Rasi Palan Today-29.08.2021

மேஷம்-Mesham
உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். தாயாரின் உடல் நிலை சீராகும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
ரிஷபம்-Rishabam
கணவன் மனைவி ஒற்றுமையில் சிறிய அளவிலான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வியாபாரிகளுக்கு தடைகள் ஏற்பட்ட பிறகே நன்மை உண்டாகும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். திருமணம் பற்றிய முயற்சிகள் அலைச்சலுக்குப் பிறகே வெற்றி தரும்.
மிதுனம்-Mithunam
பெண்களுக்கு குடும்பத்தினரின் பாராட்டு கிடைக்கும். மாணவர்களின் நீண்டநாள் கனவு நிறைவேறும். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வெற்றி உண்டாகும். வெளிநாட்டில் இருப்பவர்கள் முயற்சி செய்தால் தாய் நாடு திரும்புவதற்கான வாய்ப்பு உண்டு.
கடகம்-Kadagam
எல்லோரிடமும் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வீர்கள். பெண்களுக்கு ஆடை, நகைகளின் சேர்க்கையால் மகிழ்ச்சி உண்டாகும். பணியாளர்கள் விரும்பிய இடமாற்றத்தை பெறுவதற்கான சூழல் உருவாகும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.
சிம்மம்-Simmam
தவறு செய்பவர் களை தட்டிக் கேட்பீர்கள். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கலாம். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். உழைப்பால் வெற்றி அடையும் நாள்.
கன்னி -Kanni
கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டு விட்டோமே என்றெல்லாம் வருந்துவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறு வீர்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். எதிர்ப்புகள் அதிகரிக்கும் நாள்.
துலாம்-Thulam
மனதில் அவ்வப்போது குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். வாழ்க்கைத் துணை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் தாமதமாகும். உறவினர்கள் மூலம் குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டாலும், அதனால் பாதிப்பு எதுவும் ஏற்படாது. வியாபாரத்தில் விற்பனை சுமாராகத் தான் இருக்கும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படும்.
விருச்சிகம்-Viruchigam
எதிர்பாராத செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆனாலும், தேவையான பணம் கையில் இருப்பதால், சமாளித்துவிடுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்கவும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். அலைச்சல் அதிகம் காணப்பட்டாலும் உங்களது முயற்சி வீண் போகாது.
தனுசு-Thanusu
மனதில் தெய்வபக்தி அதிகரிக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. மாலையில் உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில செலவுகள் ஏற்படக்கூடும்.
மகரம்-Magaram
நல்லோரின் நட்பை பெற்று மகிழ்வீர்கள். எதிர்காலத் திட்டம் குறித்து ஆலோசிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் மறைமுகப்போட்டி குறையும். பணவரவு தேவைகளை நிறைவேற்றும் படியாக இருக்கும்.சிலருக்கு மனைவி வழியில் செலவுகள் ஏற்பட இடம் உண்டு.
கும்பம்-Kumabm
இன்று காரியங்கள் தடைபட்டாலும் பின்னர் நன்றாக நடந்து முடியும். பண வரத்து ஓரளவே திருப்தி தரும். சிலருக்கு மருத்துவ செலவுகள் குறையலாம். தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சல் ஆர்டர் கிடைப்பதில் தாமதம் போன்றவை ஏற்பட்டாலும், அவற்றை எல்லாம் சமாளித்து வெற்றி நடை போடுவீர்கள்.
மீனம்-Meenam
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரிக்க இடம் உண்டு. சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் உண்டாகலாம். சிலர் அதிக உழைப்பின் பேரில் வேலைகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் எல்லா பிரச்சனைகளும் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும்.
ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …