இன்றைய ராசி பலன்- 22.7.2021
மேஷம்
நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். பிள்ளைகளின் பொறுப்புணர்வை பாராட்டுவீர்கள். சிலருக்கு காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் சிலருக்குக் கிடைக்கும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். சிறப்பான நாள்.
ரிஷபம்
புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். சகோதர வகையில் எதிர்பார்க்கும் காரியம் முடிவதில் தாமதம் உண்டாகும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத் துணையால் சில சங்கடங்கள் ஏற்பட்டு மனச்சஞ்சலத்தை ஏற்படுத்தும். பொறுமை மிக அவசியம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம் போலவே இருக்கும்.
மிதுனம்
நல்லோரின் நட்பை பெற்று மகிழ்வீர்கள். எதிர்காலத் திட்டம் குறித்து ஆலோசிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் மறைமுகப்போட்டி குறையும். பணவரவு தேவைகளை நிறைவேற்றும் படியாக இருக்கும்.சிலருக்கு மனைவி வழியில் செலவுகள் ஏற்பட இடம் உண்டு.
கடகம்
இன்று காரியங்கள் தடைபட்டாலும் பின்னர் நன்றாக நடந்து முடியும். பண வரத்து ஓரளவே திருப்தி தரும். சிலருக்கு மருத்துவ செலவுகள் குறையலாம். தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சல் ஆர்டர் கிடைப்பதில் தாமதம் போன்றவை ஏற்பட்டாலும், அவற்றை எல்லாம் சமாளித்து வெற்றி நடை போடுவீர்கள்.
சிம்மம்
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரிக்க இடம் உண்டு. சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் உண்டாகலாம். சிலர் அதிக உழைப்பின் பேரில் வேலைகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் எல்லா பிரச்சனைகளும் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும்.
கன்னி
துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்களுடனான பிரச்சனையை சிலர் பேசித் தீர்த்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து போராடி வெல்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தைரியம் கூடும் நாள்.
துலாம்
எதிர்பார்த்த பணவரவு ஓரளவு கிடைக்கும். சிலருக்கு பிள்ளைகள் மூலமும் பண வரவுக்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத் துணையால் செலவுகள் ஏற்படும். மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. தந்தையின் உடல் நலனில் கவனம் செலுத்தவும். பணிச் சுமை ஓரளவு குறையும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சற்றே அதிகரிக்கும். ஆனால், பணியாளர்களால் பிரச்சனை ஏற்பட இடம் உண்டு. பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பது சிலருக்குத் தாமதமாகும்.
விருச்சிகம்
இன்று முற்பகுதி நலம் தரும். வண்டி, வாகனங்களில் செல்லும் சமயத்தில் நிதானம் தேவை. சிலருக்கு மருத்துவ செலவுகள் ஏற்பட கிரகங்கள் காரணமாக இருக்கிறது. மதியத்திற்கு மேல் புதிய முயற்சிகள் செய்ய வேண்டாம். அலைச்சல் அதிகமாக இருக்கும். மதியத்திற்கு மேல் நிதானமாக செயல்பட்டு வெற்றி அடைய வேண்டிய நாள்… இந்நாள்.
தனுசு
தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிடுவீர்கள். குடும்பத்தில் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும். அலுவலகப் பணிகளை குறித்த நேரத்துக்குள் முடித்துவிடுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும்.
மகரம்
உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. எதிரிகள் வகையில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். முக்கியப் பிரமுகர்களின் தொடர்பு கிடைக்கும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப் பார்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லை விலகும். விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.
கும்பம்
சகோதரர்களின் ஆதரவு உற்சாகம் தரும். தந்தைவழியில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். புதிய முயற்சி அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும். போன் மூலம் சுபச்செய்தி ஒன்று கிடைக்க வாய்ப்பு உண்டு. உங்கள் சிரமம் அறிந்து உங்கள் பணிகளை குடும்பத்தினர் பகிர்ந்துகொள் வார்கள். வியாபாரத்தில் பணியாளர்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.
மீனம்
வாழ்க்கைத் துணையின் வாழ்வில் மேன்மை உண்டு. உத்யோகத்தில் கூடுதல் கவனத்துடன் பணிபுரிவது நல்லது. வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு தாய்நாட்டிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் மிதமாக இருக்கும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். சிலர் தெய்வ காரியங்களில் ஈடுபட இடம் உண்டு.
பஞ்சாங்க குறிப்புகள் மற்றும் கிரக நிலைகள் -22.7.2021

தமிழ் தேதி /கிழமை/வருடம் | ஆடி -6/வியாழன் /5123 பிலவ |
ஆங்கில நாள் | 22.7.2021 |
இன்றய சிறப்பு | முகூர்த்த நாள் ,Dr.முத்துலெட்சுமி ரெட்டி நினைவு தினம் |
சூரியன் உதயம் | 05.50AM |
சூரியன் அஸ்தமனம் | 06.40PM |
ராகு காலம் | மதியம் 1.30-3.00 |
நாள் | கீழ் நோக்கு நாள் |
குறிப்புகள் | சுப முயற்சிகள் செய்ய ஏற்ற நாள் |
எம கண்டம் | காலை 6.00-7.00 |
நல்ல நேரம் | காலை 10.45-11.45 |மதியம் 12.15-01.15 |
திதி | மதியம் 1.34வரை திரயோதசி |
நட்சத்திரம் | மாலை4.25 வரை மூலம் |
சந்திராஷ்டமம் | ரிஷப ராசி (22.07.2021 முதல் 23.07.2021)வரை |
யோகம் | சித்தயோகம் |
சூலம் | தெற்கு |
பரிகாரம் | தைலம் |