Rasi Palan Today-09.09.2021

மேஷம்-Mesham
எதிர்ப்புகள் குறையும் நாள். புதிய முயற்சியில் ஈடுபடும் வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத் தொடர்பு பலம் பெறும். உபரி பண வருமானம் கிடைக்கும். கூடுதல் சொத்து வாங்க அனுகூலம் உண்டு. பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.
ரிஷபம்-Rishabam
எதிர்பார்த்த பணம் வந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளை மிகக் கவனமுடன் செய்யவும். தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் செலவுகள் அதிகரிப்பதால் மனதில் சஞ்சலம் ஏற்படக் கூடும். பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.
மிதுனம்-Mithunam
கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தேவையான பணம் கையில் இருப்பதால் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். சிலருக்குக் குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக்கூடும். வயிறு தொடர்பான உபாதைகள் ஏற்படக்கூடும் என்பதால், வெளியிடங்களில் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் அதிகாரிகளின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும்.
கடகம்-Kadagam
வெகுநாள் திட்டமிட்ட பணி எளிதாக நிறைவேறும். மனதில் புத்துணர்வும், நம்பிக்கையும் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். நிலுவைப் பணம் சிலருக்கு வசூலாகும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி வளரும்
சிம்மம்-Simmam
இன்று அதிக மனசஞ்சலம் ஏற்படும் நாள். தேவை இல்லாத எதிர்மறை எண்ணங்களை இன்றைய தினத்தில் தவிர்க்கப் பாருங்கள். குரு பார்வை உங்களுக்கு ஓரளவு சில நன்மைகளை செய்யும். வேலை பளு அதிகரிக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் பிறர் வேலையையும் சேர்த்து நீங்கள் பார்க்க வேண்டி வரலாம். எனினும் கவலை வேண்டாம் இந்த நிலை கூடிய விரைவில் மாறும். மற்றபடி குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்ல வேண்டிய நாள் இந்த நாள். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
கன்னி -Kanni
சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். எதிர்ப்புகள் அதிகரிக்கும் நாள். எனினும் அதை எல்லாம் சமாளித்து நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
துலாம்-Thulam
சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.
விருச்சிகம்-Viruchigam
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். அக்கம்- பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். புதுமை படைக்கும் நாள்.
தனுசு-Thanusu
வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். உறவினர், நண்பர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மறைமுக பிரச்னைகள் வந்துச் செல்லும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
மகரம்-Magaram
அனுகூலமான நாள். எடுத்த காரியங்கள் இனிதாக முடியும். தேவையான பணம் இருப்பதால் செலவுகளைச் சமாளித்து விடுவீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கைத் துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். சிலர் தாயின் தேவைகளை நிறைவேற்ற முயற்சி எடுப்பீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
கும்பம்-Kumabm
முன்கோபத்தை குறையுங்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர்கள். தடைப்பட்டவேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். பொறுமை தேவைப் படும் நாள்.
மீனம்-Meenam
வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அனுபவ அறிவால் முன்னேறும் நாள்.
ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …