ராசி பலன் -பஞ்சாங்கம்-(07.06.2021)
தமிழ் தேதி /கிழமை/வருடம் | வைகாசி -24/திங்கள் /5123 பிலவ |
ஆங்கில நாள் | 07.06.2021 |
இன்றய சிறப்பு | பிரதோஷம் ,கழற்சிங்க நாயனார் குரு பூஜை |
சூரியன் உதயம் | 05.52AM |
சூரியன் அஸ்தமனம் | 06.28PM |
ராகு காலம் | 07.30AM -09.00AM |
குளிகை காலம் | 01.30PM -03.00PM |
அபிஜித் முகூர்த்தம் | 11.45AM -12.35PM |
எம கண்டம் | 10.30AM -12.00PM |
திதி | துவாதசி காலை 11.06மணிக்கு மேல் திரயோதசி |
நட்சத்திரம் | பரணி |
சந்திராஷ்டமம் | சித்திரை |
யோகம் | சித்த யோகம் |
சூலம் | கிழக்கு |
பரிகாரம் | தயிர் |
ராசி | பலன் |
மேஷம் ![]() | முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர் களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சிலர் கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள். |
ரிஷபம் ![]() | இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. எதிர்பாராத இடமாற்றம்… சிலருக்கு உத்தியோக மாற்றம் கூட உண்டாகலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்பட இடம் உண்டு. எனினும் சமாளித்து விடுவீர்கள். கணவன் மனைவிக் கிடையே திடீர் மனவருத்தம் ஏற்பட்டு விலகலாம். முடிந்த வரையில் பிரச்சனையை பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளின் மனதறிந்து நடப்பது நல்லது. இது ஒரு சுமாரான நாள். |
மிதுனம் ![]() | இந்த நாளில் உங்களது சில எண்ணங்கள் நல்ல படியாகப் பூர்த்தி ஆகும். வாகனங்கள் ரீதியாக சில செலவுகள் சிலருக்கு ஏற்பட இடம் உண்டு. எனினும் திடீர் பணவரவு மூலம் உங்கள் தேவைகள் அனைத்தும் நிறைவேறும் ஒரு நல்ல நாளாக இந்த நாள் இருக்கும். மொத்தத்தில், சோதனைகளை கடந்து சாதிப்பீர்கள். அலுவலகத்தில் மட்டும் சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லுங்கள். |
கடகம் ![]() | பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். அமோகமான நாள். |
சிம்மம் ![]() | பழைய நிகழ்ச்சிகளை சிலர் அசை போடலாம். எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு வெளியூரில் உள்ள கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக் கூடும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் சிலருக்குக் கிடைக்கும். பயணத்தின் போது உடைமைகளை கவனமாகப் பார்த்துக் கொள்ளவும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். |
கன்னி ![]() | கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. முக்கிய கோப்புகளை அலட்சி யமாக கையாள வேண்டாம். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். நிதானம் தேவைப்படும் நாள். |
துலாம் ![]() | குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். சொத்து சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தைரியம் கூடும் நாள். |
விருச்சிகம் ![]() | புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித் திறமைகளை கண்டறிவீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கனவு நனவாகும் நாள். |
தனுசு![]() | இன்று குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்பட்டாலும் குடும்ப உறுப்பினர்களுக்காக மருத்துவ செலவு செய்ய வேண்டி இருக்கலாம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளை அவர்களின் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நன்மை தரும். அக்கம் – பக்கம் வீட்டாரை அனுசரித்துச் செல்ல வேண்டி வரலாம். மொத்தத்தில் பொறுமையால் சாதிக்க வேண்டிய நாள். |
மகரம்![]() | இன்றைய தினம் உங்களுக்கு உடல் அசதி ஏற்பட இடம் உண்டு. பேச்சில் நிதானம் தேவை. சூரியனின் சஞ்சாரத்தால் அலைச்சல் இருந்தாலும் கூட முயற்சிக்கு தக்க பலன் கிடைக்கப்பெறும். சூழ்நிலைகளை அனுசரித்து வெல்ல வேண்டிய தினம் இன்று. எனினும் அலைச்சல் இருந்தாலும் இறுதியில் வெற்றியும் உண்டு. |
கும்பம்![]() | இந்த நாளில் உங்கள் முயற்சிகளுக்கு தக்க காரிய சாதனை உண்டு. சிலர் புதிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் தைரியம் – தன்னபிக்கை வளரும். அதனால், செலவுகளை திறம்பட சமாளிப்பீர்கள். மொத்தத்தில் இந்த நாள் உங்களுக்கு அதிக நன்மை தரும் நாளாகவே இருக்கும். போராட்டங்களை கடந்து வெற்றி பெறுவீர்கள். அதனால் கவலை வேண்டாம். |
மீனம்![]() | குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் வேலை பளுவை திறம்பட சமாளிப்பீர்கள். கோபத்தை மட்டும் குறைத்துக் கொள்ளப்பாருங்கள் |
- Advertisement -