இன்றைய ராசி பலன்- 28.7.2021
மேஷம்
இன்று துணிச்சலாக எதையும் செய்து முடித்து காரிய வெற்றி அடைவீர்கள் . மற்றவர்கள் நலனை அக்கறையுடன் கவனிப்பீர்கள். செலவுகள் அதிகரிக்கும். வீண் அலைச்சல் உண்டாகும். கவனம் தேவை. எதிலும் அவசரப்படாமல் புத்திகூர்மையுடன் செயல்படுவது எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவும். எனினும், எதிர்ப்புகள் இறுதியில் அகலும்.
ரிஷபம்
இன்று பிள்ளைகள் மூலம் பெருமை ஏற்படும். உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் உண்டாகும். திருமணம் தொடர்பான பேச்சுகள் சாதகமாக முடியும். வீடு, வாகனம் வாங்குவது அல்லது புதுப்பிப்பதில் நாட்டம் அதிகரிக்கும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிப்பீர்கள்.
மிதுனம்
இன்று எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும் என்றாலும், அதனால் மகிழ்ச்சியே ஏற்படும். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியம் அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.
கடகம்
அலுவலகப் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது. குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. மாணவர்கள் கவனக் குறைவினால் ஏமாற்றத்துக்கு ஆளாக நேரிடும். பெண்களுக்கு பொறுப்பு அதிகரிக்கும்.
சிம்மம்
விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் குறையும். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்
கன்னி
இன்றைய தினத்தில் புதிய செலவுகள் உங்களைத் தேடி வரலாம். பணத்தை பார்த்து செலவு செய்ய வேண்டி இருக்கும் நாள். சிலருக்கு வேண்டாத இடமாற்றம் இருக்க வாய்ப்பு உண்டு. சூரியனின் சஞ்சாரத்தால் அரசு விவகாரங்களில் கருத்து சொல்வதை தவிர்க்கவும். ராஜ கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எனினும் முயற்சிக்கு தக்க பலன் இன்று உங்களுக்கு உண்டு. நாளின் முற்பகுதி நன்மையையும், பிற்பகுதி அலைச்சலையும் தரும்.
துலாம்
திடீர் செலவுகள் ஏற்படும். தேவையான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும்.
விருச்சிகம்
தாய்வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிகளுக்கு ஒத்துழைப்புத் தருவார். அவர் மூலம் உங்களுக்குத் தேவையான உதவிகளும் கிடைக்கும். தந்தையுடனும் தந்தைவழி உறவினர்களுடனும் வீண் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். அரசுப்பணியில் இருப்பவர்கள் அதிகாரிகளிடம் பேசும்போது பதற்றம் தவிர்ப்பது அவசியம். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.
தனுசு
தாமதமான செயல்கள் நடைபெறுவதற்கான சூழல் காணப்படுகிறது. மாணவர்கள் விளையாட்டில் அதிக ஆர்வம் கொள்வர். வாகன வகையில் சிறிய செலவினங்கள் ஏற்படலாம். பெண்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற வாய்ப்பு உண்டு. வருமானம் ஓரளவே திருப்தி தரும். மொத்தத்தில், அலைச்சல் இருந்தாலும் கூட உங்களது முயற்சி வீண் போகாது.
மகரம்
இன்று பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக முக்கிய பணிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. எடுத்த காரியம் தடைபட்டு பின்னர் நல்லபடியாக நடந்து முடியும். மனதில் எதை பற்றியாவது சிந்தித்த வண்ணம் இருப்பீர்கள்.
கும்பம்
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசு வார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.
மீனம்
புதிய முயற்சி சாதகமாக முடியும். காரியங்கள் அனுகூலமாக முடியும். உங்கள் முயற்சிக்கு சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு வீண் அலைச்சலும், செலவுகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். எனினும் சமாளித்து விடுவீர்கள்.
பஞ்சாங்க குறிப்புகள் மற்றும் கிரக நிலைகள் -28.7.2021

தமிழ் தேதி /கிழமை/வருடம் | ஆடி -12/புதன் /5123 பிலவ |
ஆங்கில நாள் | 28.7.2021 |
இன்றய சிறப்பு | உலக இயற்க்கை வளம் பாதுகாப்பு தினம் |
சூரியன் உதயம் | 05.53AM |
சூரியன் அஸ்தமனம் | 06.37PM |
ராகு காலம் | 12.15-13.50 |
நாள் | கீழ் நோக்கு நாள் |
குறிப்புகள் | புதிய முயற்சிகளை தவிர்க்கவும் |
எம கண்டம் | 07.28-09.04 |
நல்ல நேரம் | காலை 7.45-8.45 |மாலை 4.45-5.45 |
திதி | பஞ்சமி |
நட்சத்திரம் | பூரட்டாதி |
சந்திராஷ்டமம் | சிம்ம ராசி |
யோகம் | அதிகந்த |
சூலம் | வடக்கு |
பரிகாரம் | பால் |