ராசி | பலன் |
மேஷம்  | குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நண்பர்களில் நல்லவர்கள் யார் என்பதை அறிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பணியிடத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர். |
ரிஷபம்  | பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று கொள்வார்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். புது நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பாராத வெற்றி கிடைக்கும் நாள். |
மிதுனம்  | நல்லோரின் நட்பை பெற்று மகிழ்வீர்கள். எதிர்காலத் திட்டம் குறித்து ஆலோசிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் மறைமுகப் போட்டி குறையும். பணவரவு அதிகரிக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். பெரும்பாலும் நல்லதே நடக்கும். அதனால் கவலை வேண்டாம். |
கடகம்  | சிலருக்குத் தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அரசு வகையில் அலைச்சல் இருந்தாலும் கூட இறுதியில் முயற்சி வீண் போகாது. சிலருக்கு, சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்பட இடம் உண்டு. பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. பிற்பகலுக்கு மேல் சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தந்தை வழி உறவினர்களின் ஆதரவு சிலருக்கு கிடைக்கப்பெறலாம். வியாபாரத்தில் விற்பனை எப்போதும் போல் இருக்கும். |
சிம்மம்  | குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பூர்வீக சொத்து பிரச் னைக்கு தீர்வு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள். |
கன்னி  | தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாலையில் குடும்பத்துடன் தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். |
துலாம்  | உங்கள் செயலில் வேகம் கூடும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். சாதித்துக் காட்டும் நாள். |
விருச்சிகம்  | மனதில் தைரியம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். தந்தை வழி உறவினர்களால் காரிய அனுகூலம் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மன வருத்தங்கள் நீங்கும். வாழ்க்கைத் துணை மூலம் பண வரவுக்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். |
தனுசு | இன்று சிலருக்கு வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்பட இடம் உண்டு. அதனால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவைப்படும் நாள். எவ்வளவு வேலை பளு இருந்தாலும் கூட நிதானமாக செயல்பட வேண்டும். ஆயுதங்கள், வாகனங்களை கையாளும் சமயத்தில் கூடுதல் கவனம் தேவை. சுமாரான நாள் தான். எனினும் குரு பார்வையால் தீமையில் இருந்து கடைசி நொடியில் காக்கப்படுவீர்கள் |
மகரம் | பொறுமையுடன் இருக்கவேண்டிய நாள். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். முக்கிய முடிவுகளை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது மிக அவசியம். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். பங்குதாரர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். |
கும்பம் | மனம் பக்குவம் அடையும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுக்க இடம் உண்டு. கணவன் – மனைவிக்கிடையே பிரச்சனையை பேசித் தீர்க்க முயலுவீர்கள். வாழ்க்கைத் துணை வழி உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். சிலரது உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத் துணை ஆதரவாக இருப்பார். சிலரது ஆலோசனை உறவினர்களால் பாராட்டப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் ஓரளவு ஆறுதல் தரும். பல வித புதிய அனுபவங்களை உள்ளடக்கிய நாள். |
மீனம் | இன்று மற்றவர்களுடன் இருந்த பகை நீங்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். பணம் வரும் வாய்ப்பு உள்ளது. எதிர்த்து செயல்பட்டவர்கள் ஒதுங்கி விடுவார்கள். நீண்ட நாள் கஷ்டங்கள் நீங்கும். பல விதத்திலும் நன்மை செய்யும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். புத்தி கூர்மையுடன் செயல்படுவீர்கள். தைரியம் உண்டாகும்.
|