Saturday, December 2, 2023
Homeஜோதிட குறிப்புகள்வாஸ்து குறிப்புகள்

வாஸ்து குறிப்புகள்

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

வாஸ்து குறிப்புகள்

எந்த ஒரு வீட்டுக்கும் வாஸ்து என்று ஒன்று உண்டு. அந்த வாஸ்து அமைவது தானாகவே சில வீடுகளுக்கு சிறப்பாக இருந்துவிடும். சிலரது வீடுகளில் வாஸ்துவுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்வதும் உண்டு. அதே சமயம் எங்கே எது எப்படி இருக்க வேண்டும் என்று அரைகுறை வாஸ்து அறிவை வைத்துக் கொண்டும் யாரோ சொன்னார் எவரோ கூறினார் எனவும் மாற்றங்களைச் செய்தோ அல்லது அதன்படி வீடுகளைக் கட்டியும் அவதிப்படுபவர்களும் உண்டு.

அவசியமான வாஸ்துவை பற்றி சுருக்கமாக தெரிந்துகொண்டு வாழ்க்கை முறையினை ஏற்றமும் மாற்றமும் பெறும் வகையில் அமைத்துக் கொள்வது நல்லது. அதற்கு எளிய வழி காட்டும் வாஸ்து குறிப்புகள் இதோ உங்களுக்காக…

பூஜை அறை:

எந்த வீட்டிலும் பூஜை அறை கிழக்கு பார்த்து இருந்தால் சிறப்பு. ஆனால் எல்லா வீடுகளிலும் கிழக்கு பார்த்த அறையை அமைத்துக் கொள்ள முடிவதில்லை. எனவே மேற்கு பார்த்து அமைந்த பூஜைகளும் சிறப்பானவையே.

பூஜை அறையில் கடவுள் உறுவங்களோடு சிலைகளையும் வைத்து வணங்கலாமா என்ற ஐயம் சிலருக்கு எழலாம். சிலைகளை வைத்து வழிபடுவது தவறில்லை ஆனால் அவை பின்னபடாமல் அதாவது விரிசல் ஏதும் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும்.

இரண்டாம் வீட்டில் நிற்கும் கிரகங்களின் பொது பலன்கள்

பூஜை அறை அமைத்துக் கொள்ள வசதி இல்லாதவர்கள் திறந்தவெளியில், கடவுள் படங்களை வைத்து வணங்குவதில் தோஷகுறைவு ஏதுமில்லை!

சொத்து பிரச்சினைகளை தரும் கிரக அமைப்புகள்

ஆரோக்கியம் அவசியம்:

பிணியால் வாடி இருப்பது கொடுமையானது. அதுவும் இந்த கொடுந்தொற்றுகாலத்தில் கொரோனா லாக் டவுன், லாக்கப்பை விட கொடியதாக இருக்கிறது. ஒரே நேரத்தில் எல்லோரும் வீட்டில் இருப்பதில் சில சிரமங்கள் இருக்கத்தான் செய்கின்றன. நோயுற்றவரை தனிமைப் படுத்தும் போது அவர்களுக்கு எந்த அறையை ஒதுக்கலாம் என்று கேட்பவர்களுக்கு சில ஆலோசனைகள்:

 • வயதில் பெரியவர்களுக்கு /முதியவர்களுக்கு நைருதி அறை சிறந்தது
 • நடுத்தர வயதினர் அக்னி, வாயு மூலை அறைகளில் ஓய்வெடுக்கலாம்.
 • வளரும் குழந்தைகளும், இளைஞர்களும் ஈசானிய அறையில் இருக்கலாம்.

வீட்டில் அறைகள் இல்லையா? கவலை வேண்டாம் வீட்டின் வடகிழக்கு மூலையை தவிர மற்ற இடங்களில் கட்டில் போட்டு தனிமைப் படுத்திக் கொள்ளலாம். இதனால் பிணியின் தாக்கம் விரைவில் தணியும் ஆரோக்கியம் சீராகும்.

எத்தனை மாடிகள் வைத்து வீடு கட்டலாம்?:

ஒரு வீட்டில் அரசு அனுமதியோடு எத்தனை மாடிகள் வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளலாம்.

முதல் மாடியை போலவே அடுத்த மாடியும் இருக்க வேண்டிய அவசியமில்லை. இத்தனை கதவுகள், இத்தனை ஜன்னல்கள் தான் வர வேண்டும் என்ற கணக்கு எதுவும் கிடையாது.

ஜன்னல்களின் எண்ணிக்கை ஒற்றைப்படையாக வரக்கூடாது என்ற கருத்தும் எல்லா இடங்களுக்கும் ஏற்புடையது அல்ல.

வென்டிலேட்டர் இருக்கிறது… இதுவே போதும் என்று திருப்தி அடையக்கூடாது. அவசியமான இடத்தில் வைக்கும் ஜன்னல் வாழ்க்கையில் வளம் சேர்க்கும். பொதுவாக ஒரு ஜன்னலாவது கிழக்கு நோக்கி வீட்டுக்குள் வெளிச்சம் வரும் வகையில் இருப்பது நல்லது.

உங்கள் ராசிக்குரிய மந்திர யந்திரமும்– ஆன்மீக‌மூலிகைளும்

வீடு கட்ட ராசியான கிழமைகள்:

எல்லா கிழமைகளும் வீடு கட்ட துவங்க ஏற்புடையவை அல்ல. பொதுவாக ஞாயிறு, செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகள் தவிர்க்கப்பட வேண்டிய நாட்களாகும்.

 • ஞாயிறு-அக்னி பயம்
 • திங்கள்-நல்லது
 • செவ்வாய்-திருடர் பயம்
 • புதன்-செல்வம் பெருகும்
 • வியாழன்-பணத்தட்டுப்பாடு தீரும்
 • வெள்ளி-சகல சௌபாக்கியம்
 • சனி – பயம்

வெறும் கிழமையில் மட்டுமே மேற்படி பலன்களை தந்துவிடாது. நட்சத்திரம், யோகம், திதி மற்றும் நேரம் போன்றவற்றையும் கணக்கில் கொள்ளவேண்டும். இவை அந்தந்த தினத்தினை பஞ்சாங்கத்தில் பார்த்து அறிய வேண்டியவை.

வாஸ்து குறிப்புகள்

வாஸ்து நாட்கள்:

 • சித்திரை 10 காலை -07:00-9:30
 • வைகாசி 21 காலை-09:12-10:42
 • ஆடி 11காலை-06:48-08:18
 • ஆவணி 6 பிற்பகல் 02.45- 03:24
 • ஐப்பசி 11 காலை 06:48- 08:18
 • கார்த்திகை 8 காலை 10:00-11:30
 • தை 12 காலை 08:12-10:45
 • மாசி 20 காலை 09:12-10:42

மேலே குறிப்பிட்டுள்ளவை பஞ்சாங்கத்தில் உள்ள வாஸ்து நாட்கள். இவை மட்டும்தான் வீடுகட்ட ஏற்ற நாட்களா? என்றால் இல்லை. வாஸ்து நாளில் மட்டுமே மனை கோல வேண்டும் என்று எந்த சாஸ்திரமும் சொல்லவில்லை. அனுபவத்தில் எல்லா வாஸ்து நாட்களும் அதன் நேரங்களும் கோள் சாரப்படி சரியாக அமைவதில்லை. ஆகவே தேர்ந்த ஜோதிடர் உதவியுடன் நாட்களைத் தேர்வு செய்வது நலம் பயக்கும்.

ஒரு காம்பவுண்ட் இரு வீடுகள்:

ஒரு காம்பவுண்டுக்குள் இருவீடுகள் கட்டுவதில் சில பிரச்சினைகள் உள்ளன.அவுட் ஹவுஸ் எனப்படும் துணை வீடு அல்லது புற வீடு இந்தக் கணக்கில் வராது. என்றாலும் அது எங்கே அமைந்திருக்கிறது என்பது மிக முக்கியம்.

ஒரே காம்பவுண்டில் இரு வீடுகள் என்பது ஒரே மாதிரியான இரண்டு தனித்தனி வீடுகளை குறிக்கும். இந்த வீடுகளை ஒரே குடும்பம் பயன்படுத்தும் போது சிக்கல்கள் அதிகமாகுமே தவிர குறையாது.

குறிப்பாக தெற்கில் உள்ள வீட்டுக்கு வடக்கில் உள்ள வீடு பாரமாக மாறுவதால் பண பிரச்சனை ஏற்படும்.

மேற்கில் வீடு இருந்தால் கிழக்கில் உள்ள வீடு ஆண்களுக்கு பாதிப்பைத் தரும். எனவே இரு வீடுகளையும் பயன்படுத்த போகிறவர் ஒரே குடும்ப உறுப்பினர்களா? வெவ்வேறு நபர்களா? என்பதைப் பொறுத்து இதனை அமைக்க வேண்டும்.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular