ராசி | பலன் |
மேஷம்  | பழைய தவறுகளை நினைத்து வருந்த நேரிடலாம். உத்யோகத்தில் மகிழ்ச்சியும், வெற்றியும் காண்பீர்கள். வெளிநாட்டில் உள்ள பிள்ளைகளால் நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரத்தில் சில விஷயங்களைச் சீர் செய்து லாபத்தை பெருக்க முயல்வீர்கள் |
ரிஷபம்  | உங்கள் பிடிவாத போக்கை கொஞ்சம் மாற்றி கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள். |
மிதுனம்  | குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள். |
கடகம்  | கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்பட இடம் உண்டு. வர வேண்டிய பணத்தை சிலர் போராடி வசூலிப்பீர்கள். தொழிலில் ஓரளவு லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் இறுதியில் பூர்த்தியாகும் நாள் |
சிம்மம்  | கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அழகும் இளமையும் கூடும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். ஆடை ஆபரணம் சேரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். மகிழ்ச்சியான நாள். |
கன்னி  | எதிர்பாராத செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆனாலும், தேவையான பணம் கையில் இருப்பதால், சமாளித்துவிடுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்கவும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். அலைச்சல் அதிகம் காணப்பட்டாலும் உங்களது முயற்சி வீண் போகாது. |
துலாம்  | கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் விஐபிகள்வாடிக்கையாளர்களாவார்கள். உத்தியோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிந்தனை திறன் பெருகும் நாள்.
|
விருச்சிகம்  | மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கியமான முடிவு ஒன்றை துணிச்சலுடன் எடுப்பீர்கள். வீட்டில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும். சகோதர வகையில் எதிர் பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். லாபம் அதிகரிக்கும். |
தனுசு | கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டு விட்டோமே என்றெல்லாம் வருந்துவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறு வீர்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். எதிர்ப்புகள் அதிகரிக்கும் நாள். |
மகரம் | பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். |
கும்பம் | துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள். சிலருக்குப் பூர்வீக சொத்து பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். சிலர் புது ஏஜென்சி கூட எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அலைச்சல் தந்தாலுமே இறுதியில் வெற்றி பெறும் நாள். |
மீனம் | கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். சிலரைப் பொறுத்தவரையில், வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். சிலருக்கு ஆக்கபூர்வமான புதிய எண்ணங்கள் பிறக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்க இடம் உண்டு. வியாபாரத்தில் புதிய சரக்குகளை சிலர் கொள்முதல் செய்யலாம். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உற்சாகமான நாள். |