Saturday, September 30, 2023
Homeஇன்றைய ராசி பலன்இன்றைய ராசி பலன்- 17.7.2021-சர்வதேச உலக நீதி தினம்

இன்றைய ராசி பலன்- 17.7.2021-சர்வதேச உலக நீதி தினம்

ASTRO SIVA

google news astrosiva

இன்றைய ராசி பலன்- 17.7.2021

மேஷம் 

திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். உறவினர் நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். வாகனத்தில் கவனம் தேவை. யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

ரிஷபம் 

பழைய தவறுகளை நினைத்து வருந்த நேரிடலாம். உத்யோகத்தில் மகிழ்ச்சியும், வெற்றியும் காண்பீர்கள். வெளிநாட்டில் உள்ள பிள்ளைகளால் நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரத்தில் சில விஷயங்களைச் சீர் செய்து லாபத்தை பெருக்க முயல்வீர்கள்

மிதுனம் 

சொன்ன சொல்லை காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும்.வியாபாரத்தில் பழைய வேலை யாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

இன்றைய ராசி பலன்
ராசி பலன் 17.07.2021

கடகம் 

மனதில் இனம் தெரியாத உற்சாகம் பெருக்கெடுக்கும். ஆனால், புதிய முயற்சி எதையும் இன்று தொடங்க வேண்டாம். திடீர் செலவுகளால் கையிருப்பு கரைவதுடன் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். வாழ்க்கைத் துணை வழி உறவுகளால் சிறு சிறு சங்கடங்கள் ஏற்படக் கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் லாபம் கிடைத்தாலும் செலவுகளும் அதிகரிக்கும்.

சிம்மம் 

மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்துச் செல்லும். பிள்ளைகளிடம் பரிவாகப் பேசுங்கள். சிலருக்கு வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். சிலருக்கு வீடு சம்மந்தமான செலவுகள் கூட ஏற்படலாம். பெண்களைப் பொறுத்தவரையில், அடிக்கடி உடல் அசதி, சோர்வு வந்து நீங்கலாம். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

கன்னி 

குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்து வீர்கள். உங்களை சுற்றியிருப் பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்து பேசுவார்கள். கனவு நனவாகும் நாள்.

துலாம் 

குடும்பத்தில் உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.

இன்றைய ராசி பலன்
ராசி பலன் 17.07.2021

விருச்சிகம் 

தாய் வழி ஆதரவு அவ்வப்போது ஆறுதல் தரலாம். காரியங்கள் முடிவதில் சிறு தாமதம் ஏற்படக்கூடும். மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த தகவல் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போல் நடைபெறும்.

தனுசு 

உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும் வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

மகரம் 

எதிர்பார்க்கும் காரியங்களில் அலைச்சல் இருந்தாலும் உங்களது முயற்சி வீண் போகாது. ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலர், தாயின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். பிற்பகலுக்கு மேல் வீண் செலவுகள் மனச் சஞ்சலத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் மறைமுக இடையூறுகள் ஏற்படக்கூடும். எனினும் அதனை சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.

கும்பம் 

உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். தன்னம் பிக்கை குறையும். உறவினர்கள் நண்பர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள்.

மீனம் 

இன்று எந்த ஒரு காரியத்தையும் சஞ்சல மனதுடனேயே செய்ய நேரிடலாம். சஞ்சலம் தீர ராம நாமத்தை உச்சரித்து வாருங்கள். அது இன்று உங்களுக்கு வெற்றியை தேடித் தரும். காரியங்களில் ஜெயத்தை தரும். வண்டி – வாகனங்களில் செல்லும் சமயத்தில் கூடுதல் கவனம் தேவை. நெருப்பு, ஆயுதம், வாகனம், இயந்திரம் போன்றவற்றுடன் பழகும் போது அஜாக்கிரதை வேண்டாம். வீடு, வாகனம் தொடர்பாக சிலருக்கு செலவுகள் ஏற்படலாம். பணம் கொடுக்கல் – வாங்கல் போன்ற விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை.

பஞ்சாங்க குறிப்புகள்-17.7.2021

தமிழ் தேதி /கிழமை/வருடம் ஆடி -1/சனி /5123 பிலவ
ஆங்கில நாள் 17.7.2021
இன்றய சிறப்பு சர்வதேச உலக நீதி தினம்
சூரியன் உதயம் 05.50AM
சூரியன் அஸ்தமனம் 06.40PM
ராகு காலம் காலை 9.00-10.30
நாள் நாள் முழுவதும் சம நோக்கு நாள்
 குறிப்புகள்
எம கண்டம் மதியம் 1.30-3.00
நல்ல நேரம் காலை 7.30-8.00|மதியம் 12.15-1.15|மலை 4.45-5.45
திதி இன்று அதிகாலை 2.41 வரை சப்தமி பின்பு அஷ்டமி
நட்சத்திரம்இரவு 1.21 வரை அஸ்தம் பின்இரவு 11.59 வரை சித்திரை பின் சுவாதி
சந்திராஷ்டமம் பூரட்டாதி,உத்திரட்டாதி
யோகம் இன்று அதிகாலை 1.21 வரை அமிர்தயோகம் பின்பு அதிகாலை 5.59 வரை சித்தயோகம் பின்பு இரவு 11.59 வரை மரண யோகம் பின்பு அமிர்த யோகம்.
சூலம் கிழக்கு
பரிகாரம் தயிர்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular