Thursday, December 7, 2023

Rasi Palan Today-24.09.2021

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

Rasi Palan Today-24.09.2021

Rasi Palan Today

மேஷம்-Mesham 

குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நண்பர்களில் நல்லவர்கள் யார் என்பதை அறிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பணியிடத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர்.

ரிஷபம்-Rishabam 

மனதில் உற்சாகமும், செயல்களில் பரபரப்பும் காணப்படும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் யோசனையை வாழ்க்கைத் துணை ஏற்றுக் கொள்வார். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும், ஆடை, ஆபரண சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. நீண்டநாளாகத் தொடர்பில் இல்லாத நண்பர்கள் சிலரைத் தொடர்பு கொண்டு பேசுவார்கள். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் சென்றால் நன்மை உண்டு.

மிதுனம்-Mithunam 

புதிய முயற்சி சாதகமாக முடியும். காரிய அனுகூலம் உண்டாகும். உங்கள் முயற்சிகளுக்கு சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அரசாங்க அதிகாரிகளின் அறிமுகமும், அவர்களால் ஆதாயமும் ஏற்படக்கூடும். சிலருக்குப் பிள்ளைகளால் வீண் அலைச்சலும், செலவுகளும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். எனினும் சமாளித்து விடுவீர்கள். மொத்தத்தில் சோதனைகளைக் கடந்து சாதனை படைப்பீர்கள்.

Rasi Palan Today
ராசி பலன் 24.09.2021

கடகம்-Kadagam 

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். மனஉறுதியுடன் முடிவெடுத்து செயல்படுவீர்கள். சிலருக்குக் குடும்பத்துடன் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும் என்றாலும், உரிய சிகிச்சையினால் உடனே நிவாரணம் கிடைத்து விடும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்க சற்றே கூடுதல் முயற்சி எடுக்க வேண்டி இருக்கும். மொத்தத்தில் முயற்சியால் முன்னேறும் நாள். அலைச்சல் இருந்தாலுமே உங்களது முயற்சி வீண் போகாது. கவலை வேண்டாம்.

சிம்மம்-Simmam 

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடியும். வழக்கில் திருப்பம் ஏற்படும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோ கத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

கன்னி -Kanni

புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்குவது சாதகமாக முடியும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியக் குறைவு ஏற்பட்டு சரியாகும். உறவினர்களுடன் பேசும் போது வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறு மையைக் கடைப்பிடிக்கவும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத் தான் இருக்கும்.

துலாம்-Thulam 

இன்று பொறுமையும் சகிப்புத் தன்மையும் அதிகம் தேவைப்படும். சிலருக்குத் தாய் வழி ஆதரவு ஆறுதல் தரும். உறவினர்கள் வகையில் வீண் மனஸ்தாபம் ஏற்பட இடம் உண்டு. புதிய முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவை யான பணம் கிடைத்துவிடுவதால் சமாளித்து விடுவீர்கள். வியாபாரத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். கூட்டாளிகளை அதிகம் நம்ப வேண்டாம். உத்யோகஸ்தர்களுக்கு புதிய அனுபவங்கள் தரும் நாள்.

Rasi Palan Today
ராசி பலன் 24.09.2021

விருச்சிகம்-Viruchigam 

குடும்பத்தில் உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.

தனுசு-Thanusu 

தந்தைவழி உறவுகளால் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும். வாடிக்கையாளர்களிடம் கனிவான அணுகுமுறை அவசியம்.

மகரம்-Magaram 

உங்கள் பிடிவாத போக்கை கொஞ்சம் மாற்றி கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

கும்பம்-Kumabm 

குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்து வீர்கள். உங்களை சுற்றியிருப் பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்து பேசுவார்கள். கனவு நனவாகும் நாள்.

மீனம்-Meenam 

சிலருக்கு அவ்வப்போது மனதில் இனம்புரியாத பயம் – கவலை வந்து போகும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள் இந்நாள்.

ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …



- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular