Rasi Palan Today-07.08.2021

மேஷம்-Mesham
சுபநிகழ்ச்சிகளுக்காக செலவுகள் செய்வீர்கள். குடும்பத்தில் அமைதியும், குதுாகலமும் நிறைந்திருக்கும். அலுவலகத்தில் எதிர்பாராத விதமாக நீண்டநாள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். முன்னர் செய்த முயற்சிக்கு இப்போது பலன் கிடைக்கும்.
ரிஷபம்-Rishabam
புதிய முயற்சி அலைச்சல் கொடுத்தாலுமே, இறுதியில் சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாலையில் வாழ்க்கைத் துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். உறவினர்களின் பேச்சு உற்சாகம் தருவதாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
மிதுனம்-Mithunam
மனதில் ஒருவித இனம் புரியாத பயம் வந்து போகலாம். கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து போகலாம். உடல் நலம் சிலருக்கு சிறிய அளவில் பாதிக்கப்படலாம். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயங்கள் ஏற்படலாம். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கத் தாமதம் ஆகலாம். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.
கடகம்-Kadagam
உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.
சிம்மம்-Simmam
மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. வீடு, வாகனம் தொடர்பாக செலவுகள் ஏற்படலாம். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. மகிழ்ச்சியுடன் காணப்படும் நாள்.
கன்னி -Kanni
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பழைய பிரச்னைகளைப் பேசி சுமூகமான முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.
துலாம்-Thulam
உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும் வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
விருச்சிகம்-Viruchigam
கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. முக்கிய கோப்புகளை அலட்சி யமாக கையாள வேண்டாம். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். நிதானம் தேவைப்படும் நாள்.
தனுசு-Thanusu
முன்கோபத்தை குறையுங்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர்கள். தடைப்பட்டவேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். பொறுமை தேவைப் படும் நாள்.
மகரம்-Magaram
சிலர் குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். கல்யாண முயற்சிகள் சிலருக்குப் பலிதமாகலாம். வியாபாரத்தை சிலர் பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சிலர் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். இன்னும் சிலருக்கு அலுவலகத்தில் செல்வாக்கு உயரும். இனிமையான நாள்.
கும்பம்-Kumabm
சிலர் குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். கல்யாண முயற்சிகள் சிலருக்குப் பலிதமாகலாம். வியாபாரத்தை சிலர் பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சிலர் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். இன்னும் சிலருக்கு அலுவலகத்தில் செல்வாக்கு உயரும். இனிமையான நாள்.
மீனம்-Meenam
இன்று மற்றவர்களுடன் இருந்த பகை நீங்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். பணம் வரும் வாய்ப்பு உள்ளது. எதிர்த்து செயல்பட்டவர்கள் ஒதுங்கி விடுவார்கள். நீண்ட நாள் கஷ்டங்கள் நீங்கும். பல விதத்திலும் நன்மை செய்யும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். புத்தி கூர்மையுடன் செயல்படுவீர்கள். தைரியம் உண்டாகும்.