ராசி |
பலன் |
மேஷம்  |
இன்று எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும். எதிர்காலம் பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது. |
ரிஷபம்  |
நண்பர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் உண்டு. எதிர்பார்த்த லாபத்தை இறுதியில் போராடிப் பெறுவீர்கள்.. பணியாளர்களுக்கு நிர்வாகத்தினரின் ஆதரவால் பாராட்டு, பரிசு கூட கிடைக்கும். பெண்கள் விருந்து விழாவில் பங்கேற்பர். சிலர் ஆடை, ஆபரணம் கூட வாங்க இடம் உண்டு. |
மிதுனம்  |
இன்று புதிய முயற்சிகளில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளவும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்பட இடம் தராதீர்கள். எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்பட்டாலும், உங்களது முயற்சி வீண் போகாது. சிலருக்கு சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக் கூடும். ஆனால், தாயின் அன்பு ஆறுதலாக இருக்கும். சிலருக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எனினும் சமாளித்து விடுவீர்கள். அலுவலகத்தில் உங்களிடம் கொடுக்கப்பட்ட உங்கள் பணிகளை மற்றவர் களிடம் ஒப்படைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். மொத்தத்தில் பொறுமையால் வெல்ல வேண்டிய நாள். |
கடகம்  |
குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாகன வசதிப் பெருகும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும் |
சிம்மம்  |
மனதில் இனம் தெரியாத சோர்வு ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும். ஆனால், நண்பர்கள் உங்கள் தேவையை அறிந்து செய்யும் உதவி ஆறுதல் தரும். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதில் சில சிரமங்கள் ஏற்படும். வியாபாரத்தில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். |
கன்னி  |
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். சொத்து சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தைரியம் கூடும் நாள். |
துலாம்  |
செயல்களில் திட்டமிடுதல் மிகவும் அவசியம். அதேபோல் செலவுகளிலும் சற்று கவனம் செலுத்துவது நல்லது. சிலருக்கு பிள்ளைகள் மூலம் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். |
விருச்சிகம்  |
தொடங்கும் காரியங்கள் வெற்றி பெறும் நாள். தேவையான பணம் கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்படும். ஆனாலும், உற்சாகத்துக்குக் குறைவிருக்காது. பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க செலவு செய்ய வேண்டி வரும். |
தனுசு |
வரவும் செலவும் அடுத்தடுத்து வரும். தந்தையின் தேவையை நிறை வேற்றி மகிழும் வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். மாலையில் பள்ளி, கல்லூரிக்கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். |
மகரம் |
சோர்வு நீங்கி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், அவர்களை அரவணைத்துச் செல்வது அவசியம். முடிந்தவரை அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்யவும். உறவினர்கள் வருகையால் திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். சிலருக்குக் குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். அலுவல கத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். |
கும்பம் |
முன்னர் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் விலகுவார். புதிய திட்டங்களை சிறப்பாக வடிவமைப்பீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். கடனில் ஒருபகுதியை செலுத்துவீர்கள். |
மீனம் |
எதிர்ப்புகள் குறையும் நாள். புதிய முயற்சியில் ஈடுபடும் வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத் தொடர்பு பலம் பெறும். உபரி பண வருமானம் கிடைக்கும். கூடுதல் சொத்து வாங்க அனுகூலம் உண்டு. பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர். |