Rasi Palan Today-22.08.2021

மேஷம்-Mesham
இன்று முற்பகுதி நலம் தரும். வண்டி, வாகனங்களில் செல்லும் சமயத்தில் நிதானம் தேவை. சிலருக்கு மருத்துவ செலவுகள் ஏற்பட கிரகங்கள் காரணமாக இருக்கிறது. மதியத்திற்கு மேல் புதிய முயற்சிகள் செய்ய வேண்டாம். அலைச்சல் அதிகமாக இருக்கும். மதியத்திற்கு மேல் நிதானமாக செயல்பட்டு வெற்றி அடைய வேண்டிய நாள்… இந்நாள்.
ரிஷபம்-Rishabam
இன்று தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். வாடிக்கையாளர்களிடம் கோபமான வார்த்தைகளை பேசாமல் சாந்தமாக உரையாடுவது வியாபார விருத்திக்கு வழி செய்யும். பணவரத்து திருப்தியாக இருக்கும். செலவும் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சக ஊழியர்களுடன் கடுமையாக பேசாமல் நிதானத்தை கடைபிடிக்கவும்.
மிதுனம்-Mithunam
எந்த காரியத்தை தொட் டாலும் இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். யாருக்கும் பணம் நகை வாங்கி தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாகபேசுங்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம்செலுத்துவது நல்லது. பொறுமைத் தேவைப் படும் நாள்.
கடகம்-Kadagam
விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் குறையும். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்
சிம்மம்-Simmam
துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்களுடனான பிரச்சனையை சிலர் பேசித் தீர்த்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து போராடி வெல்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தைரியம் கூடும் நாள்.
கன்னி -Kanni
சொன்ன சொல்லை காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும்.வியாபாரத்தில் பழைய வேலை யாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
துலாம்-Thulam
குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பூர்வீக சொத்து பிரச் னைக்கு தீர்வு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.
விருச்சிகம்-Viruchigam
தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். வெளியில் செல்ல நேரிட்டால் நன்றாக திட்டமிட்டுக்கொண்டு கவனமாக செல்லவும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருந்தாலும், பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். எனினும், சமாளித்து விடுவீர்கள்.
தனுசு-Thanusu
இன்று பிள்ளைகள் மூலம் பெருமை ஏற்படும். உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் உண்டாகும். திருமணம் தொடர்பான பேச்சுகள் சாதகமாக முடியும். வீடு, வாகனம் வாங்குவது அல்லது புதுப்பிப்பதில் நாட்டம் அதிகரிக்கும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிப்பீர்கள்.
மகரம்-Magaram
பேச்சு, செயலில் விவேகம் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய வளர்ச்சி காண்பீர்கள். லாபம் ஆறுதல் தரும். சிலர் குடும்பத்தில், சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். பெண்கள் பிள்ளைகளின் நற்செயல் கண்டு மகிழ்வர். ஆடை, ஆபரணம் சேரும்.
கும்பம்-Kumabm
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கியமான முடிவு ஒன்றை துணிச்சலுடன் எடுப்பீர்கள். வீட்டில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும். சகோதர வகையில் எதிர் பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். லாபம் அதிகரிக்கும்.
மீனம்-Meenam
மனதில் இனம் தெரியாத உற்சாகம் பெருக்கெடுக்கும். ஆனால், புதிய முயற்சி எதையும் இன்று தொடங்க வேண்டாம். திடீர் செலவுகளால் கையிருப்பு கரைவதுடன் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். வாழ்க்கைத் துணை வழி உறவுகளால் சிறு சிறு சங்கடங்கள் ஏற்படக் கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் லாபம் கிடைத்தாலும் செலவுகளும் அதிகரிக்கும்.