ராசி |
பலன் |
மேஷம்  |
மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். மனஉறுதியுடன் முடிவெடுத்து செயல்படுவீர்கள். சிலருக்குக் குடும்பத்துடன் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும் என்றாலும், உரிய சிகிச்சையினால் உடனே நிவாரணம் கிடைத்து விடும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்க சற்றே கூடுதல் முயற்சி எடுக்க வேண்டி இருக்கும். மொத்தத்தில் முயற்சியால் முன்னேறும் நாள். அலைச்சல் இருந்தாலுமே உங்களது முயற்சி வீண் போகாது. கவலை வேண்டாம். |
ரிஷபம்  |
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்த வர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள் |
மிதுனம்  |
குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். பணப் பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள் |
கடகம்  |
தாய்வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிகளுக்கு ஒத்துழைப்புத் தருவார். அவர் மூலம் உங்களுக்குத் தேவையான உதவிகளும் கிடைக்கும். தந்தையுடனும் தந்தைவழி உறவினர்களுடனும் வீண் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். அரசுப்பணியில் இருப்பவர்கள் அதிகாரிகளிடம் பேசும்போது பதற்றம் தவிர்ப்பது அவசியம். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். |
சிம்மம்  |
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரிக்க இடம் உண்டு. சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் உண்டாகலாம். சிலர் அதிக உழைப்பின் பேரில் வேலைகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் எல்லா பிரச்சனைகளும் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். |
கன்னி  |
பிள்ளைகளின் தேவைகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. குடும்ப விஷயமாக முக்கிய முடிவு எடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். சகோதரர்களுடன் மனவருத்தம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். |
துலாம்  |
செயல்களில் தைரியம் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி மற்றும் பொறாமை குறையும். சிலர் கடனில் ஒருபகுதியைச் செலுத்துவீர்கள். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் வழிபாட்டில் ஈடுபடுவர் |
விருச்சிகம்  |
குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள். எனினும், உங்களது உழைப்பு வீண் போகாது |
தனுசு |
கடினமான காரியங்களையும் எளிதாக, திட்டமிட்டு முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். திறமைகள் வெளிப்படும் நாள். |
மகரம் |
எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். அமோகமான நாள்.. |
கும்பம் |
மனதில் உற்சாகமும், செயல்களில் பரபரப்பும் காணப்படும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் யோசனையை வாழ்க்கைத் துணை ஏற்றுக் கொள்வார். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும், ஆடை, ஆபரண சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. நீண்டநாளாகத் தொடர்பில் இல்லாத நண்பர்கள் சிலரைத் தொடர்பு கொண்டு பேசுவார்கள். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் சென்றால் நன்மை உண்டு. |
மீனம் |
இன்று பொறுமையும் சகிப்புத் தன்மையும் அதிகம் தேவைப்படும். சிலருக்குத் தாய் வழி ஆதரவு ஆறுதல் தரும். உறவினர்கள் வகையில் வீண் மனஸ்தாபம் ஏற்பட இடம் உண்டு. புதிய முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவை யான பணம் கிடைத்துவிடுவதால் சமாளித்து விடுவீர்கள். வியாபாரத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். கூட்டாளிகளை அதிகம் நம்ப வேண்டாம். உத்யோகஸ்தர்களுக்கு புதிய அனுபவங்கள் தரும் நாள். |