Friday, July 26, 2024
Homeதசா புத்தி பலன்கள்சூரிய தசா பலன்கள்

சூரிய தசா பலன்கள்

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

சூரிய தசா பலன்கள்

நவக்கிரகங்களில் தலைவனாக விளங்கக் கூடியது சூரியன். இவர் தனது தசா காலத்தில் 3, 6, 10, 11 ஆகிய ஸ்தானங்களில் ஜனன ஜாதகத்தில் அமையப் பெற்றாலும், ஆட்சி அல்லது உச்சம் பெற்று அமைந்திருந்தாலும், நல்ல அதிகார பதவியினை அடையும் யோகம் உண்டாகும்.

சூரிய தசா(Suriya Dasa ) வானது மொத்தம் 6 வருடங்கள் நடைபெறும். நவகிரகங்களின் தசா காலங்களிலேயே சூரிய தசா காலம் மட்டும் தான் மிகக்குறுகிய காலமாகும்.

சூரியன் பலம் பெற்று பலமான இடத்தில் அமைந்து தசா (Suriya Dasa ) நடைபெற்றால் சமுதாயத்தில் மற்றவர்களால் பாராட்டப் படக் கூடிய அளவிற்கு ஒரு நல்ல நிலையையும் பல பெரிய மனிதர்களின் தொடர்பும், பொருளாதாரரீதியாக மேன்மைகளும், பல்வேறு சமுதாய நலப் பணிகளில் ஈடுபடக் கூடிய யோகமும் உண்டாகும்.

பலம் பெறுவது மட்டுமின்றி தனக்கு நட்பு கிரகங்களான சந்திரன், செவ்வாய், குரு போன்றவர்களின் சேர்க்கை பெற்றிருப்பதும், அக்கிரகங்களின் வீடுகளில் இருப்பதும், அக்கிரகங்களின் சாரம் பெற்றிருப்பதும் சிறப்பான பலனை உண்டாக்கும்.

சூரிய தசா பலன்கள்

சூரியன் சிம்மத்தில் ஆட்சியும், மேஷத்தில் உச்சமும், துலாத்தில் நீசமும் பெறும். சூரியன் துலாத்தில் நீசம் பெறுவதும், மகரம், கும்பம் போன்ற சனியின் வீடுகளில் அமையப் பெறுவதும், 8, 12 ஆகிய வீடுகளில் அமையப் பெறுவதும், சனி ராகு போன்ற கிரகங்களின் சேர்க்கை மற்றும் சாரம் பெறுவதும் நல்லதல்ல.

சூரியனுக்கு அருகில் அமையப்பெறும் கிரகங்கள் அஸ்தங்கம் அடைந்து பலம் இழந்து விடுகின்றன. ஆனால் சூரியனையே பலமிழக்க வைக்க கூடிய தன்மை ராகுவுக்கு மட்டுமே உண்டு. மேற்கூறியவாறு ராகு சேர்க்கை பெற்று சூரிய தசா நடைபெறுமேயானால் உடலில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்பு, கண்களில் பாதிப்பு, இருதய சம்பந்தப்பட்ட பாதிப்பு, தந்தை, வயதில் மூத்த அண்ணன் மற்றும் உயர் அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடு, அரசாங்க வழியில் பிரச்சனைகளை சந்திக்கக் கூடிய சூழ்நிலை போன்றவை உண்டாகும்.

சூரியன் தந்தை, ஆத்மா, பல், வைத்தியம், ஒற்றைத்தலைவலி, மாணிக்கம், பக்கவாதம், யானை, கோதுமை, பால், மிளகு, வெளிச்சம், சிவவழிபாடு போன்றவற்றிற்கு காரகன். சூரியன் நட்சத்திரங்கள் கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகியவை. இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக சூரிய திசை வரும்.

ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் பலமாக அமையப் பெற்று குழந்தை பருவத்தில் சூரிய தசா நடைபெறுமேயானால் குழந்தையின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குழந்தையின் தந்தைக்கு உயர்வுகள் உண்டாகும்.

இளமை பருவத்தில் (Suriya Dasa ) நடைபெற்றால் கல்வியில் மேன்மை, பெரியோர்களின் ஆசிர்வாதம், நோயற்ற வாழ்க்கை, தந்தைக்கு மேன்மை உண்டாகும்.

மத்திம வயதில் நடைபெற்றால் நல்ல ஆரோக்கியம், அரசு சார்ந்த துறைகளில் உயர் பதவி, அறிவாற்றல், பேச்சாற்றல், எதிலும் சுறுசுறுப்பாக ஈடுபடும் அமைப்பு உண்டாகும்.

முதுமை பருவத்தில் (Suriya Dasa ) நடைபெற்றால் சிறப்பான உடல் அமைப்பு, கௌரவமான பதவிகளை வகிக்கும் யோகம், பொருளாதாரரீதியாக உயர்வுகள், சமுதாயத்தில் புகழ், பெயர், கௌரவம் உயரக்கூடிய வாய்ப்பு கொடுக்கும்.

சூரிய தசா பலன்கள்

சூரியன் பலவீனமாக இருந்து குழந்தைப்பருவத்தில் சூரிய தசா (Suriya Dasa ) நடைபெற்றால் காய்ச்சல், தோல் வியாதி, தந்தைக்கு கண்டம் ஏற்படும்.

இளம் பருவத்தில் நடைபெற்றால் கல்வியில் மந்த நிலை, தந்தையிடம் கருத்து வேறுபாடு உண்டாகும்.

மத்திம பருவத்தில் நடைபெற்றால் சோம்பேறித்தனம், அரசு வழியில் பிரச்சனை, நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படும்.

முதுமை பருவத்தில் (Suriya Dasa ) நடைபெற்றால் இருதய கோளாறு, கண்களில் பாதிப்பு, பொருளாதார நெருக்கடி உண்டாகும்.

சூரியன் 12 ராசிகளில் அமைந்து தசா நடைபெற்றால் ஏற்படும் பலன்கள்:

  • ஜனன காலத்தில் சூரியன் ஜென்ம லக்னத்தில் அமையப் பெற்று தசா நடைபெற்றால் உஷ்ணம் சம்பந்தப்பட்ட உடல்நிலை பாதிப்பு இருக்கும், இடமாற்றம் ஏற்படும்.
  • சூரியன் 2-ல் இருந்து தசா நடைபெற்றால் தேக நிலையில் பாதிப்பு, பணவிரயம், மனைவி புத்திரர்கள் உடன் கருத்து வேறுபாடு, அதிக முன்கோபம், கடினமான வார்த்தைகளை பேசும் சுபாவம், கடன்கள் போன்றவை உண்டாகும்.
  • சூரியன் 3-ல் இருந்து தசா நடைபெற்றால் எதிலும் தைரியத்துடன் செயல்படும் அமைப்பு, நல்ல உடல் ஆரோக்கியம், அரசாங்கம் மூலம் அனுகூலம், உடன்பிறப்புகள் உடன் மனக்கசப்பும் ஏற்படும்.
  • சூரியன் 4-ல் இருந்து தசா நடைபெற்றால் தெய்வ காரியங்கள், புண்ணிய காரியங்களில் அதிக ஈடுபாடு, நவீன ஆடை ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும்.
  • சூரியன் 5-ல் இருந்து தசா நடைபெற்றால் மனதில் தேவையற்ற சஞ்சலங்கள், புத்தி தடுமாற்றம், புத்திரர் மற்றும் தந்தைவழியில் மனக்கவலை உண்டாகும். என்றாலும் குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் நடைபெறும்.
  • சூரியன் 6-ல் இருந்து தசா நடைபெற்றால் சில உஷ்ண சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டானாலும் எல்லா வகையிலும் வெற்றிகள் கிட்டும். பணம் பலவகையிலும் சேரும். எதிரிகள் மறைவார்கள். புதிய வாய்ப்புகள் தேடிவரும். எடுக்கும் முயற்சிகள் படிப்படியாக வெற்றி தரும்.
சூரிய தசா பலன்கள்
  • சூரியன் 7-ல் இருந்து தசா நடைபெற்றால் அடிக்கடி வெளியூர் பயணங்கள் செல்லும் வாய்ப்பு உண்டாகும். மனைவிக்கு நோய், கருத்து வேறுபாடு, வீண் விரயங்கள், பண நஷ்டம், நெருங்கியவர்களிடையே பகை உண்டாகும்.
  • சூரியன் 8-ல் இருந்து தசா நடைபெற்றால் உடல் நிலையில் பாதிப்பு, கண்களில் பாதிப்பு, மூலநோய், உஷ்ண நோய், தோல் வியாதி, விஷ ஜுரம் யாவும் உண்டாகும்.
  • சூரியன் 9-ல் இருந்து தசா நடைபெற்றால் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். அதிகமான பணவரவு, எதிலும் லாபம், தெய்வபக்தி, வழக்குகளில் வெற்றி உண்டாகும்.
  • சூரியன் 10-ல் இருந்து தசா நடைபெற்றால் உத்தியோகத்தில் உயர்வு, அரசாங்கம் மூலம் லாபம், தொழில் வியாபாரத்தில் மேன்மைகள் உண்டாகும்.
  • சூரியன் 11-ல் இருந்து தசா நடைபெற்றால் உத்தியோகத்தில் பதவி உயர்வு, பூமி, வீடு, வண்டி வாகன யோகம், தந்தை, மனைவி மற்றும் புத்திர வழியில் அனுகூலம் உண்டாகும்.
  • சூரியன் 12ல் இருந்து தசா நடைபெற்றால் மனதில் சஞ்சலம், பணவிரயம், தூக்கமின்மை, சகோதரர்களிடம் பகை, தந்தை வழியில் துக்கம்,இடம் விட்டு இடம் மாறும் நிலை, பயம் உண்டாகும்.

ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …



ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்104ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular