Rasi Palan Today-06.08.2021

மேஷம்-Mesham
இந்த நாளில் உங்கள் தேவைகள் ஓரளவு பூர்த்தி ஆகும். செலவு செய்து வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள். குருவின் சஞ்சாரத்தால் நல்லவர்கள் யார், தீயவர்கள் யார் என்பதை கண்டறிந்து விலகுவீர்கள். ஆயுதங்கள், மின் சாதனங்கள் மற்றும் அடுப்புடன் கவனமாகப் பழகுங்கள். மற்றபடி இன்று ஒரு சுமாரான நாள் தான்.
ரிஷபம்-Rishabam
இன்றைய தினத்தை பொறுத்தவரையில் புதிய ஆடை, ஆபரணங்களை சிலர் வாங்கி மகிழலாம். செலவுகள் இருந்தாலும். பெரும்பாலும் அவை தேவையான செலவுகளாகவே இருக்கும். உங்கள் தேவைகள் அவ்வப்போது நிறைவேறும். அலைச்சலும், மன சோர்வும் அவ்வப்போது வந்து போனாலும் கூட இறுதியில் வெற்றி அடைவீர்கள். அதாவது முயற்சிக்கு தக்க நல்ல பலன் கிடைக்காமல் போகாது. மொத்தத்தில் இன்றைய நாள் ஒரு நல்ல நாளாக உங்களுக்கு இருக்கும்.
மிதுனம்-Mithunam
மனதில் ஒருவித இனம் புரியாத பயம் வந்து போகலாம். கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து போகலாம். உடல் நலம் சிலருக்கு சிறிய அளவில் பாதிக்கப்படலாம். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயங்கள் ஏற்படலாம். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கத் தாமதம் ஆகலாம். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.
கடகம்-Kadagam
பெரும்பாலும் நன்மைகள் மேலோங்கும் நல்ல நாளாக இந்த நாள் இருக்கும். முயற்சிக்கு தக்க பலன் கிடைக்காமல் போகாது. மேலதிகாரிகளின் பாராட்டு கூட சிலருக்கு இன்று கிடைக்கப்பெறும். யதார்த்தத்தை புரிந்து கொள்வீர்கள்.
சிம்மம்-Simmam
பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத் துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். மாற்றம் உண்டாகும் நாள்.
கன்னி -Kanni
இன்று புதிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். அத்துடன் செலவு செய்து உங்கள் வசதிகளை இன்றைய தினத்தில் நீங்கள் பெருக்கிக் கொள்வீர்கள். உங்கள் தேவைகள் அனைத்தும் நல்ல படியாக சந்திக்கப்படும் நல்ல நாள். அனைத்து விதங்களிலும் உங்களுக்கு வெற்றி உண்டு.
துலாம்-Thulam
இன்றைய தினத்தில் புதிய செலவுகள் உங்களைத் தேடி வரலாம். பணத்தை பார்த்து செலவு செய்ய வேண்டி இருக்கும் நாள். சிலருக்கு வேண்டாத இடமாற்றம் இருக்க வாய்ப்பு உண்டு. சூரியனின் சஞ்சாரத்தால் அரசு விவகாரங்களில் கருத்து சொல்வதை தவிர்க்கவும். ராஜ கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எனினும் முயற்சிக்கு தக்க பலன் இன்று உங்களுக்கு உண்டு. நாளின் முற்பகுதி நன்மையையும், பிற்பகுதி அலைச்சலையும் தரும்.
விருச்சிகம்-Viruchigam
இன்று எந்த ஒரு காரியத்தையும் சஞ்சல மனதுடனேயே செய்ய நேரிடலாம். சஞ்சலம் தீர ராம நாமத்தை உச்சரித்து வாருங்கள். அது இன்று உங்களுக்கு வெற்றியை தேடித் தரும். காரியங்களில் ஜெயத்தை தரும். வண்டி – வாகனங்களில் செல்லும் சமயத்தில் கூடுதல் கவனம் தேவை. நெருப்பு, ஆயுதம், வாகனம், இயந்திரம் போன்றவற்றுடன் பழகும் போது அஜாக்கிரதை வேண்டாம். வீடு, வாகனம் தொடர்பாக சிலருக்கு செலவுகள் ஏற்படலாம். பணம் கொடுக்கல் – வாங்கல் போன்ற விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை.
தனுசு-Thanusu
சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.
மகரம்-Magaram
இன்றைய தினத்தை பொறுத்தவரையில் செலவுகள் அதிகரிக்கும் தினம். எனினும் அனைத்தும் பெரும்பாலும் தேவையான செலவுகளாகத் தான் இருக்கும். சிலர் ஆபரணங்களை கூட வாங்கி மகிழ்வார்கள். இந்த நாள் ஒரு அற்புதமான நாளாக இருக்கும். அலைச்சல் இருந்தாலுமே கூட முயற்சிக்கு தக்க பலன் உண்டு.
கும்பம்-Kumabm
இன்று உங்கள் தேவைகள் பூர்த்தி ஆகும். பெரும்பாலும் தீமைகள் அகலும் நாள். முயற்சிக்கு தக்க பலன் கிடைக்காமல் போகாது. பண விஷயத்தில் மட்டும் கூடுதல் கவனத்தை எடுத்துக் கொண்டீர்கள் என்றால் இந்த நாள் ஒரு சிறப்பான நாளாக இருக்கும்.
மீனம்-Meenam
இன்று காலையில் சற்று மந்தமாக இருந்தாலும் பிற்பகுதியில் திடீர் பணவரவு உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும். முயற்சிக்கு தக்க நல்ல பலன் உங்களுக்கு கிடைக்கப் பெறும். மதியத்திற்கு மேல் அனைத்து விதத்திலும் உங்களுக்கு நன்மை உண்டு. மதியத்திற்கு மேல் அலைச்சல் இருந்தாலும் கூட சென்ற காரியம் வீண் ஆகாது. எனினும் காலை பொழுதில் நிதானம் தேவை.