ராசி | பலன் |
மேஷம்  | உத்யோகத்தில் மேலதிகாரிகளை பகைத்து கொள்ளாதீர்கள். உறவினர் விவகாரங்களில் வளைந்து கொடுப்பது நல்லது. பெண்கள் உற்சாகமாக எதையும் செய்ய தொடங்குவர். பிள்ளைகள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட ஆரம்பிப்பர் |
ரிஷபம்  | திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். உறவினர் நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். வாகனத்தில் கவனம் தேவை. யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள். |
மிதுனம்  | புதிய முயற்சி சாதகமாக முடியும். காரிய அனுகூலம் உண்டாகும். உங்கள் முயற்சிகளுக்கு சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அரசாங்க அதிகாரிகளின் அறிமுகமும், அவர்களால் ஆதாயமும் ஏற்படக்கூடும். சிலருக்குப் பிள்ளைகளால் வீண் அலைச்சலும், செலவுகளும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். எனினும் சமாளித்து விடுவீர்கள். மொத்தத்தில் சோதனைகளைக் கடந்து சாதனை படைப்பீர்கள். |
கடகம்  | புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு குடும்பம் தொடர்பான பணிகளுக்காக சற்று அலைச்சல் ஏற்படும். சில ருக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிற்பகலுக்கு மேல் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். |
சிம்மம்  | மனதில் இனம் தெரியாத குழப்பத்திற்கு இடம் தராதீர்கள். புதிய முயற்சிகளை நன்கு திட்டமிட்டு நிதானமாக யோசித்துச் செய்யவும். வாழ்க்கைத் துணை வழி உறவுகளால் செலவுகள் ஏற்படவும் இடம் உண்டு. அக்கம் பக்கத்தில் இருப்பவர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம். வியாபாரத்தில் பணியாளர்களுடன் அனுசரித்துச் செல்லவும். மொத்தத்தில் இது ஒரு சுமாரான நாள் தான். சிலர் எதிர் நீச்சல் போட்டு முன்னேறுவீர்கள். |
கன்னி  | இன்று உங்களது பேச்சில் அன்பும், பண்பும் மிகுந்திருக்கும். நண்பர், உறவினர் உங்களை மதிப்புடன் நடத்துவர். தொழில், வியாபாரம் செழிக்க முழு முயற்சியுடன் பணிபுரிவீர்கள். நிலுவைப் பணம் வசூலாகும். பெண்களுக்கு பொன், பொருள் சேரும். மொத்தத்தில் உழைப்பால் உயரும் நன்னாள். இந்நாள். |
துலாம்  | செயல்களில் கவனச்சிதறல் ஏற்படலாம். நண்பரின் ஆலோசனையால் நன்மை காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாரான அளவில் இருக்கும். உறவினரால் செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணம் பயனறிந்து மேற்கொள்ளவும். அலைச்சல் அதிகம் காணப்படும் என்பதால் எதையும் நீங்கள் திட்டமிட்டுச் செய்யுங்கள். |
விருச்சிகம்  | சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. சிலர் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை சிலர் மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள். |
தனுசு | குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். மனதிற்கு இதமான செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். எதிர்பாராத நன்மை கள் உண்டாகும் நாள். |
மகரம் | தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிடுவீர்கள். குடும்பத்தில் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும். அலுவலகப் பணிகளை குறித்த நேரத்துக்குள் முடித்துவிடுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும். |
கும்பம் | உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. எதிரிகள் வகையில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். முக்கியப் பிரமுகர்களின் தொடர்பு கிடைக்கும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப் பார்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லை விலகும். விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். |
மீனம் | எல்லோரிடமும் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வீர்கள். பெண்களுக்கு ஆடை, நகைகளின் சேர்க்கையால் மகிழ்ச்சி உண்டாகும். பணியாளர்கள் விரும்பிய இடமாற்றத்தை பெறுவதற்கான சூழல் உருவாகும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். |