Rasi Palan Today-08.02.2022
மேஷம்-Mesham
எளிதாக முடிய வேண்டிய சில காரியங்களை கூட போராடி முடிக்க வேண்டி வரும். உறவினர் நண்பர்களால் பிரச்னைகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து போங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. மொத்தத்தில் கவனமாக இருந்து கொள்ளுங்கள். கோபத்தை குறைத்து நிதானத்தை மேற்கொள்ளுங்கள்.
ரிஷபம்-Rishabam
பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனதிற்கு பிடித்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். புது நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். எதிர்பார்த்த வேலைகள் முடியும் நாள்.
மிதுனம்-Mithunam
பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாகன வசதிப் பெருகும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.
கடகம்-Kadagam
வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு.அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். கனவு நனவாகும் நாள்.
சிம்மம்-Simmam
எதிர்ப்புகள் அடங்கும். பிள்ளைகளால் ஆறுதல் கிடைக்கும். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
கன்னி -Kanni
ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருக்கும். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்து போட்டுபார்க்க வேண்டி வரும். தர்ம சங்கடமான சூழலில் சிக்கிக் கொள்வீர்கள். பேச்சில் காரம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். நல்லன நடக்கும் நாள்.

துலாம்-Thulam
பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.
விருச்சிகம்-Viruchigam
மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.
தனுசு-Thanusu
சில வேலைகளை விட்டு கொடுத்து முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.
மகரம்-Magaram
குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உறவினர்கள் வீடுதேடி வருவார்கள். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.
கும்பம்-Kumabm
கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள். சுப நிகழ்ச்சிகளாலும் விருந்தினர்களின் வருகையாலும் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றி பெறும் நாள்.
மீனம்-Meenam
குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.