இன்றைய ராசி பலன்- 26.7.2021
மேஷம்
இன்று மற்றவர்களுடன் இருந்த பகை நீங்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். பணம் வரும் வாய்ப்பு உள்ளது. எதிர்த்து செயல்பட்டவர்கள் ஒதுங்கி விடுவார்கள். நீண்ட நாள் கஷ்டங்கள் நீங்கும். பல விதத்திலும் நன்மை செய்யும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். புத்தி கூர்மையுடன் செயல்படுவீர்கள். தைரியம் உண்டாகும்.
ரிஷபம்
இன்று எல்லாவற்றிலும் சாதகமான பலனே கிடைக்கும். பணவரவில் திருப்தி காணப்படும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி வேகம் பிடிக்கும். எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்கும்.
மிதுனம்
எந்த காரியத்தை தொட் டாலும் இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். யாருக்கும் பணம் நகை வாங்கி தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாகபேசுங்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம்செலுத்துவது நல்லது. பொறுமைத் தேவைப் படும் நாள்.
கடகம்
அனாவசிய பேச்சை தவிர்க்கவும். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னை புரிந்துகொள்ளவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் சச்சரவு வந்து நீங்கும். அலுவலக ரகசியங்களை வெளியிடவேண்டாம். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.
சிம்மம்
ஆன்மீக காரியங்களில் சிலருக்குத் திடீர் ஈடுபாடு ஏற்படலாம். சிலர் திடீர் என்று நீண்ட தூர பயணங்கள் செல்ல நேரலாம். பயணத்தின் போது மட்டும் கூடுதல் கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் நிதானமான போக்கு காணப்படும். வியாபார போட்டிகள் இருந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது. உத்யோகம் எப்போதும் போலவே காணப்படும்.
கன்னி
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சுறுசுறுப்புடன் செயல் பட்டு தேங்கிக் கிடந்த வேலை களை விரைந்து முடிப்பீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். புதிய பாதை தெரியும் நாள்.
துலாம்
கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசால் அனுகூலம் உண்டு. அரசால் சாதகமான தீர்ப்பு வரும். பழைய சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். திடீர் யோகம் கிட்டும் நாள்.
விருச்சிகம்
குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். அக்கம், பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.
தனுசு
எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். சகோதர சகோதரிகள் உதவுவார்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். வியாபா ரத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.
மகரம்
குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாக திரும்பும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தொட்டது துலங்கும் நாள்.
கும்பம்
உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். தாயாரின் உடல் நிலை சீராகும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
மீனம்
உங்களின் நற்செயலைச் சிலர் பரிகாசம் செய்வர். கண்டு கொள்ளாதீர்கள் அவர்கள் பின்னாளில் அதற்கு வருந்துவர். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பணி நிறைவேற தாமதமாகலாம். மிதமான பணவரவு கிடைக்கும். எவருக்கும் அவசரப்பட்டு வாக்குறுதி தர வேண்டாம். சிலருக்கு மருத்துவ செலவுகள் குறையலாம்.
பஞ்சாங்க குறிப்புகள் மற்றும் கிரக நிலைகள் -26.7.2021

தமிழ் தேதி /கிழமை/வருடம் | ஆடி -10/திங்கள் /5123 பிலவ |
ஆங்கில நாள் | 26.7.2021 |
இன்றய சிறப்பு | – |
சூரியன் உதயம் | 05.58AM |
சூரியன் அஸ்தமனம் | 06.39PM |
ராகு காலம் | 7.30AM -9.00AM |
நாள் | மேல் நோக்கு நாள் |
குறிப்புகள் | கரிநாள் ,புதிய முயற்சிகளை தவிர்க்கவும் |
எம கண்டம் | 10.30AM -12.00AM |
நல்ல நேரம் | காலை 9.30-10.30 |மாலை 4.30-5.30 |
திதி | காலை 2.56 வரை திருதியை பின் சதுர்த்தி |
நட்சத்திரம் | காலை 1.26 வரை அவிட்டம் |
சந்திராஷ்டமம் | மிதுன ராசி (26.07.2021 முதல் 27.07.2021)வரை |
யோகம் | சித்தயோகம் |
சூலம் | கிழக்கு |
பரிகாரம் | தயிர் |