Rasi Palan Today-18.08.2021

மேஷம்-Mesham
மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்துச் செல்லும். பிள்ளைகளிடம் பரிவாகப் பேசுங்கள். சிலருக்கு வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். சிலருக்கு வீடு சம்மந்தமான செலவுகள் கூட ஏற்படலாம். பெண்களைப் பொறுத்தவரையில், அடிக்கடி உடல் அசதி, சோர்வு வந்து நீங்கலாம். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.
ரிஷபம்-Rishabam
உணர்ச்சிவசப்படாமல் இருங்கள். பணப்பற்றாக் குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வாகன பழுது உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.
குடமுருட்டி சீத்தலா தேவி அம்மன்
மிதுனம்-Mithunam
ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்கக் கூடும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. அரசு காரியங்கள் சற்றே சிலருக்கு இழுபறியாகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். எனினும், மேலதிகாரி ஆதரவு உண்டு. மொத்தத்தில், போராடி வெல்லும் நாள்.
கடகம்-Kadagam
பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
சிம்மம்-Simmam
துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள். சிலருக்குப் பூர்வீக சொத்து பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். சிலர் புது ஏஜென்சி கூட எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அலைச்சல் தந்தாலுமே இறுதியில் வெற்றி பெறும் நாள்.
கன்னி -Kanni
கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். சிலரைப் பொறுத்தவரையில், வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். சிலருக்கு ஆக்கபூர்வமான புதிய எண்ணங்கள் பிறக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்க இடம் உண்டு. வியாபாரத்தில் புதிய சரக்குகளை சிலர் கொள்முதல் செய்யலாம். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உற்சாகமான நாள்.
துலாம்-Thulam
பழைய நினைவுகளில் மூழ்கி வீட்டில் தடைப்பட்ட வேலையைமாறுபட்ட அணுகுமுறையால் முடித்து காட்டுவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் வெளிப்படையாக பேசுவது கூட தவறு என்பதை உணர்வீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.
விருச்சிகம்-Viruchigam
சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடுகளைக்கட்டும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
தனுசு-Thanusu
எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. மற்றவர்களால் மறைமுகத் தொல்லைகளும், விமர்சனங்களும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்படும் என்றாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. நண்பர்களுக்காக செலவு செய்ய வேண்டி வரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும்.
மகரம்-Magaram
எதிர்காலம் பற்றி கவலைவந்து போகும். உறவினர்கள் நண்பர்கள் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். உணவில் காரம், வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. திடீர் பயணங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.
கும்பம்-Kumabm
கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.
மீனம்-Meenam
இன்று மன சஞ்சலம் ஏற்படும். பேச்சில் நிதானம் தேவை. வீண் விமர்சனங்களை பொருட்படுத்த வேண்டாம். கோபத்தைக் குறைத்து நிதானத்தால் வெல்ல வேண்டிய நாள். சிலருக்கு வீண் செலவும் இருக்கும். குடும்பத்தாரிடம் பிடிவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் தென்படும். மொத்தத்தில் நாளின் இறுதியில், சோதனையை சாதனை ஆக்குவீர்கள்.