ராசி பலன்-பஞ்சாங்கம்-21.06.2021
தமிழ் தேதி /கிழமை/வருடம் | ஆனி -7/திங்கள் /5123 பிலவ |
ஆங்கில நாள் | 21.06.2021 |
இன்றய சிறப்பு | சர்வ ஏகாதசி ,சுபமுகூர்த்த தினம் |
சூரியன் உதயம் | 05.43AM |
சூரியன் அஸ்தமனம் | 06.36PM |
ராகு காலம் | 07.30AM -09.00AM |
குளிகை காலம் | 01.30PM -03.00PM |
அபிஜித் முகூர்த்தம் | 11.45AM -12.35PM |
எம கண்டம் | 10.30AM -12.00PM |
திதி | ஏகாதசி காலை 10.23 மணிக்கு மேல் துவாதசி |
நட்சத்திரம் | சுவாதி மதியம் 01.10 மணிக்கு மேல் விசாகம் |
சந்திராஷ்டமம் | ரேவதி ,அஸ்வினி |
யோகம் | சித்தயோகம்/மரண யோகம் |
சூலம் | கிழக்கு |
பரிகாரம் | தயிர் |
ராசி | பலன் |
மேஷம் ![]() | பணிகளை நிறைவேற்றுவதில் தாமதம் ஆகலாம். நண்பரின் உதவியால் மாற்று வழிகளை பின்பற்றுவீர்கள். தொழிலில் அளவான உற்பத்தி, விற்பனை உண்டு. புதிய வகையில் பணச்செலவு ஏற்படலாம். ஒவ்வாத உணவு உண்பதை தவிர்ப்பதால் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். |
ரிஷபம் ![]() | அனைவரிடமும் இனிய வார்த்தை பேசுவீர்கள். உங்கள் மீதான நன்மதிப்பு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கை பூர்த்தி செய்வீர்கள். உபரி பணவருமானம் கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள். |
மிதுனம் ![]() | இந்த நாளை பொறுத்தவரையில் வரவு வருவதற்கு முன்னமே செலவு வந்து உங்கள் வாயில் கதவை தட்டும். குருவின் பார்வை அதிக அளவில் ஆறுதல் அளிக்கும். சிலருக்கு மனைவியுடன் சிறு, சிறு பிரச்சனைகள் வந்து போக இடம் உண்டு. எனினும் நீங்கள் அமைதியாகவும், பொறுமையாகவும், இறை நம்பிக்கையுடனும் இருந்தால் இந்த நாளை இனிய நாளாக மாற்றலாம் |
கடகம் ![]() | இன்றைய தினத்தில் சிலர் புதிய சொத்துக்களை வாங்கும் வாய்ப்பு கிடைக்கப்பெறும். சிலர் வாகனங்களை மாற்றலாம் அல்லது அது சம்மந்தமாக சில செலவுகளை செய்யலாம். மற்றபடி உடலில் சோர்வு, அலுப்பு தென்படலாம். நெருப்பு, ஆயுதங்கள் போன்ற இவற்றை கையாளும் சமயத்திலும், வண்டி – வாகனங்களில் செல்லும் சமயத்திலும் கூடுதல் கவனம் தேவை. எப்படிப் பார்த்தாலும் இன்று ஒரு சுமாரான நாளாகவே உங்களுக்கு இருக்கும். |
சிம்மம் ![]() | இன்று அலைச்சல் இருந்தாலும் கூட காரிய வெற்றி உண்டு. பேச்சில் மட்டும் நிதானமாக இருந்தீர்கள் என்றால் வெற்றியை மகத்தான வெற்றியாக மாற்றலாம். உங்கள் தேவைகள் அவ்வப் போது நிறைவேறும். குரு பார்வை எப்படிப் பார்த்தாலும் உங்களுக்கு நன்மையை தான் செய்யும். மொத்தத்தில் இது ஒரு நல்ல நாள் |
கன்னி ![]() | எதிர்பார்த்த பணவரவு ஓரளவு கிடைக்கும். சிலருக்கு பிள்ளைகள் மூலமும் பண வரவுக்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத் துணையால் செலவுகள் ஏற்படும். மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. தந்தையின் உடல் நலனில் கவனம் செலுத்தவும். பணிச் சுமை ஓரளவு குறையும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சற்றே அதிகரிக்கும். ஆனால், பணியாளர்களால் பிரச்சனை ஏற்பட இடம் உண்டு. பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பது சிலருக்குத் தாமதமாகும். |
துலாம் ![]() | புதிய முயற்சிகள் அனுகூலமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படும். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக் கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் கூடுதலாகக் கிடைக் கும். திடீர் செலவுகளும் ஏற்படும் |
விருச்சிகம் ![]() | புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதர வகையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு, பிற்பகலுக்கு மேல் மற்றவர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் அனுசரித்துச் செல்வது நல்லது. இன்னும் சிலருக்கு, மாலையில் உறவினர்கள் மூலம் கிடைக்கும் தகவல் சற்று சங்கடத்தை ஏற்படுத்தும். மற்றபடி, வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். உத்யோகஸ்தர்களுக்கு இது ஒரு சாதாரண நாள். |
தனுசு![]() | இன்று பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கவும் நேரிடும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளுக்காகப் பாடுபட வேண்டி இருக்கும். உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும். வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படும். |
மகரம்![]() | குடும்பத்தினரின் ரசனையை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். எதிர்பார்த்த வருமானம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பெண்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறும். தாயின் அன்பு, ஆசியை பெறுவீர்கள். சிலருக்குத் தாயார் வழியில் கூட சில உதவிகள் கிடைக்க இடம் உண்டு. எனினும், தாயாரின் உடல் நிலையில் கூடுதல் கவனம் செலுத்தவும். வண்டி. வாகனங்கள் தொடர்பாக சிலருக்கு செலவுகள் ஏற்படலாம். |
கும்பம்![]() | இன்று எல்லாவற்றிலும் சாதகமான பலனே கிடைக்கும். பணவரவில் திருப்தி காணப்படும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி வேகம் பிடிக்கும். எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்கும். |
மீனம்![]() | விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் குறையும். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள் |
- Advertisement -