Sunday, October 1, 2023
Homeஇன்றைய ராசி பலன்இன்றைய ராசி பலன்- 16.7.2021

இன்றைய ராசி பலன்- 16.7.2021

ASTRO SIVA

google news astrosiva

இன்றைய ராசி பலன்- 16.7.2021

மேஷம் 

பெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். மாணவர்கள் வெளிநாடு சென்று படிப்பதில் தாமதம் ஏற்படக்கூடும். தொழிலில் புதிய இனங்களில் முதலீடு செய்வீர்கள். காதலில் சில சங்கடங்கள் ஏற்படலாம். வாகனத்தில் மிதவேகம் தேவை.

ரிஷபம் 

வியாபாரிகள் நீண்ட நாளாக எதிர்பார்த்து வந்த தனவரவு உண்டாகும். குடும்பத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது நல்லது. முக்கிய பிரமுகரின் நட்பு கிடைக்கும். உத்யோகத்தில் மேலதிகாரிக்கு சில ஆலோசனைகளை வழங்கி நல்ல பெயர் எடுப்பீர்கள்.

மிதுனம் 

திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வேற்று மதத்தவர்கள் உதவிகிடைக்கும். வியாபாரத்தில் கமிஷன் ஸ்டேஷனரிவகைகளால் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். இனிமையான நாள்.

இன்றைய ராசி பலன்
ராசி பலன் 16.07.2021

கடகம் 

மனதில் இனம் தெரியாத உற்சாகம் பெருக்கெடுக்கும். ஆனால், புதிய முயற்சி எதையும் இன்று தொடங்க வேண்டாம். திடீர் செலவுகளால் கையிருப்பு கரைவதுடன் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். வாழ்க்கைத் துணை வழி உறவுகளால் சிறு சிறு சங்கடங்கள் ஏற்படக் கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் லாபம் கிடைத்தாலும் செலவுகளும் அதிகரிக்கும்.

சிம்மம் 

எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. எனினும், உடனுக்குடன் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். தாய்மாமன் வகையில் நீண்ட நாளாக எதிர்பார்த்த உதவி இன்று சிலருக்கு கிடைக்கக் கூடும். வாழ்க்கைத் துணை வழியில் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றும் வகையில் சற்று அலைச்சல் ஏற்படும். வியாபாரம் சுமாராகத் தான் இருக்கும். எனினும், தேவைகள் இறுதியில் நிறைவேறும்.

கன்னி 

எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. பழைய சிக்கலில் ஒன்று தீரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.

துலாம் 

குடும்பத்தில் உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.

இன்றைய ராசி பலன்
ராசி பலன் 16.07.2021

விருச்சிகம் 

மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படும். தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மாலையில் பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் சற்றுக் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். போராடி வெல்வீர்கள்.

தனுசு 

மனதில் தைரியம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். தந்தை வழி உறவினர்களால் காரிய அனுகூலம் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மன வருத்தங்கள் நீங்கும். வாழ்க்கைத் துணை மூலம் பண வரவுக்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

மகரம் 

புதிய முயற்சிகளை கவனமாகச் செய்யவும். சிலருக்கு வீட்டில் தெய்வ வழிபாடுகளை நிகழ்த்தும் வாய்ப்பு ஏற்படக்கூடும். பிற்பகலுக்கு மேல் எதிர்பார்த்த நல்ல தகவல் சிலருக்கு கிடைகக்கூடும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக் கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புதிய முயற்சிகளில் நிதானத்துடன் ஈடுபடவும்.

கும்பம் 

கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். பணம் வாங்கி தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து போகும். எதிலும் பொறுமை தேவைப்படும் நாள்.

மீனம் 

உறவினர், நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். பெண்கள் எடுத்த சவால்களில் வெற்றி பெறுவர். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியின் மூலம் முக்கிய அறிவுரை கிடைக்கும்.

பஞ்சாங்க குறிப்புகள்-16.7.2021

தமிழ் தேதி /கிழமை/வருடம் ஆனி -31/வெள்ளி /5123 பிலவ
ஆங்கில நாள் 16.7.2021
இன்றய சிறப்பு தட்சியான புண்ய காலம் ஆரம்பம் ,முகூர்த்த நாள்
சூரியன் உதயம் 05.50AM
சூரியன் அஸ்தமனம் 06.40PM
ராகு காலம் காலை 10.30-12.00
நாள் நாள் முழுவதும் சம நோக்கு நாள்
 குறிப்புகள் சுப முயற்சிகளை செய்ய ஏற்ற நாள்
எம கண்டம் மாலை 3.00-4.30
நல்ல நேரம் காலை 6.00-7.30/9.00-10.30|மதியம் 1.00-3.00|மலை 4.30-5.30
திதி இரவு 2.40 வரை சப்தமி பின் (வ )அஷ்டமி
நட்சத்திரம்இரவு 1.20 வரை அஸ்தம் பின் சித்திரை
சந்திராஷ்டமம் சதயம்,பூரட்டாதி
யோகம் இரவு 1.20 வரை அமிர்த யோகம் பின் சித்தயோகம்
சூலம் மேற்கு
பரிகாரம் இனிப்பு
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular