ராசி |
பலன் |
மேஷம்  |
இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டியது அவசியம். புதிய முயற்சியைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனஸ்தாபம் ஏற்படும் என்பதால், வார்த்தைகளில் நிதானம் தேவை. தாயின் உடல்நலனில் கவனம் தேவை. வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்படுவது அவசியம். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். மொத்தத்தில் இது ஒரு சுமாரான நாள். மேற்கண்ட சோதனைகளை தவிர்க்க விநாயகரை வழிபடுங்கள் |
ரிஷபம்  |
உணர்ச்சி வசப்படாமல் அறிவுப் பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள். |
மிதுனம்  |
கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். நண்பர்கள், உறவினர்களுடன் உரிமையில் வரம்பு மீறிப் பேச வேண்டாம். யாரை நம்புவது என்கிற மனக் குழப்பத்திற்கு ஆளாவீர்கள். சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள். உத்யோகத்தில் தாணுன்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும் நாள். |
கடகம்  |
கணவன்-மனைவிக்குள் வீண் விவாதம் வந்து செல்லும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னை கள் வந்து விலகும். எதிலும் நிதானம் தேவைப் படும் நாள். |
சிம்மம்  |
இன்று பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக முக்கிய பணிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. எடுத்த காரியம் தடைபட்டு பின்னர் நல்லபடியாக நடந்து முடியும். மனதில் எதை பற்றியாவது சிந்தித்த வண்ணம் இருப்பீர்கள். |
கன்னி  |
திடீர் செலவுகள் ஏற்படும். தேவையான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும் |
துலாம்  |
இன்று சிலருக்கு திருமணம் சம்மந்தமான பேச்சு வார்த்தைகள் நன்மை தரும். நினைத்த காரியங்கள் நல்ல படியாக நடந்தேறும் நல்ல நாள்… இந்த நாள். வெற்றிகள் பல வகையில் உங்களுக்கு குவியும். முயற்சியால் முன்னேறி செல்வீர்கள். |
விருச்சிகம்  |
இன்று கிரக சஞ்சாரத்தை வைத்துப் பார்க்கும் போது, நீங்கள் சீக்கிரம் களைப்பு அடைய இடம் உண்டு. எனினும் உங்கள் தேவைகள் தக்க சமயத்தில் பூர்த்தி ஆகும். முடிந்தவரையில் சரும பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள். உங்கள் தந்தையின் உடல் நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டிய தினம் இன்று. வண்டி, வாகனங்களில் செல்லும் சமயத்தில் நிதானம் தேவை. தொழில் துறையினர் தவறான முடிவுகளை எடுக்காமல் கலந்து ஆலோசித்து எந்த ஒரு முடிவையும் எடுப்பது நல்லது. செலவை சமாளிக்க கனகதாரா ஸ்லோகத்தை சொல்லி வாருங்கள். |
தனுசு |
இன்றைய தினத்தில் முற்பகுதி நன்மையை செய்யும் பிற்பகுதியில் பண விஷயத்தில் மட்டும் சற்று கவனமாக இருந்து கொள்ளுங்கள். எனினும் கூட்டிக் கழித்து எப்படிப் பார்த்தாலும் இந்த தினம் உங்களுக்கு நன்மைகளை அதிகம் தரும் தினமாகவே இருக்கும். அலைச்சல் அதிகம் இருந்தாலும் கூட அதனால் உங்கள் முயற்சி வீண் போகாது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரித்தாலும் கூட அதற்கான நல்ல பலன் உண்டு. அனைத்து வகையிலும் ஏற்றம் தரும் நன்னாள் இந்நாள். |
மகரம் |
இன்றைய நாளில் நாளின் முற்பகுதியை விட பிற்பகுதி சில நன்மைகளை கொண்டு இருக்கும். சிலர் செலவு செய்து ஆடம்பர பொருள்களை வாங்கி மகிழ்வார்கள். அதிலும் பிள்ளைகள் வழியில் சில தேவையான செலவுகளை செய்ய நேரிடலாம். மற்றபடி எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் அதிகரிக்கும். நாளின் பிற்பகுதியில் நன்மைகள் மேலோங்க இடம் உண்டு. |
கும்பம் |
இன்றைய தினத்தை பொறுத்தவரையில் முற்பகுதியில் காரிய ஜெயமும், பிற்பகுதியில் செலவுகளை சமாளிக்கும் அளவிற்கும் பண வரவும் ஏற்பட இடம் உண்டு. தாயாரின் உடல் நிலையில் மட்டும் அதிக கவனம் எடுத்துக் கொள்ளுதல் நலம். எனினும் எப்படிப் பார்த்தாலும் இந்த நாள் உங்களுக்கு அதிக நன்மைகளை செய்யும் நன்னாள் ஆகவே இருக்கும். |
மீனம் |
கணவன் மனைவி ஒற்றுமையில் சிறிய அளவிலான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வியாபாரிகளுக்கு தடைகள் ஏற்பட்ட பிறகே நன்மை உண்டாகும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். திருமணம் பற்றிய முயற்சிகள் அலைச்சலுக்குப் பிறகே வெற்றி தரும். |