ராசி | பலன் |
மேஷம்  | உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சிலரது முயற்சிகளுக்கு சகோதரர்கள் ஒத்துழைப்பு தரலாம். பிள்ளைகளின் விருப்பத்தை சிலர் நிறைவேற்றுவீர்கள். மாலையில் மகிழ்ச்சியான தகவல்கள் சிலருக்கு வந்து சேரலாம். . அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை சிலருக்கு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் கூடுதலாகக் கிடைப்பது மகிழ்ச்சி தரும். |
ரிஷபம்  | வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். சிறுசிறு அவமானங்கள் ஏற்படக்கூடும். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டிவரும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். கணுக்கால் வலிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்க இடம் தராதீர்கள். வேலைச்சுமை மிகுந்த நாள். எனினும் நீங்கள் சமாளித்து விடுவீர்கள் |
மிதுனம்  | ஒருவித படபடப்பு வந்து செல்லும். தலைசுற்றல் முழங்கால் வலி வந்து நீங்கும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் வாடிக் கையாளர்களால் மறைமுகப் பிரச்சினைகள் உருவாகும். உத்தியோகத்தில் சக ஊழியர் களுடன் பனிப்போர் வந்து நீங்கும். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.
|
கடகம்  | புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சி ஒன்று ஏற்பாடாகும். சிலருக்கு வீண் அலைச்சலுடன் உடல் அசதியும் ஏற்படக்கூடும். பிற்பகலுக்கு மேல் சோர்வு நீங்கி உற்சாகம் பெறுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் கனிவான அணுகுமுறை அவசியம் |
சிம்மம்  | இன்று காரியங்கள் தடைபட்டாலும் பின்னர் நன்றாக நடந்து முடியும். பண வரத்து ஓரளவே திருப்தி தரும். சிலருக்கு மருத்துவ செலவுகள் குறையலாம். தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சல் ஆர்டர் கிடைப்பதில் தாமதம் போன்றவை ஏற்பட்டாலும், அவற்றை எல்லாம் சமாளித்து வெற்றி நடை போடுவீர்கள் |
கன்னி  | குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். புது நட்பு மலரும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தடைகள் உடைபடும் நாள். |
துலாம்  | எந்த விஷயத்தையும் சவாலாக அணுகுவீர்கள். கடந்த காலத்தில் திகைப்பு தந்த பணி எளிதாக நிறைவேறும்.தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலை திருப்தியளிக்கும். பணியாளர்கள் பாராட்டு வெகுமதி பெறுவர். மனைவி விரும்பிய பொருளை சிலர் வாங்கித் தரலாம். மொத்தத்தில் ஆடம்பரங்கள் இல்லாத ஒரு அமைதியான நாள்… இந்நாள். |
விருச்சிகம்  | குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசு வார்கள். நினைத்தது நிறைவேறும் நாள். |
தனுசு | இன்று எதிர்ப்புகள் அதிகரித்தாலும் சமாளித்து விடுவீர்கள். அரசு காரியங்கள் சிலருக்குத் தாமதம் ஆகலாம். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நாள். அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். பொறுமையாக இருந்து வெற்றி அடைய வேண்டிய நாள் இந்த நாள். |
மகரம் | உங்களிடம் உதவி பெற்றவர் நன்றி பாராட்டுவர். தொழில் வியாபாரம் செழிக்க அதிக நேரம் பணிபுரிவீர்கள். உபரி வருமானம் கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். பெண்களால் குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும். |
கும்பம் | கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். புது முடிவுகள் எடுப்பீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். நிம்மதியான நாள்.
|
மீனம் | எதிர்பார்த்த பணம் கைக்கு வர சற்று காத்திருக்க வேண்டி வரலாம். சகோதரர்கள் பணம் கேட்டு வருவார்கள். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் ஓரளவே அனுகூலமாக முடியும். எதிரிகளால் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், கவனமாக இருக்கவும். நீங்கள் கொடுத்த கடன் தொகை திரும்பக் கிடைப்பதற்கு பல முயற்சிகளை செய்ய வேண்டி இருக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனம் தேவை. குறிப்பாகப் பெரிய தொகையை தகுந்த சாட்சியம் இன்றி நம்பி யாரிடத்திலும் தர வேண்டாம்.
|