Thursday, September 28, 2023
Homeஇன்றைய ராசி பலன்இன்றைய ராசி பலன்கள்-வியாழக்கிழமை,மே 26,2022

இன்றைய ராசி பலன்கள்-வியாழக்கிழமை,மே 26,2022

ASTRO SIVA

google news astrosiva

இன்றைய ராசி பலன்கள்
மேஷம்

தந்தை வழியில் எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாலையில் உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உள்ளது. நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வியாபா ரத்தில் பங்குதாரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

ரிஷபம் 

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பி தருவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். நன்மை நடக்கும் நாள்.

மிதுனம் 

பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் தைரியமாக முடிவுகள் எடுப்பீர்கள். நன்மை கிட்டும் நாள்.

கடகம் 

சமயோசிதமாகவும் சாதுரியமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர் நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும் வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.அமோகமான நாள்.

சிம்மம் 

இனந்தெரியாத சின்னச் சின்ன கவலைகள் வந்து போகும். உறவினர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

கன்னி 

பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.

துலாம் 

புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். யோகா தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.

விருச்சிகம் 

எதிர்ப்புகள் அடங்கும். பழைய நண்பரை சந்திப்பீர்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். வியாபாரத்தில் கமிஷன் புரோக்கரேஜ் வகையால் லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதரவு கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.

தனுசு

கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

மகரம் 

குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். விருந்தினர் வருகை உண்டு. வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். புகழ், கௌரவம் கூடும் நாள்.

கும்பம் 

திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையைமாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மீனம் 

சோர்வு நீங்கி ,உற்சாகமடைவீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். சிந்தனைத்திறன் பெருகும் நாள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular