாம். 

பரணி முதல் பாதத்தில் கேது நின்றால்:

 • இவன் மிகவும் சொகுசாக வாழ்வான் 
 • இவனுக்கு ஆயுள் தாயம்  சரியில்லை என்றால் இருபது வயதில் அற்பாயுள் சம்பவிக்கலாம். 
விருச்சிக செவ்வாய் தசை 7 வருடம்
துலாம் சுக்கிர தசை 16 வருடம்
கன்னி புதன் தசை 9 வருடம்
கடக சந்திரன் தசை 21 வருடம்
சிம்மம் சூரிய தசை 5 வருடம்
மிதுன புதன் தசை 9 வருடம்
ரிஷப சுக்கிர தசை 16 வருடம்
மேஷ செவ்வாய் தசை 7 வருடம்
மீன குரு தசை 10 வருடம்
ஆக பரம ஆயுள் 100 வருடம்
பரணி முதல் பாதத்தின் காலசக்கர தசை
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular