Rasi Palan Today-21.08.2021

மேஷம்-Mesham
நல்லோரின் நட்பை பெற்று மகிழ்வீர்கள். எதிர்காலத் திட்டம் குறித்து ஆலோசிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் மறைமுகப் போட்டி குறையும். பணவரவு அதிகரிக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். பெரும்பாலும் நல்லதே நடக்கும். அதனால் கவலை வேண்டாம்.
ரிஷபம்-Rishabam
மனதில் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவு ஆறுதல் தரும். தொழில், வியாபாத்தில் லாபம் அதிகரிக்கும். வழக்கு, விவகாரத்தில் போராடி வெல்வீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.
மிதுனம்-Mithunam
குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். பணப் பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
கடகம்-Kadagam
இன்று சந்திரனின் சஞ்சாரம் அலைச்சலை தரக்கூடும். வரவை விட செலவு அதிகமாக இருக்கும். எனினும் குரு பார்வை உங்களுக்கு நன்மையை செய்யும். சிலர் சொத்துக்களை பராமரிக்கும் பொருட்டு செலவுகளை செய்யலாம். வாழ்க்கை துணையை அதிகம் அனுசரித்து செல்ல வேண்டிய நாள். வியாபாரிகள் மற்றும் சொந்தத் தொழில் செய்பவர்கள் வருமானத்தை உயர்த்தவும், செலவுகளை குறைக்கவும் பாடு படும் நாளாக இந்நாள் இருக்கும். எனினும் பொறுமையுடன் செயல் பட்டால் இன்று உங்களுக்கு வெற்றி நிச்சயம்.
சிம்மம்-Simmam
மனம் பக்குவம் அடையும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுக்க இடம் உண்டு. கணவன் – மனைவிக்கிடையே பிரச்சனையை பேசித் தீர்க்க முயலுவீர்கள். வாழ்க்கைத் துணை வழி உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். சிலரது உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத் துணை ஆதரவாக இருப்பார். சிலரது ஆலோசனை உறவினர்களால் பாராட்டப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் ஓரளவு ஆறுதல் தரும். பல வித புதிய அனுபவங்களை உள்ளடக்கிய நாள்.
கன்னி -Kanni
திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வேற்று மதத்தவர்கள் உதவிகிடைக்கும். வியாபாரத்தில் கமிஷன் ஸ்டேஷனரிவகைகளால் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். இனிமையான நாள்.
துலாம்-Thulam
கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அழகும் இளமையும் கூடும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். ஆடை ஆபரணம் சேரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். மகிழ்ச்சியான நாள்.
விருச்சிகம்-Viruchigam
தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாலையில் குடும்பத்துடன் தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.
தனுசு-Thanusu
இன்று லாபம் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறன் அதிகரிக்கும். மேல் அதிகாரிகளின் பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக் கிடையே ஒற்றுமை உண்டாகும்.
மகரம்-Magaram
நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். பிள்ளைகளின் பொறுப்புணர்வை பாராட்டுவீர்கள். சிலருக்கு காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் சிலருக்குக் கிடைக்கும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். சிறப்பான நாள்.
கும்பம்-Kumabm
பணப்புழக்கம் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். தொலைதூரத்திலிருந்து நீண்ட நாள்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் சிலருக்கு இன்று வந்து சேரும். கணவன் – மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையவும் இடம் உண்டு. முடிந்த வரையில் பிறருக்கு கடன் கொடுப்பதை தவிர்க்கவும்.
மீனம்-Meenam
புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். சிலர் பிள்ளைகளின் தனித் திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை சிலர் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைக்க இடம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். கனவு நனவாகும் நாள்.