Rasi Palan Today-27.08.2021

மேஷம்-Mesham
இன்று எதிர்ப்புகள் அதிகரித்தாலும் சமாளித்து விடுவீர்கள். அரசு காரியங்கள் சிலருக்குத் தாமதம் ஆகலாம். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நாள். அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். பொறுமையாக இருந்து வெற்றி அடைய வேண்டிய நாள் இந்த நாள்.
ரிஷபம்-Rishabam
உங்களிடம் உதவி பெற்றவர் நன்றி பாராட்டுவர். தொழில் வியாபாரம் செழிக்க அதிக நேரம் பணிபுரிவீர்கள். உபரி வருமானம் கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். பெண்களால் குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும்.
மிதுனம்-Mithunam
எதிர்பார்த்த பணம் கைக்கு வர சற்று காத்திருக்க வேண்டி வரலாம். சகோதரர்கள் பணம் கேட்டு வருவார்கள். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் ஓரளவே அனுகூலமாக முடியும். எதிரிகளால் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், கவனமாக இருக்கவும். நீங்கள் கொடுத்த கடன் தொகை திரும்பக் கிடைப்பதற்கு பல முயற்சிகளை செய்ய வேண்டி இருக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனம் தேவை. குறிப்பாகப் பெரிய தொகையை தகுந்த சாட்சியம் இன்றி நம்பி யாரிடத்திலும் தர வேண்டாம்.
கடகம்-Kadagam
மனதில் வீண் குழப்பங்களுக்கு இடம் தர வேண்டாம். புதிய முயற்சி அலைச்சல் தந்தாலுமே இறுதியில் சாதகம் ஆகும். குல தெய்வ பிரார்த்தனைகளை சிலர் நிறைவேற்றுவீர்கள். தாய் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கலாம். உடல் நலனில் கவனம் தேவை. மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத் தான் இருக்கும். சக வியாபாரிகளால் பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்யோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் கொடுக்கப் படலாம்.
சிம்மம்-Simmam
அனுகூலமான நாள். எடுத்த காரியங்கள் இனிதாக முடியும். தேவையான பணம் இருப்பதால் செலவுகளைச் சமாளித்து விடுவீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கைத் துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். சிலர் தாயின் தேவைகளை நிறைவேற்ற முயற்சி எடுப்பீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
கன்னி -Kanni
கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். பணம் வாங்கி தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து போகும். எதிலும் பொறுமை தேவைப்படும் நாள்.
துலாம்-Thulam
சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். எதிர்ப்புகள் அதிகரிக்கும் நாள். எனினும் அதை எல்லாம் சமாளித்து நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
விருச்சிகம்-Viruchigam
எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்கள் வகையில் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வது மகிழ்ச்சி தரும். மற்றவர்களுடன் மனவருத்தம் ஏற்படக்கூடும் என்பதால் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.
தனுசு-Thanusu
தாய் வழி ஆதரவு அவ்வப்போது ஆறுதல் தரலாம். காரியங்கள் முடிவதில் சிறு தாமதம் ஏற்படக்கூடும். மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த தகவல் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போல் நடைபெறும்.
மகரம்-Magaram
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெண்களுக்கு புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பொதுச் செயல்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரிகளுக்குப் பழைய சிக்கல்கள் தீரும். பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்க இடம் உண்டு. சிலருக்கு வீடு, வாகனம் தொடர்பாக செலவுகள் ஏற்பட இடம் உண்டு.
கும்பம்-Kumabm
இன்றைய தினத்தில், எதிர்பார்ப்பு கூடுவதால் ஏமாற்றங்களுக்கு உள்ளாக வாய்ப்பு உண்டு. கணவன் மனைவி ஒற்றுமையில் சிறு சிறு பிணக்குகள் ஏற்பட்டாலும் இறுதியில் சரியாகும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும்.
மீனம்-Meenam
மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். சிலருக்கு திடீர் பயணங்கள் அலைச்சல் தரலாம். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் இறுதியில் பலிதமாகும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் சிலரைத் தேடி வரும். மனதளவில் தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …