இன்றைய ராசி பலன்- 18.7.2021
மேஷம்
சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.
ரிஷபம்
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நண்பர்களில் நல்லவர்கள் யார் என்பதை அறிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பணியிடத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர்.
மிதுனம்
உங்கள் பிடிவாத போக்கை கொஞ்சம் மாற்றி கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
கடகம்
உணர்ச்சி வசப்படாமல் அறிவுப் பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.
சிம்மம்
ஆழ்ந்து யோசித்து தன் பலம் பலவீனத்தை உணருவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு மனைவி வழியில் பக்க பலமாக இருப்பார்கள். வாகன ரீதியாக சிலருக்கு செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பீர்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
கன்னி
தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். புதுவேலை கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப் பால் உயரும் நாள்.
துலாம்
தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாலையில் குடும்பத்துடன் தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.
விருச்சிகம்
காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மாலையில் எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.
தனுசு
முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு நிகழும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. பழைய கடனைத் தீர்க்கப் புது வழி பிறக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலமாக லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். உழைப்பால் உயரும் நாள்.
மகரம்
வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வழியில் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்பட இடம் உண்டு. கணவன் – மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். சகோதரர்களுக்காகச் செலவு செய்ய நேரிடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் எப்போதும் போல் நடைபெறும்.
கும்பம்
கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டு விட்டோமே என்றெல்லாம் வருந்துவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறு வீர்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். எதிர்ப்புகள் அதிகரிக்கும் நாள்.
மீனம்
மனதில் இனம் தெரியாத குழப்பத்திற்கு இடம் தராதீர்கள். புதிய முயற்சிகளை நன்கு திட்டமிட்டு நிதானமாக யோசித்துச் செய்யவும். வாழ்க்கைத் துணை வழி உறவுகளால் செலவுகள் ஏற்படவும் இடம் உண்டு. அக்கம் பக்கத்தில் இருப்பவர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம். வியாபாரத்தில் பணியாளர்களுடன் அனுசரித்துச் செல்லவும். மொத்தத்தில் இது ஒரு சுமாரான நாள் தான். சிலர் எதிர் நீச்சல் போட்டு முன்னேறுவீர்கள்.
பஞ்சாங்க குறிப்புகள் மற்றும் கிரக நிலைகள் -18.7.2021

தமிழ் தேதி /கிழமை/வருடம் | ஆடி -2/ஞாயிறு /5123 பிலவ |
ஆங்கில நாள் | 18.7.2021 |
இன்றய சிறப்பு | லட்சுமி நரசிம்மருக்கு உகந்த நாள் |
சூரியன் உதயம் | 05.50AM |
சூரியன் அஸ்தமனம் | 06.40PM |
ராகு காலம் | மாலை 4.30-6.00 |
நாள் | இரவு 10.27 வரை சம நோக்கு நாள் பின் கீழ் நோக்கு நாள் |
குறிப்புகள் | கரிநாள் ,புதிய முயற்சியை தவிர்க்கவும் |
எம கண்டம் | மதியம் 12.00-1.30 |
நல்ல நேரம் | காலை 6.00-7.30/9.30-10.30|மதியம் 1.30-2.00|மலை 4.00-4.30 |
திதி | இரவு 10.10 வரை நவமி பின் (வ )தசமி |
நட்சத்திரம் | இரவு 10.27 வரை சுவாதி பின் விசாகம் |
சந்திராஷ்டமம் | மீன ராசி (17.07.2021 முதல் 19.07.2021)வரை |
யோகம் | இரவு 10.27 வரை சித்த யோகம் பின் மரண யோகம் |
சூலம் | மேற்கு |
பரிகாரம் | இனிப்பு |