ராசி | பலன் |
மேஷம்  | சிந்தித்துச் செயல்படவேண்டிய நாள். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சகோதரர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். அவசியம் ஏற்பட்டால் தவிர வெளியில் செல்வதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பங்குதாரர்கள் அனுசரணையாக இருப்பார்கள். |
ரிஷபம்  | குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். நிம்மதியான நாள். |
மிதுனம்  | குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். சொந்த பந்தங்களின் சுயரூபத்தை அறிந்துக் கொள்வீர்கள். பணவரவு உண்டு. வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். இனிமையான நாள்
|
கடகம்  | தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். நெருங்கி யவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். மதிப்புக் கூடும் நாள் |
சிம்மம்  | கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள். |
கன்னி  | பணவரவும் செலவுகளும் சமமாக இருக்கும் நாள். கேட்டிருந்த உதவிகள் கிடைக்கும். மாலையில் குடும்பத்துடன் உற்சாகமாகப் பேசி மகிழ்வீர்கள். எதிரிகள் பணிந்து போவார்கள். செய்யும் செயல்களில் சிறு சிறு தடைகள் உண்டாகலாம். எனினும் சமாளித்து விடுவீர்கள். உறவினர்களால் ஏற்பட்ட மறைமுகத் தொல்லைகள் மறையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் அனுசரணையாக நடந்து கொள்ளவும். மற்றபடி, சின்னச் சின்ன அலைச்சல்கள் இருந்தாலுமே உங்களது முயற்சி வீண் போகாது. |
துலாம்  | நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். பிள்ளைகளின் பொறுப்புணர்வை பாராட்டுவீர்கள். சிலருக்கு காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் சிலருக்குக் கிடைக்கும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். சிறப்பான நாள். |
விருச்சிகம்  | உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். தாயாரின் உடல் நிலை சீராகும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள் |
தனுசு | உறவினர், நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். பெண்கள் எடுத்த சவால்களில் வெற்றி பெறுவர். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியின் மூலம் முக்கிய அறிவுரை கிடைக்கும். |
மகரம் | இன்று குடும்பத்தில் சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும், பாதிப்பு இருக்காது. உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். தாய்வழியில் திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும். சிலருக்கு நீண்ட நாளாக முடியாமல் இருந்த தெய்வ பிரார்த்தனைகளை நிறை வேற்றும் வாய்ப்பு ஏற்படும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் பேசும் போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் பணம் கேட்டு நச்சரிக்கலாம். பொறுமையுடன் அதனைக் கையாளவும். மொத்தத்தில், கோபத்தைக் குறைத்து நிதானமாக வெற்றி அடைய வேண்டிய நாள். |
கும்பம் | எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிள்ளைகள் வழியில் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். வெளியூர்ப் பயணங்களையும், வெளியிடங்களில் சாப்பிடுவதையும் தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் வருகையால் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்க வேண்டி வரும். மாலையில் திடீர் என நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படலாம். அலுவலகப் பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத் தான் இருக்கும்.
|
மீனம் | எதிர்பார்க்கும் காரியங்களில் அலைச்சல் இருந்தாலும் உங்களது முயற்சி வீண் போகாது. ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலர், தாயின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். பிற்பகலுக்கு மேல் வீண் செலவுகள் மனச் சஞ்சலத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் மறைமுக இடையூறுகள் ஏற்படக்கூடும். எனினும் அதனை சமாளித்து வெற்றி பெறுவீர்கள்
|