இன்றைய ராசி பலன்- 19.7.2021
மேஷம்
செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். சிலர் உங்களை குறை கூறினாலும் அதை பெரிதாக்க வேண்டாம். வியாபாரத்தில் லாபம் அடைவீர்கள். உத்தியோ கத்தில் உங்கள் வேலையை பாராட்டுவார்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.
ரிஷபம்
நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை குறையும். பணியிடத்தில் அமைதி நிலவும். தள்ளிப் போன பயணம் சம்பந்தமாக நல்லதோர் முடிவு கிட்டும். வியாபாரிகளுக்குப் புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும்.
மிதுனம்
பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று கொள்வார்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். புது நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பாராத வெற்றி கிடைக்கும் நாள்.
கடகம்
பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
சிம்மம்
துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள். சிலருக்குப் பூர்வீக சொத்து பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். சிலர் புது ஏஜென்சி கூட எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அலைச்சல் தந்தாலுமே இறுதியில் வெற்றி பெறும் நாள்.
கன்னி
கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். சிலரைப் பொறுத்தவரையில், வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். சிலருக்கு ஆக்கபூர்வமான புதிய எண்ணங்கள் பிறக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்க இடம் உண்டு. வியாபாரத்தில் புதிய சரக்குகளை சிலர் கொள்முதல் செய்யலாம். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உற்சாகமான நாள்.
துலாம்
தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். வெளியில் செல்ல நேரிட்டால் நன்றாக திட்டமிட்டுக்கொண்டு கவனமாக செல்லவும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருந்தாலும், பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். எனினும், சமாளித்து விடுவீர்கள்.
விருச்சிகம்
மனதில் தெய்வபக்தி அதிகரிக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. மாலையில் உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில செலவுகள் ஏற்படக்கூடும்.
தனுசு
குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்திசெய்வீர்கள். சிலருக்குப் பணப் புழக்கம் கணிசமாக உயரும். நீண்ட நாள் பிரார்த்தனையை சிலர் நிறை வேற்றுவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். மனசாட்சி படி செயல்படும் நாள்.
மகரம்
எதிர்பார்த்த பணம் கைக்கு வர சற்று காத்திருக்க வேண்டி வரலாம். சகோதரர்கள் பணம் கேட்டு வருவார்கள். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் ஓரளவே அனுகூலமாக முடியும். எதிரிகளால் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், கவனமாக இருக்கவும். நீங்கள் கொடுத்த கடன் தொகை திரும்பக் கிடைப்பதற்கு பல முயற்சிகளை செய்ய வேண்டி இருக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனம் தேவை. குறிப்பாகப் பெரிய தொகையை தகுந்த சாட்சியம் இன்றி நம்பி யாரிடத்திலும் தர வேண்டாம்.
கும்பம்
மனதில் உற்சாகமும், செயல்களில் பரபரப்பும் காணப்படும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் யோசனையை வாழ்க்கைத் துணை ஏற்றுக் கொள்வார். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும், ஆடை, ஆபரண சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. நீண்டநாளாகத் தொடர்பில் இல்லாத நண்பர்கள் சிலரைத் தொடர்பு கொண்டு பேசுவார்கள். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் சென்றால் நன்மை உண்டு.
மீனம்
புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்குவது சாதகமாக முடியும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியக் குறைவு ஏற்பட்டு சரியாகும். உறவினர்களுடன் பேசும் போது வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறு மையைக் கடைப்பிடிக்கவும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத் தான் இருக்கும்.
பஞ்சாங்க குறிப்புகள் மற்றும் கிரக நிலைகள் -18.7.2021

தமிழ் தேதி /கிழமை/வருடம் | ஆடி -3/திங்கள் /5123 பிலவ |
ஆங்கில நாள் | 19.7.2021 |
இன்றய சிறப்பு | – |
சூரியன் உதயம் | 05.50AM |
சூரியன் அஸ்தமனம் | 06.40PM |
ராகு காலம் | காலை 7.30-9.00 |
நாள் | இரவு 8.50 வரை கீழ்நோக்கு நாள் பின் சமநோக்கு நாள் |
குறிப்புகள் | புதிய முயற்சியை தவிர்க்கவும் |
எம கண்டம் | காலை 10.30-12.00 |
நல்ல நேரம் | காலை 6.00-7.30/9.30-10.30|மதியம் 12.00-2.00|மலை 4.30-5.30 |
திதி | இரவு 7.45 வரை தசமி பின் (வ) ஏகாதசி |
நட்சத்திரம் | இரவு 8.50வரை விசாகம் பின் அனுஷம் |
சந்திராஷ்டமம் | மீன ராசி (17.07.2021 முதல் 19.07.2021)வரை |
யோகம் | இரவு 8.50வரை மரண யோகம் பின் சித்தயோகம் |
சூலம் | கிழக்கு |
பரிகாரம் | தயிர் |