Friday, December 8, 2023
Homeஜோதிட குறிப்புகள்வாஸ்து குறிப்புகள்

வாஸ்து குறிப்புகள்

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

வாஸ்து குறிப்புகள்

சென்ற கட்டுரையின் தொடர்ச்சி …

முந்தைய கட்டுரையை படிக்க இங்கே சொடுக்கவும் 

 

வாஸ்து சரி செய்ய பிரமிடுகள் உதவுமா?

பிரமிடுகள் எனப்படும் கூம்பு வடிவங்கள் பிரபஞ்ச அதிர்வுகளைக் கொண்டு இருப்பதாக சிலர் நம்புகிறார்கள். இதை பூமிக்கு அடியிலும் வீட்டின் மேற்கூரையிலும் பதிப்பதால் பலம் பெருகும் என்று பதித்துக் கொள்கிறார்கள்.

உண்மையில் பிரமிடுகளை வீடுகளில் பதிப்பதாலும், உறைவிடத்தில் பொருத்துவதாலும் பயன் எதுவும் விளைவதில்லை, என்பது அனுபவ உண்மை.

வாஸ்து சீர்திருத்தில், பிரமிடின் பங்கு எதுவும் இல்லை.சிலர் செப்பு கம்பிகளை பதிப்பதும் உண்டு இதுவும் வீணே!

பிரமிடு, இறந்தவர்களுக்கானது. இல்லம் என்பது வாழ்பவர்களுக்கானது, இரண்டும் இணையாது

வடிகால் எங்கே அமைப்பது?

வீட்டுக்குள் இருந்து வெளியேறும் கழிவுநீர் எந்தெந்த திசைகளில் வெளியேறலாம்?

எல்லா திசைகளிலும் வெளியேறலாம்!

சாஸ்திரப்படி வடக்கு மற்றும் கிழக்கு திசைகளில் மட்டுமே கழிவுநீர் வெளியேற வேண்டும் என்றால், நடைமுறையில் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்ள வேண்டும்.

கழிவுநீர் வாய்க்கால்கள் அல்லது சாக்கடைகள் வீட்டின் தெற்கிலும் மேற்கிலும் இருந்தால் என்ன செய்வது?

பெருநகரங்களில் பாதாள சாக்கடைகளை அனுசரித்தே நமது வீட்டின் கழிவுநீர் வெளியேறும் பாதையை தீர்மானிக்க வேண்டியிருக்கிறதே!

வி திசைகள் எனப்படும் இரண்டு திசைகள் இணையும் ஈசானியம், அக்னி, வாயு மற்றும் நைருதி மூலைகளைத் தவிர்த்து ஓரளவு நடு திசைகளில் கழிவு நீர் வெளியேற்றம் அமைந்தால் தீங்கு ஒன்றும் வராது.

வாஸ்து குறிப்புகள்

கார் எங்கே நிறுத்தலாம்?

வீட்டைக் கட்டி ஆயிற்று. அப்புறம் என்ன கார் வாங்க வேண்டியதுதானே!

வடக்கு மற்றும் கிழக்கு பார்த்த மனையை தேர்வு செய்ய சொல்வது கார் பார்கிங் மற்றும் போர்டிகோவை வாஸ்து முறைப்படி அமைக்கதான்

30×40 மற்றும் 60 ×40 அளவுள்ள மனைகளை வாங்கும்போது வடக்கிலும் கிழக்கிலும் காலி இடம் விட்டு வீடு கட்டுகிறோம் நமக்கு விருப்பமான அளவுகளில் போர்டி கோவை அமைத்துக்கொள்ளவும் காரை நிறுத்தவும் இதுதான் வசதி.

தெற்கு மற்றும் மேற்கு பார்த்த மனைகளில் போர்டிகோ அமைப்பதில் அதிக எச்சரிக்கை தேவை கவனம் பிசகினால்,வாயு மற்றும் நைருதி பள்ளங்கள் ஏற்பட்டு கஷ்டங்களுக்கு காரே காரணமாகிவிடலாம்.

ஜன்னல்களுக்கும் கதவுகளுக்கும் ஏற்ற மரங்கள்

பொதுவாக வீடு கட்ட தேக்கு, வேங்கை, வேம்பு,மா மற்றும் இலுப்பை மரங்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.

புளி,புன்னை, புங்கம், அத்தி ,வில்வம் போன்றவை தவிர்க்கப்பட வேண்டியவை.

மரங்களில் ஆண், பெண், அலி என வகைகள் உண்டு.

தேர்ந்த தச்சர் உதவியுடன் மரங்களை தேர்வு செய்வது நல்லது. தலை வாசல் கதவை தேக்கில் தான் அமைக்க வேண்டும் என்று இல்லை. அதற்கு மருது,சால் என சிறந்த மரங்களும் உதவும்.

தற்காலத்தில் பல வண்ணங்களில் கிடைக்கும் அலுமினியம் மற்றும் பி.வி.சி ரெடிமேடு ஜன்னல்களை வைத்தால் தோஷம் வருமா?
வராது!

வாஸ்து குறிப்புகள்

ஈசானியம் வெட்டுப்படுதல்!

 • ஈசானியம் வெட்டுப்படுதல் என்பது மனையின் வடகிழக்கு மூலையானது வளைந்தோ, குறைந்தோ இருப்பது ஆகும்.
 • ஈசானியம் குறைந்த மனைகளை வாங்க கூடாது. தலையற்ற மனித உடலுக்கு என்ன மதிப்போ அதே மதிப்பு தான் ஈசான்றியம் குறைந்த மனைக்கும்.
 • இதை சரிசெய்ய முடியாதா?
  முடியும்.வடகிழக்கு மூலையான ஈசானியம் குறைந்துள்ளது என்றால் தென்கிழக்கு மூலையோ அல்லது வடமேற்கு மூலையோ சற்று நீண்டு இருக்கிறது என்பது பொருள். அதை துண்டித்து விட்டால் மனை சரியாகிவிடும்.இது கட்டப்படுகிற கட்டடத்துக்கும் பொருந்தும்

  ஆக்கினேயம் வெட்டுப்படுதல்!

 • தென்கிழக்கு மூலையையே ஆக்கினேயம் என்கிறோம்.
 • வடகிழக்கு மற்றும் தென்மேற்கு மூலைகள் சற்றே நீண்டு இருந்தால் அது ஆக்கினேய வெட்டு எனப்படும்.
 • ஆக்கினேயம் என்றால் அக்னி; நெருப்பு
 • மனித உடலின் உஷ்ணம் தேவைக்கு கீழே குறைந்தால் என்ன நேருமோ அதுவே மனைக்கும் நேரும்.
 • அக்னி உந்துசக்தி. அக்னி எரிபொருள். அக்னி பெண்
 • அக்னி மூலையை பெண் சக்தி உடையதாக வாஸ்து கருதுகிறது. அக்னி வெட்டுப்பட்டால் அந்த வீட்டில் பெண்களின் எண்ணிக்கை குறையும். பெண் மகவு பிறப்பதும் தடைபடலாம்.
 • அக்னியை காப்போம் என்பது வேதத்தில் உள்ள வாக்கு அதுவே வாஸ்துக்கும் பொருந்தும்.
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular